கவுண்ட்டவுன்

Print Friendly, PDF & Email

கவுண்ட்டவுன்

குறிக்கோள்:

இந்த விளையாட்டின் பெயருக்கேற்ப, இது ஒரு குழு செயல்பாடு ஆகும். இதில் மாணவர்கள் பாலவிகாஸ் வகுப்புகளில் கற்றுக்கொண்ட தொடர் கருத்துகளை தலைகீழ் வரிசையில் பட்டியலிட வேண்டும். இந்த செயலில் கவனம் செலுத்துவதன் மூலம், குழந்தைகள் தயக்கம் மற்றும் பின்வாங்கும் பழக்கத்தை விட்டுவிடுகிறார்கள். இது அவர்களின் நினைவாற்றல் மற்றும் செவித்திறன் ஆகியவற்றை பலப்படுத்துகிறது.

கற்பிக்கப்படும் பண்புகள்:
  • நினைவாற்றல்
  • ஒருமுக தன்மை
  • எச்சரிக்கை
  • தன்னம்பிக்கை
  • சிக்கலைத் தீர்ப்பது
தயாரித்துக் கொள்ள வேண்டியவை

பின்வரும் கருத்துகளின் பெயர்கள் எழுதப்பட்ட சீட்டுகளை குரு தயார் செய்கிறார்.

  • 4 புருஷார்த்தங்கள்
  • 4 வேதங்கள்
  • 4 யுகங்கள்
  • 5 பாண்டவர்கள்
  • 5 பிராணன்கள்
  • 5 கோஷாக்கள்
  • 6 ஷத்ரிபூஸ்(தீய குணங்கள்)
  • தசாவதாரங்கள் முதலியன.
எப்படி விளையாடுவது:
  1. குரு குழந்தைகளை இருவர் கொண்ட குழுவை உருவாக்கச் சொல்கிறார்.
  2. ஒரு உதாரணத்தின் உதவியுடன் செயல்பாட்டை எப்படிச் செய்வது என்று அவர்களுக்கு விளக்குகிறார்.
  3. முதல் ஜோடி குழந்தைகளை முன்னால் அழைத்து அவர்களில் ஒருவருக்கு 4 புருஷார்த்தங்கள் என்ற கருத்தைத் தாங்கிய ஒரு சீட்டைக் கொடுக்கிறார்.
  4. குழந்தை அவற்றை இவ்வாறு உச்சரிக்கிறது – தர்மம், அர்த்தம், காமம், மோட்சம்.
  5. அந்த குழந்தையின் ஜோடி (pair) மோக்ஷம், காமம், அர்த்தம், தர்மம் என தலைகீழ் திசையில் வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும்.
  6. அவ்வாறு செய்ய முடிந்தால், அந்த ஜோடி புள்ளிகளைப் பெறுகிறது.
  7. இல்லையெனில், மற்றொரு ஜோடி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
  8. மற்ற குழந்தைகளுடன் இந்த முறையில் செயல்பாடு தொடர்கிறது.
மாறுபாடுகள்:

குரூப் 1 குழந்தைகளுக்கு, திரிமூர்த்தி, திரிகுணங்கள் போன்ற 3 எண் வரிசைகளை எடுக்கலாம்.

குருக்களுக்கு குறிப்புகள்:

இந்தச் செயல்பாடு, பாலவிகாஸ் வகுப்பில் அடிக்கடி செய்யப்படும் போது, ​​குழந்தைகளுக்கு எளிதாகவும் வேடிக்கையாகவும் கருத்துகளை மனப்பாடம் செய்ய உதவுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: