எனது பிரார்த்தனை

Print Friendly, PDF & Email
எனது பிரார்த்தனை
  1. குரு, முதலில் ஸ்லோகத்தின் முழுமையான அர்த்தத்தை விளக்க வேண்டும்.
  2. பிறகு முக்கியமான வார்த்தைகளுக்கான அர்த்தங்களைக் கரும்பலகையில் எழுதிப் போட வேண்டும். உதாரணமாக: உமாவின் துணைவன், தேவ குரு, பாம்புகளால் அலங்கரிக்கப்பட்டவர், சூரியன், சந்திரன் மற்றும் அக்னியைக் கண்களாகக் கொண்டவர்.
  3. பிறகு, குரு வகுப்பில் ஒரு மாணவனை சிவபெருமானாக வேஷம் போடலாம், அல்லது ஒரு சிவன் படத்தை வகுப்பில் வைக்கலாம்.
  4. பின்னர், குழந்தைகளை ஒரு குழுவாகவோ அல்லது தனித்தனியாகவோ (வகுப்பின் குழந்தைகள் எண்ணிக்கைக்கேற்றபடி) கரும்பலகையில் உள்ள வார்த்தைகளை உபயோகித்து சிவனின் மேல் ஒரு பிரார்த்தனை எழுதச்சொல்லலாம். உதாரணம்- உமாவின் துணைவனை வணங்குகிறேன், தெய்வ குருவை வணங்குகிறேன், அனைத்து உயிர்களையும் படைத்தவர், பாம்பாபரணங்களை அணிந்தவர் என்னை காப்பாற்றுவாராக.
  5. பிறகு, குழந்தைகள் ஒருவர் பின் ஒருவராக அல்லது ஒவ்வொரு குழுவாகத் தன் ப்ரார்த்தனையைக் கூறி, மலர்களை சிவனுக்கு அர்ப்பணிக்கலாம்.
சுருக்கமாக

இது ஒரு விளையாட்டுத்தனமானப் பயிற்சியே. சிவபெருமானிடம் பக்தி கொள்ளவும், இறைவன் உணர்த்தும் நற்பண்புகளைத் தெரிந்து கொள்ளவும் உதவும். இது குருப்-1 –மூன்றாம் வருட ஸ்லோகமாகையால் எவ்வளவு வார்த்தைகளை நினைவு கூற முடிகிறது என்று கவனிக்கலாம்.

பிறகு அனைவரும் சேர்ந்து உச்சரித்துப் பின்னர் பொருளையும் கூறலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: