ஆதாய திவ்ய
ஆதாய திவ்ய
கேட்பொலி
வரிகள்
- ஆதாய திவ்ய குஸுமானி மனோஹராணி
- ஸ்ரீபாதபூஜன விதிம் பவதங்க்ரி மூலே
- கர்த்தும் மஹோத்ஸுகதயா ப்ரவிஶந்தி பக்தா:
- ஸ்ரீ ஸத்யஸாயி பகவன் தவ ஸுப்ரபாதம்.
விளக்கவுரை
தெய்வீகமான மனத்தை ஈர்க்கக் கூடிய நறுமணமுள்ள மலர்களை எடுத்துக்கொண்டு தங்களுடைய திருவடிகளைப் பூஜிக்கும் சடங்குகளைச் செய்வதற்கு மிகுந்த உற்சாகத்துடன் பக்தர்கள் புகுகிறார்கள். உங்களுக்குக் காலைப்பொழுது மங்களகரமானதாயிருக்கட்டும்.
பதவுரை
| ஆதாய | எடுத்துக்கொண்டு |
|---|---|
| திவ்ய | தெய்வீகமான |
| குஸுமானி | நறுமணம் மிக்க மலர்கள் |
| மனோஹராணி | மனதை ஈர்க்கக்கூடிய |
| ஸ்ரீபாத | திருவடிகளை |
| பூஜன | பூஜிப்பதற்குரிய |
| விதிம் | சடங்கை |
| பவத் | தங்களுடைய |
| அங்க்ரி | அடிகளின் |
| மூலே | கீழே |
| கர்த்தும் | செய்வதற்கு |
| மஹா | பெரிய |
| உத்ஸூகதா | உற்சாகம் |
| மஹோத்ஸுகதயா | மிக்க உற்சாகத்துடன் |
| ப்ரவிஶந்தி | புகுகிறார்கள் |
| பக்தா: | பக்தர்கள் |

I am text block. Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

