இளம் பருவக்கதைகள்–II

Print Friendly, PDF & Email
இளம் பருவக்கதைகள் – II

சிறு பையனாக இருந்த போதே பணம் சம்பாதிக்கும் ஒரே நோக்கத்துக்காக இலட்சியங்களை வேண்டு மென்றே பாழடிக்கின்ற மனித மேம்பாடு்களை (Human Values) சீர்குலைக்கின்ற படக்காட்சிகளையும் புத்தகங்ளையும் பாபா மறுத்து வெறுத்தொதுக்கினார். ஊர் சுற்றும் பேசும் படக்காட்சிக் கூடாரங்கள் கிராமத்தில் வந்து தங்கும் போது சுற்றுபுறத்திலிருந்து பல மைல்கள் தொலைவிலிருந்து மக்கள் வந்து எவ்வளவு படங்கள் பார்க்க வேண்டுமோ அவ்வளவும் பார்க்க வேண்டுமென்னும் ஆவலால் தாம் சேர்த்து வைத்த தொகையெல்லாம் செலவிடுவது வழக்கம். மற்ற குழந்தைகள் சென்று பார்த்தாலும் சத்யா சென்று பார்க்க மறுத்து விடுவார். தனது மனஉறுதியை தளர்த்திக் கொள்ளாமல் சினிமா படக் காட்சிகள் தெய்வங்களை இழிவு படுத்துகின்றன. சங்கீதத்தையும் சீர் குலைத்து கலாசாரத்தையும் பாழடிக்கின்றன என்று விளக்குவார்.

pandari bhajan

சத்யாவுக்கு சுமார் 10 வயது இருக்கும் போது பண்டரி பஜனை கோஷ்டி என்ற பஜனைக் குழுவை எற்படுத்தினார். அந்த கோஷ்டியில் ஒவ்வொருவரும் கொடியைப் பிடித்து காலில் சலங்கை அணிந்து ஒரே மாதிரியான காவி உடை தரித்திருந்தார்கள். இவர்களில் 16 அல்லது 18 சிறுவர்கள் இருந்தனர். பாண்டுரங்கனை காண வேண்டுமென்று விரும்பி பலவகையான துன்பங்களையும் பொருட்படுத்தாது பயணம் செய்யும் பக்தர்களின் ஆவலையும், கோவிலின் சிகரத்தைக் கண்டவுடன் அவர்கள் அடையும் ஆனந்தபெருக்கையும், பலவாறு வருணிக்கின்ற நாடோடிப் பாடல்களையும், கதைப் பாட்டுகளையும் இனிய கீதத்தோடு பாடி அதற்கேற்றவாறு நடனமும் புரிவார்கள். சத்யா இவற்றையும், இவை போன்ற பாட்டுக்களையும் சிறுவர்களுக்கு சொல்லி வைத்தார். பாகவத புராணத்திலிருந்து ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கயைப் பற்றி சில பாடல்கள் இயற்றினார். குழந்தை க்ருஷ்ணன் அல்லது அன்னை யசோதா ஆகியோரின் பாத்திரத்தை ஏற்று சத்யா நடித்தார். அவரது நடனமும் வசனமும் சங்கீதமும்தான் அந்த பக்திபாடல்களுக்கு சுவையூட்டி மகிழ்வித்தன. அவர் நடித்த போது பிருந்தாவனத்திலும் மதுராவிலும் இருந்த கிருஷ்ண்னனையே கிராமத்தார் நேரில் கண்டனர்.

அவரது நடிப்பு மிக தத்ரூபமாக இருந்தது. நரசிம்மமூர்த்தியை பற்றி ஒரு பாடல் பாடியபோது சத்யா சிங்கத்தைப் போலவே திடீரெனத் தாண்டிக் குதித்தார். அவரது முகத்தில் குரூரமும் கோபமும் தாண்டவமாடின. அவரைப் பார்த்த கிராமமக்கள் அனைவரும் அஞ்சி நடுங்கினர். பின்னர் எல்லோருமாகச் சேர்ந்து பூஜை நைவேத்யம் ஆரத்தி, தூபதீபம் முதலான உபசாரங்களை செய்து வேண்டிக் கொண்ட பின்னரே நரசிம்மர் சாந்தமடைந்து சத்யாவாக மாறி, சத்யா தன் பாடலைத் தொடர்ந்தார். புட்டபர்த்தியில் பஜனை கூட்டத்தினர் பாடி ஆடிய போது கடவுளே தன்னை வெளிப்படுத்தி கொண்டார் என்ற செய்தி பரவியது.

அவர் மரபின் வழி வந்த பாடல்களுடன் கூட புதிய புதிய தெய்வத்துக்கும் புதிய கோவிலுக்கும் உரிய பாடல்களையும் சேர்த்துக் கொண்டார். இதுவரையில் யாரும் அவற்றைப் பற்றி கேள்விப்பட்டதில்லை. அவை ஷீரடி கோவிலைப் பற்றியவை. சாயிபாபாவைப் பற்றியவை. குழந்தைகள் தெருவில் நடனம் ஆடிக்கொண்டு சென்ற போது யார் இந்த சாய்பாபா? என்று பெரியவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

காலரா(வாந்திபேதி) நோய் சுற்றுப்புற கிராமங்களில் பரவி ஏராளமான மக்களை கொள்ளைகொண்டபோது புட்டபர்த்தி கிராமம் மட்டும் பாதிக்கப்படாமல் தப்பித்தது, பஜனை பாடல்களால் ஏற்பட்ட தெய்வீக சூழல்தான் அவர்களது பாதுகாப்புக்கும் ஆரோக்கியத்துக்கும் காரணம் என்று மக்கள் பேசிக் கொண்டனர். ஆகவே இந்த சிறுவர் பஜனை கோஷ்டியை தமது ஊருக்கு கூட்டி சென்று புராண நாடகங்கள் நடிக்க ஏற்பாடு செய்தனர். சத்தியமே வெல்லும் என்ற உண்மையினையும் இறைவன் பக்தர்களிடம் தன் அன்பினைப் பொழிந்து பாதுகாக்கிறார் என்பதனையும் இந்த நாடகஙகளில் சித்தரித்துக் காட்டினார். சத்யா தமக்கென்று பல பாத்திரங்களை ஏற்று நடித்தார். அவரது லாவகம், நளினம், எழில் அனைத்தும், காண்பவர் மனதைக் கொள்ளை கொண்டன. அவரைப் போன்று எவரையும் அவர்கள் வேரறெங்கும் கண்டதில்லை. அவர் பூமியைத் தொடவில்லை போன்றும், தேவலோகத்தை சார்ந்தவர் போலும் அவர்களுக்குத் தோன்றியது. அவர் தாராவின் பாத்திரம் ஏற்று தத்ரூபமாக நடித்த போது அவர் அன்னை ஈஸ்வரம்மா மேடைக்கு ஓடி வந்து தாராவுக்கு(ஹரிசந்திரனின் மனைவி) இருக்கும் கொலை தண்டனையை தடுக்க முயன்றார். வெறும் வேஷம் என்பதனையே மறந்துவிட்டார்.

[Source : Lessons from the Divine Life of Young Sai, Sri Sathya Sai Balvikas Group I, Sri Sathya Sai Education in Human Values Trust, Compiled by: Smt. Roshan Fanibunda]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: