விபீஷணன் இராமனிடம் சரணடைதல்

Print Friendly, PDF & Email
விபீஷணன் இராமனிடம் சரணடைதல்

Vibhishna Surrenders Rama

இராவணன், தன்னை பயமில்லாமல் தைரியமாக ஆதரிக்கும் தன் மந்திரிகளை, தர்பாருக்கு வரவழைத்தான். விபீஷணன் மட்டும் “இராமர் ஒரு சாதாரண மனிதனல்ல. தனி ஒருவனாக உன்னால் 14 உலகத்திற்கும் தலைவனுக்குக் கெடுதல் செய்யமுடியும். உன்னுடைய வெறுப்புகளை அந்த தெய்வீகமானவரிடம் விட்டுவிட்டு, அவருக்கு சேவை செய்ய பிரார்த்தனை செய். இராமரின் மனைவியை அவரிடம் கொடுத்து அவருடைய ஆசிகளை ஏற்றுக்கொள்” என்று கூறினான். இராவணன் வெகுண்டு தன் எதிரியை ஆதரித்து பேசும் விபீஷணனை அரசவையிலிருந்து வெளியேறுமாறு ஆணையிட்டான்.

குருமார்கள் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டியது: நம்மைச்சுற்றிலும் உடல்பலமும், செருக்குள்ளவர்களும் இருந்தாலும் அவர்களின் எதிரில் உண்மையை பேசுவதற்கும் நேர்மையை கடைப்பிடிப்பதற்கும் பயம் கொள்ளலாகாது.

கற்றுக்கொள்ள வேண்டிய நீதி :
சத்யம் வத – தர்மம் சர

சிறப்புள்ளவனாக இரு : சிறப்பற்றவனாக இராதே. (உண்மையான ஹீரோ என்பவன் உண்மைக்கு முன் நிமிர்ந்து நிற்பவன். நேர்மையற்றதை ‘இல்லை’ என்று நேராக சொல்வதற்கு அஞ்சாதவன்)

விபீஷணன் இராம நாமத்துடன் கடலைக் கடந்து மகேந்திர மலையை அடைந்து இராமனைச் சந்திக்க உத்தரவு கேட்டான். வானரர்கள் அவன் மீது சந்தேகம் கொண்டு அவனைச் சிறை பிடித்தனர். ஆனால் இராமர், அவன் மீது இரக்கம் கொண்டு, தன்னிடம் தஞ்சம் என்று வந்தவனை அவன் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும், நான் அவனை கருணையுடன் நடத்துவேன், என்று கூறினார். விபீஷணன், இராமரிடம் அழைத்து வரப் பட்ட போது அவன் இராமரின் காலடியை வணங்கினான். அவன் தான் ராக்ஷஸனாகப் பிறந்தவன் எனினும் இராமரிடம் தன்னைக் காப்பாற்றும் படி தஞ்சமடைந்தான். இராமர் விபீஷணனிடம் “நீ மிகவும் ஒழுக்கமான மேன்மையான சிறப்புகளை உடையவன் இல்லாவிடில் உனக்கு இந்த தரிசனம், ஸ்பர்சணம், சம்பாஷணம் ஆகிய இந்த வாய்ப்பு கிடைத்திருக்காது” என்று கூறினார்.

குருமார்கள் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டியது:
நமது தவறுகளுக்காக கடவுளிடம் பிரார்த்தித்து இனி இதுபோன்ற தவற்றை செய்ய மாட்டோம் என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டோமானால் எப்போதும் இரக்கமுள்ள கடவுள் நமது பிழைகளை மன்னித்து நம்மை அன்புடன் ஏற்றுக் கொள்கிறார். நாமும் இதேபோல நமது நண்பர்களிடம் அன்புடனும் மன்னிக்கும் குணத்துடன் இருக்க வேண்டும்.

கற்றுக்கொள்ள வேண்டிய நீதி :
கொடுப்பதும், மன்னிப்பதும் அன்பு – பெறுவதும் மறப்பதும் சுயநலம்
சுவாமியின் தரிசனம், ஸ்பரிசனம், சம்பாஷணம் இவைகளால் பக்தர்கள் அடையும் அளவற்ற ஆனந்தம், சந்தோஷம் முதலியவைகளை , குருமார்கள் குழந்தைகளுக்கு விளக்கிக் கூறலாம்.

இராமர் விபீஷணனின் தலையில் நீர் தெளித்து அவனை இலங்கையின் அரசனாக்குவேன் என்று உறுதி அளித்தார். இராமர் அனைவரிடமும் விபீஷணனிடம் தோழமையுடன் பழகுமாறு கூறினார். பிறகு அனைவரும் கடற்கரையை நோக்கி முன்னேறினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: