சூரியன்

Print Friendly, PDF & Email
Guided Visualization Sun

சூரியன்

குழந்தைகளே நேராக உட்கார்ந்து மூச்சை உள்ளிழுத்து மெதுவாக மூச்சை வெளியே விடவும். உங்கள் கண்களை மூடுங்கள். நெருப்புக் கடவுளான சூரியனைப் பார்க்க நீங்கள் அனைவரும் ஒரு பயணத்திற்குச் செல்லத் தயாராகிவிட்டீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். சூரியன் என்பது ஒரு பெரிய உருண்டையான நெருப்பு பந்து. இதில் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்கள் உள்ளன. நாம் சூரியனுக்கு அருகில் செல்லும்போது வெப்பத்தை உணர்கிறோம். அதன் அருகில் செல்வது எளிதல்ல.

சூரியன் நமக்கு ஒளியையும் வெப்பத்தையும் தருகிறது. சூரியன் காலையில் எழுந்து மாலையில் அஸ்தமனம் செய்வதன் மூலம் ஒழுக்கத்தை கற்பிக்கிறது. பூமியில் வாழ்வது சூரியனால் மட்டுமே சாத்தியமாகும். தாவரங்கள் சூரிய ஒளியின் உதவியுடன் தங்கள் உணவை உருவாக்குகின்றன. சூரியன் பூமியில் உள்ள அனைவரையும் சமமாக நடத்துகிறது. அது தன்னலமற்றது மற்றும் எப்போதும் கொடுக்கும் ‌தன்மையைக் கொண்டது. நாமும் தன்னலமற்றவர்களாகவும் அன்புடனும் அக்கறையுடனும் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும்.

நீங்கள் அனைவரும் சூரியன் நகர்வதைப் பார்க்க ஆவலாக உள்ளீர்கள் ஆனால் சூரியனைச் சுற்றி வருவது பூமிதான். இப்போது அதே உற்சாகத்துடன் மீண்டும் உங்கள் இருக்கைகளுக்கு வந்து மெதுவாக கண்களைத் திறக்கவும்.

செயற்பாடு:

கற்பனையில் கண்ட காட்சியைக் குழந்தைகளை வரையச் சொல்லவும்.

[ஆதாரம் : Early Steps to Self Discovery Step – 2, Institute of Sathya Sai Education (India), Dharmakshetra, Mumbai.]மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: