மரம்
மரம்
கண்களை மூடிக்கொண்டு “ஹு” மற்றும் “ஹா” என்று சொல்லுங்கள். இதை மூன்று முறை செய்யவும். இப்போது நீங்கள் புதிதாக இருக்கிறீர்கள். குழந்தைகளே! நீங்கள் ஒரு தோட்டத்தில் இருக்கிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். உங்களைச் சுற்றியுள்ள அழகான பூக்களையும் அழகான வண்ணத்துப்பூச்சிகளையும் பாருங்கள். சுற்றிலும் அத்தனை பசுமை. வாருங்கள்! இந்த பெரிய மரத்தடியில் சிறிது நேரம் அமர்ந்திருப்போம்.
இந்த வலுவான மரத்தின் பெரிய மற்றும் அடர்த்தியான வேர்களைப் பாருங்கள். இந்த வேர்கள் மரத்திற்கு தண்ணீர் மற்றும் தாதுப் பொருட்களை உணவாக அளிக்கிறது. இலைகள், பூக்கள் மற்றும் பழங்கள் நிறைந்த கிளைகளைப் பாருங்கள். இந்த மரம், வெயிலில் இருந்து நமக்கு நிழல் தருகிறது. பறவைகள் கிளைகளில் கூடு கட்டி மகிழ்ச்சியுடன் கிசுகிசுக்கின்றன. மரத்தின் பச்சை இலைகள் காற்றில் நடனமாடுகின்றன. மரத்திலிருந்து விழுந்த பழங்களைப் பாருங்கள். பறவைகளும் அணில்களும் அவற்றை மனதார உண்கின்றன. மரம் மிகவும் வலிமையானது மற்றும் மிகவும் அடக்கமானது. நமக்கு உற்ற நண்பனான இந்த மரத்தை அணைப்போம்.
மரங்களைப் பார்த்து “அன்பு” என்ற குணத்தை வளர்க்க வேண்டும். காகிதம், பென்சில் போன்றவற்றைத் தயாரிக்க மரங்கள் வெட்டப்படுகின்றன. மாணவர்களாகிய நாம், நமது பூமியைப் பாதுகாக்க சிறந்த வழி, சரியான அளவு காகிதம் மற்றும் பென்சில்களைப் பயன்படுத்துவது மற்றும் அதனை வீணாக்காமல் இருப்பதுதான். அனைத்து மரங்களுக்கும், அனைத்து உயிரினங்களுக்கும் மற்றும் முழு உலகிற்கும் நம் அன்பை செலுத்துகிறோம்.
இப்போது, நாம் அனைவரும் நமது வகுப்பிற்கு வருவோம், நம் இடத்தில் அமர்ந்து மெதுவாக கண்களைத் திறப்போம்.
மரமானது, பறவைகள், விலங்குகள் மற்றும் மக்கள் சாப்பிடுவதற்கு பழங்களை அளிக்கிறது. மரங்களைப் போல இருங்கள், தன்னலமின்றி அனைவருக்கும் சேவை செய்யுங்கள்.
செயற்பாடு:
குரு குழந்தைகளிடம் மரத்தின் படத்தை வரையச் சொல்ல வேண்டும்.
[ஆதாரம் : Early Steps to Self Discovery Step – 2, Institute of Sathya Sai Education (India), Dharmakshetra, Mumbai.]மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது.