ஸ்வாமிக்கு அருகிலா, தொலைவிலா
- குழந்தைகளிடம், நாம் கைகளால் செய்யக்கூடிய பலவித செயல்களைப் பட்டியலிடச் சொல்லவும்.
- அந்தச் செயல்களை நல்ல செயல்கள், தீய செயல்கள் என்று வகைப்படுத்தச் சொல்லவும்.
- அந்தச் செயல்களைத் தனித்தனியாக ஒவ்வொரு துண்டுக் காகிதத்தில் எழுதச்சொல்லி, தனித்தனி சீட்டுகளாக மடிக்கவும்.
- அத்தனை சீட்டுகளையும் ஒரு பெட்டியில் இட்டு மூடி, நன்கு குலுக்கி விடவும்.
- ஒவ்வொரு குழந்தையையும் பெட்டியிலிருந்து ஒரு சீட்டை எடுக்கச்சொல்லவும்.
- நல்ல செயல்கள் எழுதப்பட்டிருந்த சீட்டுகளை எடுத்த குழந்தைகளை கடவுள் படத்தின் அருகாமையில் நிற்கச்சொல்லவும்.
- தீய செயல்கள் எழுதப்பட்ட சீட்டை எடுத்த குழந்தைகளை கடவுள் படத்தின் அருகிலிருந்து விலகி எதிரே அறையின் மறுமுனையில் நிற்கச் செய்யவும்.
- கடவுள் படத்திலிருந்து விலகியுள்ள குழந்தைகளுக்கு அதிக சந்தர்ப்பம் கொடுத்து, அவர்கள் கடவுள் படத்திற்கு அருகில் வரும் வரை, ஒரு சுற்றுக்கு ஒரு முறை என்று மீண்டும் மீண்டும் சீட்டு எடுக்கச் சொல்லவும்.
நல்ல செயல்கள் | தீயசெயல்கள் |
---|---|
கடவுள் நாமம் எழுதுதல் | சுவற்றில் தேவை இல்லாதவைகளைக் கிறுக்குதல் |
பொருட்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுதல் | அனுமதியின்றி பிறர் பொருட்களை அபகரித்தல் |
பிறரை ஊக்கப்படுத்த, கை தட்டுதல் | பிறர் கீழே விழும்போது கை தட்டி சிரித்தல் |
பிறருக்கு உதவி புரிதல் | பிறரை அடித்து, கிள்ளி துன்பம் கொடுத்தல் |
பள்ளியிலும்,பாலவிகாஸ் வகுப்புகளிலும் குறிப்பு எடுத்தல் | பரிட்சையில் பார்த்து எழுதுதல்(copy அடித்தல்) |
வீட்டு வேலைகளைப் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளுதல். | உணவை வீணாக்குதல், எறிதல் |
தாவரங்களுக்கு நீர் ஊற்றுதல் | மலர்களையும் இலைகளையும் தேவை இன்றி பறித்தல் |
நீதி
எப்பொழுதும் நல்லதையே செய்.
நல்ல செயல் செய்வதன் மூலம் நாம் கடவுளை நெருங்க முடியும்.
கைகளை எப்போதும் உருப்படியான செயல்களைச் செய்யப் பயன்படுத்து. பிறருக்கு உதவி செய்.