இளம் நடுவர்கள்

Print Friendly, PDF & Email

இளம் நடுவர்கள்

குறிக்கோள்:

ஒரு அறிவார்ந்த மற்றும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்படியான விளையாட்டு.

தொடர்புடைய விழுமியங்கள்:

பிரித்துணரும் தன்மை.

தேவையான பொருட்கள்:

ஏதும் இல்லை

குழந்தைகளை தயார் படுத்தும் குருவின் பணி:

ஏதுமில்லை.

எப்படி விளையாடுவது:
  1. குழந்தைகள் அனைவரையும் வட்ட வடிவத்தில் தரையில் அமரும்படி குருவானவார் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
  2. ஒரு குழந்தையை அவ்வட்டத்தின் நடுவில் நிற்க செய்யவேண்டும். அக்குழந்தை எல்லா குழந்தைகளும் செய்யும் ஒரு தவறான செயலை செய்வது போல நடித்துக்காட்டவேண்டும்.(எடுத்துக்காட்டாக சாலையில் செல்லும்போது துப்புதல் மற்றும் சுவரில் கிறுக்குதல் போன்றவை)
  3. அக்குழந்தை தன்னுடைய செயலை விளக்குவதற்கு தேவைப் பட்டால் சொற்களையும் பயன் படுத்தலாம்.
  4. அவர்கள் செய்வதை அக் குழந்தை ஏன் செய்யக் கூடாது என்பதற்கு ஒரு நல்ல காரணம் மற்ற குழந்தைகள் கூறிட அவர்களுக்கு ஒரு நிமிடம் தரப் படவேண்டும்.
தீர்ப்பு வழங்கும் விதிகள்:

எந்த குழந்தை சரியான விடையைத் தருகிறதோ அக்குழந்தையை இப்போது நடுவில் நிற்கச் சொல்ல வேண்டும். ஒரு வேளை சரியான காரணம் வட்டத்தில் அமர்ந்திருக்கும் எவராலும் தர முடியவில்லையெனில் நடுவில் நின்ற அக்குழந்தைக்கு மற்றுமொரு வாய்ப்பு வங்கப் பட வேண்டும். இங்கு குருவானவர் நடுவராக இருந்து செயல் பட வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன