அலக் நிரஞ்சன – செயற்பாடு
செப்டம்பர்25
அலக் நிரஞ்சன – செயற்பாடு
தேவையான பொருட்கள்:
- சார்ட் பேப்பர் அல்லது போர்டு.
- பென்சில் அல்லது மார்கர்.
கற்பிக்கப்படும் நற்குணங்கள்:
- எந்த செயல் செய்தாலும், பகவன் நாமா சொல்லிக்கொண்டே செய்யவேண்டும்
- கவனம்/மனம் ஒருமுகப்படுதல்.
முன்னேற்பாடுகள்:
- குருமார்கள், குழந்தைகளுக்கு பஜனையின் பொருளையும், நாமஸ்மரண மகிமையையும் விளக்கவேண்டும்.
- கீழே கொடுக்கப்பட்டுள்ள ‘வழிதேடல்’ படத்தை அச்செடுத்து, சார்ட் பேப்பரில் ஒட்டவும் அல்லது அதே போன்ற ஒரு படத்தை போர்டில் வரையலாம்.
- உள் வட்டத்தின் நடுவில் நம் ஸ்வாமியின் படம் ஒட்டவும்.
விளையாடும் முறை:
- முதலில் ஒரு குழந்தையை அழைத்து, ‘நாராயணா’ சொல்லிக்கொண்டே படத்தில் உள்ள முதல் வட்டத்திலிருந்து இரண்டாம் வட்டத்திற்குள் நுழைய வழி வரையச் சொல்லவும்.
- அடுத்த குழந்தையை அழைத்து, ‘நாராயணா’ சொல்லிக்கொண்டே, இரண்டாம் வட்டத்திலிருந்து மூன்றாம் வட்டத்திற்குள் நுழைய வழி போடச் சொல்லவும்.
- உள் வட்டத்தில் உள்ள ‘சத்ய நாராயணரை’ அடையும் வரை இதனைத் தொடரவும்
- இறுதியாக, விளையாடிய குழந்தைகள் அனைவரும் ஒன்று சேர்ந்து, பஜனையைப் பாடி முடிக்கவும்.
பதில்:
error: