கோவிந்த கிருஷ்ண – செயற்பாடு
கைவினைச் செயல்: பழைய செய்தித்தாளைக்கொண்டு கிருஷ்ணனின் புல்லாங்குழல் செய்தல்
தேவையான பொருட்கள்
- பத்து பழையசெய்தித்தாள்கள்.
- லைனிங் துணி/பேப்பர்.
- தங்க நிற நூல்.
- ஊசி, நூல் மணிகள்.
- தெர்மோகோல் அல்லது காகித மணிகள்.
- ரூலர், பென்சில், ஒட்டும் பசை.
செய்முறை:
- 5 செய்தித்தாள்களை எடுத்து ஒன்றன்மேல் ஒன்றாக வைக்கவும்.
- நடுவில் மடித்து வெளிப்புறத்திலிருந்து உட்புறமாக சுருட்டவும்.
- பசை தடவி ஒட்டவும்.
- புல்லாங்குழல் 36 செண்டிமீட்டர் நீளமுள்ளது. இதில் 8 செ.மீ, 11 செ.மீ, 14 செ.மீ, 18 செ.மீ தூரத்தில், ரூலரைக்கொண்டு பென்சிலால் வட்டம் வரைந்துக் கொள்ளவும்.
- ஒரு கத்தியை எடுத்து (பெரியவர்களின் மேற்பார்வையில்) வட்டங்களை மெதுவாக வெட்டவும். முழுதாக வெட்ட வேண்டாம். பின் பக்கம் வெட்ட வேண்டாம்.
- ஒரு பென்சிலைகொண்டு, துளைகளை பெரிதாக்கவும்.
- ஒர் மெல்லிய துணியை எடுத்துக்கொள்ளவும்.
புல்லாங்குழலைப் போலவே அளந்து வட்டங்கள் கத்தரித்து புல்லாங்குழல் மேல் ஒட்டவும்.
- குஞ்சங்கள் தயாரிக்க, சிறிய தெர்மோகோல் பந்துகளை ஊசியில் கோர்த்து, பின்னர் மெல்லிய துணியை ஒட்டவும். பின்னர், மணிகளை கோர்க்கவும்.
- லைனிங் துணி அல்லது லேஸ் எடுத்து, புல்லாங்குழலின் ஓரத்திலும் மத்தியிலும் ஒட்டவும்.
- குஞ்சத்தின் நூலை லேஸ் மீது ஒட்டி அதனை புல்லாங்குழலின் மறு முனையில் ஒட்டவும்.
- இப்போது தங்க நிற நூலை எடுத்து வட்டங்களை சுற்றி ஒட்டவும்.
- புல்லாங்குழல் தயார்!