வைகுந்தம் எங்கு உள்ளது
ஒரு சமயம் மிகச்சிறந்த புலவர் ஒருவர், அரசரின் முன்னிலையில், அறிஞர்கள் நிறைந்த அவைதனில், பாகவதத்திலிருந்து ‘கஜேந்திர மோக்ஷம்’ என்ற கதையை சொல்லத் துவங்கினார்.
முதலையின் கொடூரப் பிடியில் மாட்டிக் கொண்ட யானை எழுப்பிய அபயக் குரலைக் கேட்ட இறைவன் தான் செல்லும் காரணத்தை தன் தேவியரிடம் கூடக் கூறாமல், வைகுண்டத்திலிருந்து எவ்வாறு விரைந்து புறப்பட்டார் என்பதை புலவர் உருக்கமாக விவரித்துக் கொண்டிருந்தார்.
திடீரென அரசர் இடைமறித்து, ‘வைகுண்டம் எவ்வளவு தொலைவில் உள்ளது’ எனக் கேட்கவும், புலவர் விடை அறியாது விழித்தார். அரண்மனையில் இருந்த, கற்றறிந்த பிற அறிஞர்களுக்கும் விடை தெரியவில்லை.
Bஅப்போது அரசருக்குப் பின்னால் விசிறிக் கொண்டு நின்றிருந்த பணியாள் தான் விடை கூறுவதாகப் பணிவுடன் தெரிவித்தான். புலவர் அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும், அரசர் பணியாளரைப் பேச அனுமதித்தார். ‘அரசே! யானையின் அழுகுரலைக் கேட்கும் தொலைவில் வைகுண்டம் உள்ளது’ என்று கூறினான்.
ஆம்! தம் பக்தனின் அழுகுரலையோ, முணுமுணுப்பையோ, அல்லது பெருமூச்சினையோ கேட்கும் தூரத்திலேயே இறைவன் உள்ளார். தம் குழந்தையின் அழுகுரலை விரைந்து கேட்கும் தாய் போல பக்தனின் வருத்தம் நிறைந்த அழுகுரலைக் கேட்கும் தூரத்திலேயே வைகுண்டம் உள்ளது. கல்வி அறிவற்ற சாதாரண பணியாளன், இறைவன் எங்கும் நிறைந்தவர், இரக்கமே வடிவானவர் என்பதை ஒரு நொடியில் புரிந்து கொண்டான்.
கடவுள் எங்கும் நிறைந்தவர். கருணையின் வடிவமானவர்.
[Ref: China Katha – Part 1 Pg:130]
Illustrations by Ms. Sainee &
Digitized by Ms.Saipavitraa
(Sri Sathya Sai Balvikas Alumni)