ஆதாய திவ்ய
ஆதாய திவ்ய
கேட்பொலி
வரிகள்
- ஆதாய திவ்ய குஸுமானி மனோஹராணி
- ஸ்ரீபாதபூஜன விதிம் பவதங்க்ரி மூலே
- கர்த்தும் மஹோத்ஸுகதயா ப்ரவிஶந்தி பக்தா:
- ஸ்ரீ ஸத்யஸாயி பகவன் தவ ஸுப்ரபாதம்.
விளக்கவுரை
தெய்வீகமான மனத்தை ஈர்க்கக் கூடிய நறுமணமுள்ள மலர்களை எடுத்துக்கொண்டு தங்களுடைய திருவடிகளைப் பூஜிக்கும் சடங்குகளைச் செய்வதற்கு மிகுந்த உற்சாகத்துடன் பக்தர்கள் புகுகிறார்கள். உங்களுக்குக் காலைப்பொழுது மங்களகரமானதாயிருக்கட்டும்.
பதவுரை
ஆதாய | எடுத்துக்கொண்டு |
---|---|
திவ்ய | தெய்வீகமான |
குஸுமானி | நறுமணம் மிக்க மலர்கள் |
மனோஹராணி | மனதை ஈர்க்கக்கூடிய |
ஸ்ரீபாத | திருவடிகளை |
பூஜன | பூஜிப்பதற்குரிய |
விதிம் | சடங்கை |
பவத் | தங்களுடைய |
அங்க்ரி | அடிகளின் |
மூலே | கீழே |
கர்த்தும் | செய்வதற்கு |
மஹா | பெரிய |
உத்ஸூகதா | உற்சாகம் |
மஹோத்ஸுகதயா | மிக்க உற்சாகத்துடன் |
ப்ரவிஶந்தி | புகுகிறார்கள் |
பக்தா: | பக்தர்கள் |
ஆதாய திவ்ய -சுலோகம்
விளக்கங்கள்:
ஸத்குரு நமக்குக் கிடைத்ததும் நமது விடியல் தொடங்குகிறது. நம் வாழ்க்கையே மாறுகிறது. நாம் அன்பும் நன்றியும் கொண்டவராய் குருவைப் போற்றுகிறோம். குரு, படிப்படியாக நமக்கு வாழ்க்கையின் உண்மைக் குறிக்கோளைக் காட்டுகிறார். நாமும் அந்த இறுதி உண்மையை நோக்கிப் பயணத்தைத் தொடங்குகிறோம். இப்போது நம் உள் உணர்வுகள் விழிப்படைந்து மேன்மையடைகின்றன. நம் மனமும் தூய்மையாகிறது. அதற்கு நாம ஸங்கீர்த்தனம் உதவுகிறது. குருவோடு நம் உறவு அதனால் பலப்படுகிறது. குருவே நமது கடவுள். ஆகவே அவரைத் திருப்திப்படுத்த அவரது திருவடிகளில் வணங்கி மலரை வைக்கிறோம். இங்கே, எட்டுக் குணங்கள் தான் மலர்ந்திருக்கிற பூக்கள். இப்பூக்களை வைத்து செய்யும் பூஜையே உண்மையான “பாதபூஐை”. அதை குரு விரும்புகிறார். இயற்கையில் மலர்கின்ற பூக்கள் வாடும். ஆனால் நம் இதய புஷ்பங்கள் என்றுமே மலர்ந்திருக்கும். அதைத்தான் “பாத பூஜை”க்கு வழங்குகிறோம். அந்த புஷ்பங்களாவன
- அஹிம்சை- அன்பு அதாவது சொல்லால், எண்ணத்தால், செயலால், யாரையும் துன்புறுத்தாது இருத்தல்.
- இந்த்ரிய நிக்ரஹம்- புலனடக்கம்
- ஸர்வ பூத தயா புஷ்பம்- எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டுதல்
- க்ஷமா- பொறுமை
- சாந்தி- சமபார்வை
- ஸத்யம்- (எல்லா உயிர்களிடத்தும் இருக்கிற) உண்மை
- தியானம்- தெய்வீக உணர்வு (எதிர்மறையாக நினைக்காமை, பேசாமை, செய்யாமை)
- தபஸ்- எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் ஒருமைப்பாடு
பாதபூஜா : எளியோருக்கும் நோயாளிக்கும் தொண்டு செய்வதே உண்மையான பூஜை. இதன் மூலம் நமது இதயத்தில் இறைவன் நுழைகிறார். இயல்பாகவே அவர் எல்லா இதயங்களிலும் வசிக்கிற இதயவாசி. எனவே நாம் செய்வதை அவர் ஏற்கிறார்.