தலையணைக்கு அடியில்

Print Friendly, PDF & Email

தலையணைக்கு அடியில்

Thief searching the merchant's purse

ஒரு முறை பெரிய செல்வந்தரான வியாபாரி ஒருவர் கோவில் திருவிழா காண வேண்டி ஊர்ப் பயணம் செய்ய கிளம்பினார். ஒரு திருடனும் அவரது பொருளைக் கொள்ளை அடிக்க நினைத்து அவர் பின்னாலேயே தானும் அதே கோயில் திருவிழாவைப் பார்க்கப் போவதாக பாவனை செய்துகொண்டு அவர் கூடவே சென்றான். இரவைக் கழிக்க இருவரும் ஒரே சத்திரத்தில் தங்கினார்கள்.

அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்தனர். திருடன் மட்டும் தூங்காமல் இந்த சமயத்திற்காகக் காத்துக் கொண்டிருந்து, எழுந்து சென்று வியாபாரியின் பணப் பையைத் தேட ஆரம்பித்தான். ஆனால் எத்தனை தேடியும் வியாபாரியின் பணப்பை மட்டும் கிடைக்கவில்லை.

Merchant takes out the purse from thief's pillow

பொழுது விடிந்ததும், திருடன் வியாபாரியிடம் ஒரு நல்ல தோழனைப் போன்ற பாவனையில், “இந்த சத்திரத்தில் நிறைய திருடர்கள் உள்ளார்கள். உனது பணப் பையை பத்திரமாக வைத்திருக்கிறாயா? அதில் தானே உனது பணமனைத்தும் உள்ளது” என்று வினவினான். பதிலுக்கு வியாபாரியும், ஆமாம்! மிகவும் பத்திரமாகத்தான் வைத்திருக்கிறேன், பார், உனது தலையணைக்கு அடியில் பத்திரமாக இருக்கிறது! என்று கூறிக் கொண்டே திருடனின் தலையணையின் கீழிருந்து பணப் பையை எடுத்துக்கொண்டார்.

இறைவனும் இந்த வியாபாரியை போலவேதான். ஆத்மசாந்தி, ஆத்மஞானம், பரமானந்தம் என்னும் விலை மதிக்க முடியாத பையை மனிதனின் தலையில் வைத்திருக்கிறார். ஆனால் மனிதன் தனது அறிவில்லாத தனத்தால் வெளி உலகத்தில் தேடிக் கொண்டிருக்கிறான்.

வெளி உலகில் ஒன்றும் இல்லை: நமக்குள்ளே இருக்கும் பெருநிதியைத் தேடு..

[Ref: China Katha – Part 1 Pg:188]

 Illustrations by Ms. Sainee
Digitized by Ms.Saipavitraa
(Sri Sathya Sai Balvikas Alumni)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: