உயர்மாற்ற வழிமுறை
உயர்மாற்ற வழிமுறை
இடையறாத ஒருங்கிணைந்த பேருணர்வு (Constant Integrated Awareness) மூலம் வெளி உலகத்தைக் கண்டு அதனுடன் பரஸ்பரத் தொடர்பு கொள்ளும் வழி முறைதான் உயர்மாற்றம் (Transformation) எனப்படுகிறது.
உதாரணமாக நமது சூழ்நிலை, கடந்த கால அனுபவங்கள், தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் இவற்றால் பாதிக்கப்பட்டு நமது மனம் அவற்றிற்கேற்றாற் போல பல வழிகளில் வேலை செய்கிறது. இதனால் ஏற்பட்ட எதிர்மறை மனப்பான்மை (Negativity) இப்போது நம் மனதில் நிறைந்திருக்கும், இதனை எடுத்து விட்டு, இதற்குப் பதிலாகப் புத்துணர்வு தரும் உடன்பாட்டு(Positive) எண்ணங்களை உள்ளே புகுத்த வேண்டும். முன்பிருந்தவற்றை விலக்கிப் புதிய எண்ணங்களைப் புகுத்தும் செயல் வகை மிகவும் அவசியம். இது செயல் முறையில் மிகவும் கடினமானது. இருந்தாலும் செய்தேயாக வேண்டும்.. அடி மனத்தில் உள்ளவற்றை வலுவூட்டும் முறையில் தான் மனம் செயற்படும். இயற்கையின் திட்டப்படி, தனது முன் அனுபவத்துக்கு எது விரோதமாக இருந்தாலும், அதனை விலக்குதலே மனதின் தன்மை. ஆகவே அதன் இப்போதைய பழக்க முறைகளை மாற்றவல்ல எந்த செய்கை(Input) களையும் மறுக்கிறது.
இருப்பினும் உயர் மாற்றம் பெற வேண்டுமெனில் மாற்றுச் செயல் திட்டத்தை (Re-programming) உருவாக்குவது மிகவும் அவசியம். U – முறையில் தலைகீழாக எவ்வாறு திரும்பி புதிய வகையில் செயல் புரிய இயலும்? மூலத்துக்கு (Source) த் திரும்பிச் செல்லும் பயணத்தை எப்போது தொடங்குவது? எவ்வாறு அனைத்தையும் மாற்றும் வழிமுறையைக் கையாளுவது? இந்த உயர்மாற்ற வழிமுறை, ஒரு நுட்பமான ஆனால் சிக்கலான கூட்டமைப்பால் செயல்பட முடியும். அது என்ன? 5D – என்பதன் கூட்டமைப்புதான் அது. Devotion (பக்தி) , Discrimination (விவேகம்), Determination (திடசங்கற்பம்), Discipline(ஒழுக்கக்கட்டுப்பாடு), Duty(கடமை).
தாம் அறிவுணர்வுடன் (Consciously) உட்பயணத்தைத் தொடங்கும் போது, உட்சுவாசம் வெளிசுவாசம் மூலம் காற்றினை பற்றிய (Air) உணர்வு ஏற்படுகிறது. தவிர, சீரான மூச்சு, காலப்பரிமாணம், ஆழ்ந்து மூச்சு விடுதல் இவற்றைக் கண்காணித்துச் சரி செய்வது முக்கியம் என்று உணர்கிறோம். இதற்கு பயிற்சி தேவை. நாம் சீரான, ஆழ்ந்த மூச்சு விடுதலைச் சீரமைப்பதற்குத் தகுந்த கட்டுப்பாட்டை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இத்தகைய சீரான மூச்சுக்கு, பஜனைப் பாடல்களைக் கூட்டமாகப் பாடுதலும் பிரார்த்தனைகளை உரக்கக் கூறுவதும் உதவி செய்யும். ஸோஹம் மந்திரத்தைப் பயிற்சி செய்வதால் இந்த மூச்சு விடுதல் சீர்ப்படும்.
ஒவ்வொரு கணமும் காற்றை சுவாசித்தலில் நாம் ஈடுபடுகிறோம். காற்றிலுள்ள பிராண வாயுவினால் (Oxygen) போஷிக்கப்படுகிறோம். 24 மணி நேரத்தில் மனிதன் 21600 தடவைகள் மூச்சிழுத்து வெளிவிடுகிறான். மூச்சை உள்ளே இழுக்கும் போது, ஸோ என்ற ஓலி உருவாகிறது. மூச்சை வெளிவிடும் போது ‘ஹம்’ என்ற ஒலி உருவாகிறது. இரண்டையும் சேர்த்தால் ஸோ-ஹம் ஆகிறது. அவனே நான் என்பது இதன் பொருள். இறைவனே நான் இவ்வாறு மனிதனின் அடிப்படையான தெய்வீகத் தன்மையை இது பறையறிவிக்கிறது.
– ஸ்ரீ சத்ய சாயி
மாறுதல் அவசியம் என்பதை உணர்ந்து கொள்ளுதலே முதற்படி. இத்தகைய மாற்றத்தின் நற்பயனில் முழு நம்பிக்கை கொள்ளுதல் மிகவும் அவசியம். தெய்வீகத்துடன் நாம் கொண்டுள்ள மூலத் தொடர்பினை மறுபடி கண்டுபிடித்தறிதல் மிக அவசியம். நாம் இறைவனின் பிரதிபலிப்பு என்பது நமது மனதில் மிக ஆழமாக பதியும் போது, நாம் மூலத்துக்குத் திரும்பிச் செல்ல இயலும். இவ்வாறு, உடல், மனம், என்ற சிறையில் அடைபட்டு தளர்வுடைய எதிர்மறைத் தீய சூழலிலிருந்து (Negative) விடுவித்துக் கொண்டு ஒரு திடீர்ப் பாய்ச்சல் (Quantum Jump) செய்கிறோம். பக்தியின் மூலம் பேருண்மை (ஸத்யம்) யின் இருப்பிடமான அதீத உணர்வுக்கு (Super conscious) நமது செயற்பாட்டு நிலையை உயர்த்திக் கொள்கிறோம்.
இத்தகைய நம்பிக்கைதான், நம்மை முதலில் நமது இறைவனிடம் – பாபாவிடம் கொண்டு சேர்த்தது. அளவற்ற அருள் பெய்து, பகவான் பாபா, நாம் விடுதலை பெறுவதற்கான வழியைத் தந்திருக்கிறார். கவனத்துடன் முதல் அடியை நாம் எடுத்து வைக்க வேண்டும். அடுத்த பத்து அடிகள் இயல்பாகவே இதன் விளைவாக நமக்கு வந்து சேரும் என்று பாபா உறுதி கூறுகிறார். உயர்மாற்ற வழிமுறை, காரண காரியத் தொடர்பினால் வருவது. நாம் என்ன விதைக்கிறோமோ அது உரிய காலத்தில் பெரும் விளைச்சலைத் தருகிறது. நாம் எதை நடுகிறோமோ அது வளர்கிறது. வளர்ந்த அப்பயிரைப் பெற, நமக்குத் தகுதி உண்டு. ஆகவே நல்ல எண்ணங்களை, மனமென்ற வளமண் நிறைந்த தோட்டத்தில் நாம் நட வேண்டும். நல்லவற்றைப் படித்தல், நல்லோர் இணக்கம், நல்ல சூழ்நிலை இவை நேர்வழியில் செல்வதற்கு மிகவும் அவசியமானவை.
நல்ல எண்ணங்கள் என்ற கூழாங்கற்களை மக்கள் மனதில் இட்டால், அதனால் ஏற்படும் அலைகள் அனைத்து புலன்களையும் சென்றடையும். அவை நல்ல சொற்களாக, நல்ல காட்சிகளாக, நல்ல செயல்களாக, நல்லவை கேட்பதாக அமைவுறும்.
– ஸ்ரீ சத்ய சாயி (21-05-2000)
திடநம்பிக்கை (Faith) தான் நம்மைச் செயல்படுவதற்கும் மனத்தூய்மை அடையப் பெறுவதற்கும் தூண்டுகிறது. புலன்கள் மூலமாகப் பயனுள்ள செயல்(Positive Inputs) களால், அடிமனம் காலக்கிரமத்தில் பயனுள்ள பதிவுகளால் நிரப்பப்படுகிறது. இந்த வழி, அழுக்குத் தண்ணீர் நிறைந்த ஒரு தம்ளரை நல்ல நீர் தரும் தண்ணீர் குழாய்க்குக் கீழ் வைப்பதைப் போன்றது. நாளடைவில் அழுக்குத் தண்ணீர் சிறிது சிறிதாக வெளியேறி தம்ளர் முழுவதிலும் நல்ல தண்ணீரே நிறையும். அந்நிலையில் நன்னடைத்தைக்கு நாம் முயற்சி செய்ய வேண்டியதில்லை. அதுவே நமது இயல்பாக ஆகிவிடும்.
இவ்வாறு விவேகம் (Discrimination) நமது புலன்கள் மூலம் பொருத்தமான செயல் (Input) களைத் தேர்ந்தெடுக்கப் பயன்படுகிறது. இந்த வழிமுறையில் நாம் ஆசைக்கு உச்ச வரம்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஐம்புலன்களில் கண்களுக்கு மிகுந்த ஆற்றல் தரப்பட்டிருக்கிறது. புனிதமற்ற காட்சிகள் மனிதனின் ஆயுளைக் குறைக்கின்றன. காண்பதை ஆதிக்கத்துக் கொண்டு வருவதுடன் கூட நாக்கினையும் நம் ஆதிக்கத்துக்குள் கொண்டு வர வேண்டும். தான் உண்பது எதுவோ அதன் சுவைக்கு மனிதன் அடிமையாகிறான். தனது நாவினால் புனிதமற்ற சொற்கள் கூறுகிறான். கடுமையான சொற்களால் பிறர் உணர்ச்சிகளைப் புண்படுத்துகிறான்.
– ஸ்ரீ சத்ய சாயி (06-05-2001)
திடசங்கற்பம் இல்லாது (Will power) எந்த மாறுதலும் நம் வாழ்க்கையில் நடைபெற இயலாது. மாறுதல் மிகவும் தேவையானது. அவசியமானது என்ற உணர்வு நிலைக்கு வரும் போதுதான், திடசங்கற்பம் செயற்பட தொடங்கும். இடைவிடாத செயல் மூலம், மன அலைச்சலைக் கட்டுபடுத்துவதற்கான திடவுறுதியை(Determination) வளர்த்துக் கொள்ள வேண்டும். அர்த்தமுள்ள செயல்கள் மூலம் இத்தகைய பயிற்சி பெற வேண்டும். “See good, be good, do good – நல்லதைப் பார், நல்லவனாக இரு, நல்லதைச் செய்” என்பதைக் கடைபிடிக்க சுயக்கட்டுப்பாடு (Self Discipline) மிகவும் தேவை. சுயக்கட்டுப்பாட்டைச் செலுத்துவதன் மூலம், மனதுக்குப் பயிற்சி கொடுத்து வளர்ப்பதற்கு ஒழுக்கக் கட்டுப்பாடு அவசியமாகிறது. அடிப்படை விவேகத்தைக் கொண்டு நாம் புரியும் தனிப்பட்ட செயல்களை வளர்த்து அவற்றை நிலையான சீரான செயல்களாக மாற்ற வேண்டும். இயல்பாகச் சிந்திக்காமல் கூட செயல்களை நற்பயன் தரக்கூடிய(Positive) வையாக மாற்றி, நற்பழக்கங்களை உருவாக்க வேண்டும்.
காலப்போக்கில்,மனிதமேம்பாடுகள் அறிவுணர்மனதிலும் அடிமனதிலும் நிலைபெற்றுவிடும். மனதில் ஒரு மோனநிலை உருவாகும். மனசாட்சியின் குரல் தெளிவாகவும் பலமாகவும் கேட்கும்.உயரிய ஆன்மாவான ஜீவசாட்சி அறிவுணர்(Conscious)மனதின் தீர்மானங்களை முடிவு செய்பவராக மாறி, சீரான நற்பயன் விளையும் செயல்களைத் தரும். மனதில் தூய்மை அடையப்பெறும்போது, எண்ணம், சொல், செயல் இவற்றில் ஒருமைத்தன்மை இருக்கும்.
இறைவன் நமக்குப் பலவகை ஆற்றல்கள் படைத்த மனிதஉடல், விவேகம், காற்று, தண்ணீர், சூரியவெளிச்சம் போன்ற இயல்பான வசதிகளைத் தந்திருக்கிறார். அவர் நமக்கு தந்ததையெல்லாம் நினைகூர்ந்து, அவற்றிற்காக இறைவனுக்கு நன்றி கூறுதலே உண்மையான பக்தி யாகும்.
சுருங்கக்கூறினால், உயர்மாற்றத்துக்கானவழிமுறை, நல்ல எண்ணங்களுடன் தொடங்குகிறது. அது நல்ல உணர்ச்சிகளுக்கு இட்டுச் செல்கிறது. நல்ல பழக்கங்கள் சீலமாக வடிவெடுக்கின்றன. அவை நன்னடத்தையை வற்புறுத்துகின்றன.
கடமை என்பது இறைவனுக்கு அன்புடன் செய்யும் சேவை. அது இறைவனுக்கு உடல் செய்யும் பிரார்த்தனை. மனிதஉடல், மனது இட்ட வேலையைச் செய்வதற்கான கருவி. அது பஞ்சபூதங்களிலிருந்து உருவாயிற்று. இந்த உடல் மனத்தைத் தூய்மைப்படுத்தவும் உலகத்தை சமநிலையில் வைக்கவும் சேவை புரியவேண்டும். இதுவே உடலின் இலட்சியமும் கடமையுமாகும். சுயநலமற்று சேவைப் பணிகளில் ஈடுபடுவதன் மூலம், நாம் இவ்வுடலுடன் மட்டுமே தன்னை இனஞ்சேர்த்துக் கொள்ளும் தவறான உணர்வைக் கடக்கிறோம்.
இவ்வாறு, நாம் உள்ளே ஒரு பயணத்தைத் துவக்கி, நமக்குள் இருக்கும் தெய்வீகத்தை உணர்கிறோம். நமது மனம் உட்புறமாக அதிகம் திரும்பும் போது, நாம் ஒவ்வொருவருடனும் நமது அன்பையும் அமைதியையும் பகிர்ந்து கொள்ளத் தொடங்குகிறோம். உலகம் முழுவதற்கும் சக்தியூட்டுவதற்குத் தகுந்த வலுவுள்ள உலக அதிர்வுகளை உருவாக்குவதற்கு இந்தப் பேரன்பு தகுதியுள்ளது. இவ்வாறு ஆன்மீகப் பரிணாமத்தில் உயர்ந்துசெல்லத் தொடங்குகிறோம். நமது திடசங்கற்பம் தெய்வீகத் திருவுள்ளத்துடன் ஐக்கியமாகிறது.
உயர்மாற்றம்அடையப்பெறும்போது, உன்னிடமிருந்து உனக்கே நீ பிரயாணம் செய்திருக்கிறாய் என்பதை அறிந்து கொள்வாய். அப்போது கடவுள் உன்னைச்சுற்றி, உன்னுடன், உன்னருகிலேயே எப்போதுமே, இருக்கிறார்.
– ஶ்ரீ சத்ய சாயி
மனித சமுதாயம் எங்கும் ஒரே மாதிரி உள்ளது. பாலவிகாஸ் குழந்தையோ, பள்ளிக்கூட மாணவனோ, இளைஞனோ, சாதாரண மனிதனோ, நம் நாட்டுப் பிரஜையோ, வெளிநாட்டுப் பிரஜையோ யாராயினும், அவருக்கு ஶ்ரீசத்யசாயி உயிரூட்டும் கல்வியின் இலட்சியம் ஒன்றே. உலகில் மாங்கொட்டை விதையினை எங்கு நட்டாலும், அது மாம்பழங்கள் மட்டுமே தரும். சூழ்நிலை அம்சங்கள் பழம் பழுத்திருக்கிறதா இல்லையா என்பதைத்தான் நிர்ணயிக்கும். சமூக, கலாச்சாரப் பிண்ணனிகள் பாடத்திட்டத்தில் மாறுதலை ஏற்படுத்தலாம். குழந்தைகள், பாடத்திட்டத்தில் மாறுதலை ஏற்படுத்தலாம். குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் இவர்களுக்குத் தகுந்தாற் போல அணுகு முறை மாறலாம். கொடுக்கப்பட்டஉதாரணங்கள் மாறுபடலாம். ஆனால் முடிவான இலட்சியம் ஒன்றேதான்.
சத்யஸாயிஉயிரூட்டும்கல்வி, உலகில் எங்கும் ஏற்றுக் கொள்ளத் தக்கது. அனைத்து ஆன்மீக அறிவுக்கும் சிகரமானது. 21-ம் நூற்றாண்டின் வேதம் எனக் கூறப்படுகிறது.
- உயர்மாற்றம் என்பது மூலத்துக்குத் திரும்பச் செல்லும் பயணம்.
- உயர்மாற்றம் வழிமுறையின் தொடக்கமே, திடநம்பிக்கைதான்.
- உயர்மாற்றவழி முறையில் வளர்க்கவேண்டிய மேம்பாட்டுவளங்கள், பக்தி (Devotion) கடமை (Duty), (Discipline). ஒழுக்கக்கட்டுப்பாடு, (Discrimination) விவேகம் (Determination) மனஉறுதி.
உயர்மாற்றத்துக்குக் கடைப்பிடிக்கும் உத்திகள்:
- பிரார்த்தனைகள்.
- பக்திப்பாடல்கள் (குழுவினருடன்).
- சுயநலமற்றசேவை.
- உள்ளே மனதைத் திருப்ப நல்ல சூழ்நிலை.