யத்கரோஷி – மேலும் படிக்க

Print Friendly, PDF & Email
யத்கரோஷி – மேலும் படிக்க
யத் கரோஷி யத் அஷ்னாஸி யஜ் ஜீஹோஷி ததாஸி யத்
யத் தபஸ்யஸி கௌந்தேய தத் குருஷ்வ மத் அர்பணம்

பொருள்: குந்தியின் புதல்வனே! நீ எதைச் செய்தாலும், எதைச் சாப்பிட்டாலும், எதை ஹோமம் பண்ணினாலும், எத் தவத்தைப் புரிந்தாலும் அதை எனக்கு அர்ப்பணமாகச் செய்!

“நீங்கள் எதைச் செய்தாலும் கடவுளுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் செய்வீராக! உங்களது எல்லா செயல்பாடுகளும் யாவருக்கும் பயனளிக்கக் கூடியதாக இருத்தல் வேண்டும். அதன் பிறகே நீங்கள் எனக்குப் பிடித்தமானவராவீர். நானும் உங்களது நண்பனாவேன். நீங்கள் யாருக்காவது ஒரு கவளம் உணவளிப்பதாக இருந்தாலும் அதைச் சரியான விதத்தில் செய்யுங்கள்.” என நம் பேரன்பு மிக்க பகவான் உரைக்கின்றார்.

நீங்கள் எதைச் செய்தாலும் மிக்க கவனத்துடன் செயலாற்றுங்கள். அதாவது எங்கும், எல்லாவற்றுள்ளும், உண்மையில் உறைந்துள்ளது இறைவன் எனும் மாறாத விழிப்புணர்வு கொண்டு செயலாற்றுங்கள். எப்பொழுதும் தர்மத்தின்பால் செயலாற்றுங்கள்.

திருமதி.கீதாராம் சேவையைப் பற்றிய நிகழ்வினை விவரிக்கிறார். நேர்முக உரையாடல் ஒன்றின் போது ஸ்வாமி ஒரு பெண்மணியைக் கேட்டார், உங்கள் ஊரில் சேவைப் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்று. அந்த பெண்மணியும் நன்றாக நடைபெறுகிறது என பதில் அளித்தாள். அந்நாட்களில் ஸ்வாமி நாம் ஒவ்வொரு நாளும் சமைக்கும்பொழுது ஒரு கைப்பிடியளவு அரிசியை எடுத்து தனியாக வைக்கும்படியும் ஒவ்வொரு வீட்டிலும் சேகரித்து தேவைப்படும் நபருக்கு அளிக்கலாம் எனவும் இது ஒவ்வொரு நாளும் சேவை புரியும் மனோபாவத்தை அளிக்கும் எனவும் ஆலோசனை வழங்குவார்.

இந்தப் பெண்மணியும் தமது ஊரில் நடைபெற்று வந்த சேவைப் பணிகள் பற்றி பேசலானாள். அவள் தாம் சேவைப் பணிக்குப் பொறுப்பேற்றிருந்தபடியால் எல்லாவிதமான செயல்பாடுகளையும் பெருமையுடன் விவரித்துக் கூறலானாள். ஸ்வாமியும் மிக்க மகிழ்ச்சியெனக் கூறினார்.

பிறகு கேட்டார்: “இரண்டு ரூபாய் அரிசியா இல்லை, ஐந்து ரூபாய் அரிசியா?”

அந்த பெண்மணி: “வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு விதமான அரிசியைக் கொண்டு வருவர் ஸ்வாமி!”

ஸ்வாமி: “நான் மற்றவர்களைப்பற்றிக் கேட்கவில்லை.நீ எந்த அரிசியைக் கொடுக்கிறாய் என்றுதான் கேட்டேன்.”

பெண்மணி:(தயக்கத்துடன்) “நல்ல அரிசிதான் ஸ்வாமி!”

ஸ்வாமி:”நான் மற்றவர்களைப்பற்றிக் கேட்கவில்லை. நீ எந்த அரிசியைக் கொடுக்கிறாய் என்றுதான் கேட்டேன்.”

பெண்மணி:(தயக்கத்துடன்) “நல்ல அரிசிதான் ஸ்வாமி!”

ஸ்வாமி சுருக்கென்று கூறினார். “என்ன! ஏழை மக்களுக்கு, நாராயண சேவைக்கு, இரண்டு ரூபாய் அரிசி! உன்னுடைய வீட்டுக்கு மட்டும் ஐந்து ரூபாய் அரிசியா! இரண்டு ரூபாய் அரிசி, சுத்தம் செய்யப்படாதது, கற்களும் உள்ளது. இதைத் தான் நீ ஏழை மக்களுக்கு கொடுத்து வருகிறாய்!”

பெண்மணி: “இல்லை ஸ்வாமி!”

ஸ்வாமி தமது ஆசனம் விட்டு எழுந்து, “இரண்டாண்டுகளுக்கு முன்பு நான் உனது வீட்டிற்குப் பிச்சைக்காரர் உருவில் வந்தேன். நீ நாராயண சேவைக்கு என்று சேகரித்து வைத்திருந்து அதையே எமக்களித்தாய்! நீ ஒரு சிவப்புத் துணியில் வைத்து அதையே எமக்களித்தாய்! நீ என்னை நம்பவிலையா? இரு!”

ஸவாமி தமது உள்ளறைக்குச் சென்றார். சிவப்புப் பையுடன் வெளிவந்து, “இதை நீ எமக்குத் தரவில்லையா?”

அந்தப் பெண்மணி துன்புற்று தேம்பியழுகிறாள். நமக்கு இதனால் ஸ்வாமி கூறும் அடிப்படைத் தத்துவம்: “அன்புடன் சேவைப் பணியாற்றுதலே”.

“நீங்கள் சேவைப் பணியாற்றும் நபரிடம் ஸாயி உறைந்திருப்பதைக் காண வேண்டும். அதற்கேற்ப சேவைப் பணியாற்ற வேண்டும்”.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: