ப்ரஶாந்தி வாஹினி தொகுப்புகள்
ப்ரஶாந்தி வாஹினியில் பகவான் கூறுவதாவது:
இறைவனது கருணையினால் ஆசிர்வதிக்கபட வேண்டுமென்றாலும் கூட ஒருவர், அமைதியுடன்
பொறுமை காக்க வேண்டும். ஆன்மீக சாதனையின் பலனை, பொறுமை ஒன்றே பெற்றுத்தரும்.
இரவிலும்,பகலிலும் சாந்தி மந்திரங்களிலும் கூட, இந்த போதனையை உங்கள் பயிற்சியில்
சேர்த்துகொள்ளுங்கள்.
அஸதோ மா ஸத் கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர்மா அம்ருதம் கமய
இதுவே சாந்தி மந்திரம். இதற்கான பொருள் பல்வேறுபட்டவர்களால், பல்வேறு விதமாகக் கூறப்படுகிறது
சில விரிவாகவும், சில சாராம்சமாகவும் உள்ளன.
- ஓ இறைவா, நான் இவ்வுலகாயத பொருட்களின் மூலம் ஆனந்தத்தினை அடைகின்ற போது, என்னை இந்த உண்மையற்ற பொருட்களை மறக்கச்செய்து நிரந்தரமான ஆனந்தத்தினை அடைய வழி
காட்டுங்கள்.” இதுவே முதல் பிரார்த்தனை. -
“ஓ இறைவா, இவ்வுலகப்பொருட்கள் என்னைக் கவர்கின்ற போது, எங்கும் நிறைந்த, உண்மைப்பொருளான ஆத்மாவை மறைக்கின்ற மாயையான இருட்டினை அகற்றுங்கள்.”. இதுவே இரண்டாவது பிரார்த்தனை.
- ஓ இறைவா, உங்கள் பேரருளால், ஒவ்வொரு பொருளிலும் நிறைந்திருக்கும் ஆன்ம ஒளியினை உணர்ந்ததன் விளைவாக, அழிவற்றதான, பரமானந்தத்தினை அடைய எனக்கு ஆசிர்வதியுங்கள்.” இது மூன்றாவது
பிரார்த்தனை. இதுதான் இந்த மந்திரத்தின் உண்மையான பொருள்.
உண்மையான பக்தன் எப்போதும் இறையுணர்விலேயே ஆழ்ந்திருப்பான். அவனுக்குத் தனது சொந்த
சுக துக்கங்களை கவனிக்க நேரமில்லை. இறைவனை அடைவது ஒன்றே அவனது எண்ணம்.
உதாரணங்களின் மூலமாக அன்றி, இந்த இயல்பைப் புரிந்துக்கொள்வது கடினம். தன் தாயைக் காணாத சிறு
குழந்தை “ அம்மா, அம்மா” என்று பயந்து கதறிக்கொண்டு ஓடி வருகிறது. தாயானவள், அதனைத் தோளில்
தூக்கி மடியில் கிடத்துகிறாள். குழந்தை அழுகையை நிறுத்துகிறது, பயத்திலிருந்து விடுபடுகிறது.
ஆனால் அந்த குழந்தையால், முந்தைய பயந்த நிலைக்கும், தற்போதைய நிம்மதிக்குமிடையேயான
வித்தியாசத்தை உணர முடியுமா? இல்லை. அப்படி செய்ய வேண்டிய தேவையுமில்லை.
அவ்வாறே, எவனொருவன், இறைவனுக்கு சேவை செய்ய விரும்புகிறானோ, அவன் அப்படிபட்ட
பொன்னான நேரம் வரும்போது, அதில் மூழ்கிப்போகிறான். அந்த நிலையில் எந்த சஞ்சலமும், துன்பமும்
அவனுக்கு இடையூறு விளைவிக்காது. கவலையும் துன்பமும் முக்தி நிலையை அடையும் வரைதான்.
பின்னர் அனைத்து கவனமும் அனுபவம் பக்கம் திருப்பப்படுகிறது. கடந்த கால போராட்டங்கள் மறந்து
போகின்றன.
Ref: http://saibaba.was/vahini/prashanthivahini.html