இறைவனின் அன்பு – காணொளி

Print Friendly, PDF & Email
இறைவனின் அன்பு – காணொளி

குழந்தைகளுக்கு, தாயின் மற்றும் தந்தையின் அன்பை வெளிப்படுத்தும் வீடியோக்களைக் காண்பிக்கலாம். விலங்கினங்கள் தங்கள் குட்டிகளிடம் அன்பு காட்டுவதையும், பராமரிப்பதையும் குறித்த வீடியோக்களையும் குருமார்கள் காட்டலாம். சில விலங்கினங்கள் தங்களைவிட வலிமை குறைந்த விலங்கினங்களிடம் அன்பு காட்டும் சில படக்காட்சிகள் உள்ளன. உதாரணத்திற்கு ஒரு யானை, ஒரு நாயிடம் காட்டும் பரிவு, ஒரு குரங்கு, கரடிக்குட்டியிடம் காட்டும் அன்பு போன்றவை.

விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளக்கூடிய சில வினாக்கள்
  1. இந்தப் படக்காட்சிகள் உங்களுக்குப் பிடித்ததா? ஆம் எனில் எந்த படம்? ஏன்?
  2. நம் வீட்டில் மட்டும் தான் நம்மிடம் அன்பு செலுத்துகிறார்கள் என்று நினைக்கிறாயா? பள்ளியில் நம்மிடம் அன்பு செலுத்துவது யார்? பள்ளியில் நம்மை யார் பார்த்துக்கொள்கிறார்கள்?
  3. உனக்கு விளையாட பிடிக்குமா? விளையாட்டை சுவாரசியமாக்குவது யார்?
  4. உனக்கு நண்பர்கள் இருக்கிறார்களா? அவர்களுடன் இருக்க உனக்கு பிடிக்குமா? ஏன்?
  5. உனக்கு சாலையைக் கடக்க பயமா? தனியாக சாலையை எப்போதாவது கடந்ததுண்டா?அந்த சமயங்களில், சாலையில் உனக்கு அருகில் நின்றிருந்தவர் உனக்கு உதவி செய்ததுண்டா? நீ யாருக்காவது சாலையைக் கடக்க உதவி செய்திருக்கிறாயா?
  6. நாம் எப்போதும் நமது பெற்றோர்களுடன், சகோதரர்களுடன் மற்றும் நண்பர்களுடன் இருக்க முடியுமா?
  7. நீ, முன்பின் தெரியாதவர்களிடம் எப்போதாவது அன்பு செலுத்தியிருக்கிறாயா? எப்படி? அதனை நீ எவ்வாறு உணர்ந்தாய். அதனை அவர்கள் எவ்வாறு உணர்ந்தனர்?
அனுமானங்கள்

குருமார்கள் குழந்தைகளுக்கு, அவர்கள் பெற்றோர், ஆசிரியர்கள், சகோதர சகோதரிகள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அவர்களது வளர்ப்பு செல்லப் பிராணிகள் இவர்களிடமிருந்து அவர்கள் பெறும் அன்பு இறைவனது அன்பே, அதுவே இவர்கள் மூலமாகப் பெறப்படுகிறது என்பதைத் தெரிவிக்க வேண்டும். அதுபோலவே நாம் பிறருக்குக் காட்டும் அன்பு, இறைவனது அன்பே. அதுவே நம் மூலமாக அவர்களுக்குச் செல்கிறது என்று சொல்ல வேண்டும். இறைவன் நம் அனைவரையும் ஒரே போல நேசிக்கிறார். நிபந்தனையற்ற அன்பு அது. சில நேரங்களில் நம் அன்னையைப் போலவும், சில நேரங்களில் நண்பரைப் போலவும், சில நேரங்களில் சகோதரரைப் போலவும் அன்பைப் பொழிகிறார்.

இறுதியாக, ஸ்வாமிக்கு ஒரு வாழ்த்து அட்டை தயார் செய்யச் சொல்லி, வகுப்பை நிறைவு செய்யலாம்.

குறிப்பு

 வகுப்புத் தொடங்கும் முன் யூ ட்யூப் வீடியோக்களைப் பார்த்து வைத்துக் கொண்டால், தேவையற்ற காலதாமதத்தைத்  தவிர்க்கலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன