நல்லதைப் பார்

Print Friendly, PDF & Email

நல்லதைப் பார்

விளையாட்டின் நோக்கம்:

குறிக்கோள் இந்த பயிற்றுவிப்பான் அல்லது செயல்பாட்டின் நோக்கமானது குழந்தைகள் மற்றவர்களை விமர்சிப்பதில் ஈடுபடாமல் எப்போதுமே அவர்களிடம் உள்ள நல்ல பண்புகளையே பார்க்க வேண்டும். இதைத்தான் பகவான் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

கற்பிக்கப்படும் குணங்கள்:
  • அன்பு
  • பாராட்டுதல்
தேவையான பொருட்கள்:
  1. ஒவ்வொரு குழந்தையின் பெயரும் எழுதப்பட்ட காகிதத்துண்டுகள்
  2. ஒரு கிண்ணம்
  3. இசை/பாட்டு
விளையாடும் முறை:
  1. குரு குழந்தைகளை வட்டமாக அமர வைக்க வேண்டும்.
  2. அவர் காகித்துண்டுகள் நிரம்பிய கிண்ணத்தை ஒரு குழந்தையிடம் கொடுக்க வேண்டும்.
  3. இசை/பாட்டு இசைக்கப்பட வேண்டும்.
  4. கிண்ணம் ஒரு குழந்தையிடமிருந்து மற்றொரு குழந்தைக்கு மாறிக் கொண்டே இருக்க வேண்டும்.
  5. இசை நிற்கும் போது எந்தக் குழந்தையிடம் கிண்ணம் இருக்கிறதோ அந்தக் குழந்தை ஒரு காகிதத் துண்டை எடுத்து அதிலுள்ள பெயரை படிக்க வேண்டும். (எ.கா) உமா
  6. இப்போது அந்தக் காகிதத் துண்டை எடுத்த குழந்தை உமாவிடம் உள்ள ஒரு நல்ல பண்பை கூற வேண்டும். (எ.கா) அக்கறை
  7. உமா பெயர் கொண்ட காகிதத்துண்டு நீக்கப்பட்டு விளையாட்டு முன்புமாதிரி இசையுடன் தொடங்க வேண்டும்.
  8. எல்லாருடைய பெயர்களும் படிக்கப்படும் வரை விளையாட்டை தொடரவேண்டும். எல்லாக் குழந்தைகளுக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையிலும் விளையாட்டு தொடர வேண்டும்.
  9. கிண்ணத்தை வைத்திருக்கும் குழந்தை தனது பெயரை எடுக்க நேர்ந்தால் தன்னிடம் உள்ள தீய பண்பை கூற வேண்டும். (எ.கா) கோபம்
குருக்களுக்கான குறிப்புகள்:

வகுப்பில் பகவான் கூறியுள்ள கீழ்கண்ட தகவல்களை கொண்டு குழந்தைகளிடம் விவாதிக்க வேண்டும்.

  • மற்றவர்களைப் பற்றி விமர்சிப்பதில் ஈடுபடுவது நமது நாக்குக்குச் செய்யும் ஒரு பாவச் செயல்.
  • மற்றவர்களிடம் உள்ள நல்ல பண்புகளையும், பழக்கவழக்கங்களை யும் நாம் கவனம் செலுத்தி அதனை நாம் பின்பற்ற வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: