நினைவாற்றல் ரயில்

Print Friendly, PDF & Email

நினைவாற்றல் ரயில்

விளையாட்டின் நோக்கம்:

‘யாத்திரை’ என்பது குழந்தைகள் பல்வேறு புனித ஸ்தலங்களின் பெயர்களையும் அவற்றுடன் தொடர்புடைய தெய்வங்களையும் பக்தியுடனும் மரியாதையுடனும் நினைவுகூரும் ஒரு குழுச் செயலாகும். இது நமது மாறுபட்ட மற்றும் வளமான பாரம்பரியத்தின் தனித்துவத்தையும் வலியுறுத்துகிறது.

கற்பிக்கப்படும் குணங்கள்:
  • கற்பனை
  • கவனம்
  • நினைவாற்றல்
  • பக்தி
  • ஆர்வம்
விளையாட்டு:
  1. குரு குழந்தைகளை ஒரு வட்டவடிவில் அமரச் சொல்கிறார்.
  2. அவர் ஒரு உதாரணத்தின் உதவியுடன் செயல்பாட்டை விளக்குகிறார்.
  3. முதல் குழந்தை “நான் பூரிக்கு யாத்திரை சென்றேன், ஜகன்நாதரை தரிசனம் செய்தேன்” எனச் சொல்கிறது.
  4. ஒவ்வொரு குழந்தையும் ஒரு புனித ஸ்தலத்தின் பெயரையும் அதனுடன் தொடர்புடைய தெய்வத்தையும் உச்சரிப்பதன் மூலம் செயல்பாடு இந்த முறையில் தொடர்கிறது.
  5. ஏற்கனவே குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு புனித ஸ்தலத்தின் பெயரை திரும்பச் சொல்லும் அல்லது தான் சென்ற புனித தலத்தின் பெயரை நினைவுபடுத்த முடியாத குழந்தை விளையாட்டிலிருந்து வெளியேற வேண்டும்.
குருக்களுக்கு குறிப்புகள்:
  • இந்த புனித ஸ்தலங்களின் முக்கியத்துவம் குறித்த ஒரு வகுப்பு விவாதத்தை விளையாட்டுக்குப் பின் நடத்தலாம்.
  • குழந்தைகள் வெவ்வேறு கோவில்களுக்குச் சென்ற போது ஏற்பட்ட நேரடி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கலாம்!!
  • ஆன்லைனுக்கும் பொருந்தும் !!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: