போர் ஆரம்பித்தது
போர் ஆரம்பித்தது
இராமர் படைத்தலைவனை அழைத்து இலங்கையின் நாற்புர வாயில்களையும் மிகவும் திறைமையாக முற்றுகையிடச் சொன்னார். வானரர்களின் தலைவன் சுக்ரீவன், கரடிகளின் அரசன் ஜாம்பவான், ராக்ஷஸர்களின் அரசன் விபீஷணன் அனைவரும் ஒன்றாகச் சந்தித்தனர். அவர்கள் நான்கு பிரிவுகளாக பிரிந்து, ஒவ்வொருவருக்கும் வழிநடத்தக் கூடிய ஒரு தலைவனையும் முடிவு செய்தனர். பிறகு அந்த தலைவர்கள் இராமரின் பாதத்தில் வணங்கி ஆசிபெற்று தாக்குதல்களுக்கு ஆணை பிறப்பித்தனர்.
குருமார்கள் குழந்தைகளுக்கு சொல்லவேண்டியது:
*ஸ்ரீ ராமர் ஒரு குழுவை நடத்திச்செல்லும் தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு முன்னுதாரணமாக இருந்து காட்டினார். தான் ஒரு அவதார புருஷராக இருந்தும், எங்கும் நிறைந்த எல்லாம் வல்லவராக இருந்தும், தனது குழுவில் எவரையும் துச்சமாக கருதாமல் அனைவருக்கும் உரிய மரியாதையை கொடுத்தார்.
அவர்களிடம் போருக்கான விவரங்களை கவனமாக கேட்டும், அவர்களது கருத்துக்கள் என்ன என்பதை பற்றியும் விளக்கமாக விவாதிப்பார். ஒவ்வொருவரின் நோக்கத்தையும் பொறுமையாகக் கேட்டறிந்து அவர்களுக்குள் புதைந்திருக்கும் திறமையை சுட்டிக்காட்டி அவர்களை உற்சாகப் படுத்தினார். அவர்களை சாதாரண வானரர்களாகவோ அல்லது கரடிகளாகவோ பார்க்காமல் அவர்களது ஆக்கசக்திக்கு ஏற்ற வகையில் வேலைகளைப் பகிர்ந்து கொடுத்தார்.
கற்றுக்கொள்ள வேண்டிய நீதி :
இந்த பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களும் அவரவர்களுக்கு உரிய அளவிற்கான வலிமை பெற்றுள்ளார்கள். ஆகையால் அனைத்து படைப்புகளையும் தகுந்த மரியாதையுடன் நடத்த வேண்டும்.
[குருமார்கள் குழந்தைகளின் புரிந்து கொள்ளும் திறமைக்கு ஏற்றவாறு இந்த விஷயங்களை விவாதிக்க வேண்டும். மிகச் சிறிய குழந்தைகளாக இருந்தால் அவர்கள் வயதிற்கு ஏற்ப புரிந்துகொள்ளக்கூடிய உதாரணங்களைக் கூறி விளக்கலாம்.]
வானரர்கள் பெரிய கற்பாறைகளையும் மரங்களையும் கைகளில் எடுத்து சென்றனர். அவர்கள் இலங்கை செல்லும் பாதையில் இதயத்தில் இராமரையும், உதட்டில் இராம நாமத்துடனும் சென்றனர். கிழக்கு வாயிலில், நளனுடைய தலைமையிலும், தெற்கு வாயிலில் அங்கதன் தலைமையிலும், மேற்கு வாயிலில் மகாவீரன் ஹனுமானின் தலைமையிலும் தாக்குதல்கள் நடந்தன. வடக்கு வாயிலை இராவணனே காத்து வந்ததால் அங்கு இராமன் அவனுடன் போரிட்டார். வானரர்கள் பற்களாலும் நகங்களாலும் போரிட்டு எப்போதும் வெற்றியையே அடைந்தனர். ராக்ஷஸர்கள் இரவிலும் வாழ்பவர்களாதலால் இரவில் அவர்கள் சக்தி மிக அதிகமான அளவில் பெருகி உற்சாகமாகி விடுவார்கள். பிறகு இராமர் அக்னி அஸ்திரத்தை எய்து அங்குள்ள இருளைப் போக்கி அக்னியால் வெளிச்சத்தை உண்டாக்கினார். வானரர்களும் கரடிகளும் தங்களுடைய எதிரிகளுடன் இரண்டு மடங்கு சக்தியுடனும் உற்சாகத்துடனும் போரிட்டனர்.
குருமார்கள் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டியது :
வலிமை வாய்ந்த அசுரர்களுக்குமுன் வானரர்கள் நலிந்து இணையற்றவர்களாகவே இருந்தனர். ஆனால் இதே வலிமையற்ற வானரர்கள் தான் எதிரிகளான அசுரர்களை வதம் செய்தது. காரணம் அவர்களது பிரார்த்தனைகளாலும், நாமஸ்மரணம், சரணாகதியாலுமே வெற்றி அடையமுடிந்தது.
நம்மிடமே நமக்கு நம்பிக்கை வேண்டும், கூட கடவுளிடமும் முழு நம்பிக்கை வைத்தால் நமது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் எந்த போராட்டங்களையும் நம்மால் சமாளிக்க முடியும். கடவுளிடம் கொண்டிருக்கும் நம்பிக்கை மட்டும் போதாது, நமது முழு உழைப்பையும் சமமாக உபயோகித்து வெற்றி பெற வேண்டும்.
கற்றுக்கொள்ள வேண்டிய நீதி: தில் மே ராம் – ஹாத் மே காம்
(ராம நாமத்தை இதயத்தில் நிறுத்தி பூமியில் நாம் செய்ய வேண்டிய அனைத்து காரியங்களையும் செய்ய வேண்டும்)
முழு உழைப்பே முழு வெற்றி.