அறிவும் சுயக்கட்டுப்பாடும்

Print Friendly, PDF & Email

அறிவும் சுயக்கட்டுப்பாடும்

Cyclist riding without light

இது ஒரு இளைஞனைப் பற்றியகதை. ஒரு இளைஞன் இரவு நேரத்தில் நெரிசலான சாலையில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தான். பணியில் இருந்த காவலர், மிதிவண்டியில் விளக்கு இல்லாமையால் வண்டியை நிறுத்துமாறு கூறினார்.

மிதிவண்டியில் சென்றவனோ, “காவல்காரரே, விலகிச்செல்லுங்கள், எனதுவண்டியில் விளக்கு மட்டுமில்லை, ப்ரேக்கும் இல்லை” என்று கத்தினான்.

Man too has wisdom and Self Control

இந்த நிலையில் தான், தற்போது நாம் அனைவரும் உள்ளோம். யாரிடமும் ‘அறிவு’ என்ற விளக்கும், ‘சுயக்கட்டுப்பாடு’ என்ற ப்ரேக்கும் இல்லை. இந்த நிலையில் எப்படி ‘ஆனந்தம்’ என்ற தெருவில் எந்தவித விபத்துக்களும் இல்லாமல் பயமின்றி செல்லமுடியும்?

மிதிவண்டி ஓட்டுனருக்கு இந்த இரண்டு திறனும் அவசியம் தேவை. மனிதனுக்கு அறிவும் சுயக்கட்டுப்பாடும் இல்லை என்றால் கிடைத்திருக்கும் இந்த அரிய பிறவியை வீணாக்கிக் கொண்டவன் ஆகிறான்.

அறிவு வழிகாட்டுகிறது, சுயக்கட்டுப்பாடு வாழ்க்கைக்குப் பாதுகாப்பு அளிக்கிறது.

 Illustrations by Ms. Sainee
Digitized by Ms.Saipavitraa
(Sri Sathya Sai Balvikas Alumni)

[Ref: China Katha-I, Stories & Parables Pg:]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: