தெய்வீக சொற்பொழிவுகளின் தொகுப்பு
கிருஷ்ணர் தன்னுடைய தெய்வீக லீலைகள், அற்புதங்கள் நிகழ்த்தும் ஆற்றல் மற்றும் தன் அளப்பரிய அன்பு ஆகியவற்றால் அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொள்பவர்; புலன்களினால் ஆசைகளை நம் மனதிலிருந்து அகற்றுபவர். பக்தர்களை வசீகரிக்கும் இந்தத் திறன் தெய்வீகத்திற்கே உரியது என்று பாபா கூறுகிறார். மேலும் இந்த தெய்வீக கவர்ச்சி உண்மையற்றதை நம்ப வைக்கவோ அல்லது தவறான பாதைக்கு நம்மை அழைத்துச் செல்லவோ அல்ல; மாறாக, நல்லியல்புகளை வளர்த்துக் கொள்வதற்கும் நம்மைச் சீர்திருத்திக் கொள்வதற்கும், வரையறுத்துக் கொள்வதற்குமே ஆகும் என்கிறார்.
கிருஷ்ணரின் பண்படுத்தும் திறன்:
‘கிருஷ்ணா’ என்கிற பெயர், பயிர்களின் வளர்ச்சிக்காக நிலத்தைப் பண்படுத்துதல் என்ற பொருளைக் குறிக்கும் ‘கிருஷ்’ என்னும் வேர்ச் சொல்லிலிருந்து வந்ததாகும். அதனால் இப்பெயர் மனித மனத்தினின்றுத் தீய குணங்கள் என்னும் களைகளை அகற்றி, நல்லியல்புகளான தன்னம்பிக்கை, தைரியம், மகிழ்ச்சி எனும் விதைகளை விதைப்பவர் என்று பொருள்படும். மேலும் அவர் தன் பக்தர்களை அவர்கள் தன் இருப்பை உணர்ந்தறியுமாறும் ஆனந்தத்தில் மூழ்கித் திளைக்குமாறும் செய்கிறார்.
நவநீத சோரம்
கிருஷ்ணன் நவநீத சோரம் (வெண்ணையைத் திருடுபவன்) என்று வர்ணிக்கப்படுகிறான், கிருஷ்ணன் திருடுகின்ற வெண்ணெய் எது ? அது பக்தர்களின் ஹ்ருதயம் ஆகும். பக்தன் தன் மனதைக் கிருஷ்ணனுக்கு அளிக்கிறான்; கிருஷ்ணன் அதை ஏற்றுக் கொள்கிறான், அதை எவ்வாறு திருட்டு என்று வர்ணிக்கலாம்? ஒரு நபர் வேறொருவரிடமிருந்து அவருக்குத் தெரியாமல் எதையாவது எடுத்துச் சென்றால் மட்டுமே அவரைத் திருடன் என்று அழைக்கலாம். ஆனால் கிருஷ்ணன் உன்னிடம் உன் அன்பை கேட்கிறான், நீ கொடுக்கும் பொழுது பெற்றுக் கொள்கிறான். திருடன் எனும் சொல் முழுமையான அன்பால் பக்தர்களால் கிருஷ்ணருக்கு அளிக்கப்பட்ட அடைமொழியாகும். இங்கு அதற்கென்று உரிய அர்த்தம் அல்ல. பக்தர்கள், தனது பக்தி மற்றும் இறைவனைப் புரிந்து கொள்ளும் அளவிற்கேற்ப பல்வேறு வழிகளில் இறைவனை வர்ணிக்கின்றனர். இவை சொந்த அனுபவங்களின் வெளிப்பாடுகளே. பக்திக்கு எந்த ஒரு அளவும், வரைமுறையும் கிடையாது.
“இதயத்தைத் திருடுபவர் ஸ்வாமி”
ஸ்ரீ சத்யசாய் மேல்நிலைப் பள்ளியின் பல நிகழ்ச்சிகளுக்கு ஸ்வாமி வருகை புரிவார். ஸ்வாமி ஒவ்வொரு வடிவத்தின் அருகிலும் பொறுமையாக நின்று அது எதைப் பற்றியது என்பதை மாணவர்களிடம் விவரிக்கச் சொல்லி கேட்டார். 1944, 95, 96 வருடங்களில் நடந்த மூன்று கண்காட்சிகளுக்கும் அவர் வந்தார். ஒவ்வொரு கண்காட்சிக்கும் சில மணிநேரங்களை செலவிட்டார்.
ஒரு கண்காட்சியின் போது அனைவரும் அறிந்த ‘திருட்டு அலாரம்’ வைக்கப்பட்டிருந்தது. அந்த திருட்டு அலாரம் மாதிரி வடிவத்தின் அருகே அதைப் பற்றி விவரிக்க நின்றிருந்த பையன், ஸ்வாமியிடம் அதனுள் கை வைக்குமாறு கேட்டுக் கொண்டான். ஸ்வாமியும் அந்த மாதிரி வடிவத்தினுள் தன் கையை வைத்தார். ஆனால் மணி அடிக்கவில்லை. பிறகு ஸ்வாமி அந்த பையனிடம் அவன் கையை வைக்குமாறு கேட்டார், அவன் கை வைக்கும்போது அலாரம் மணி அடித்தது. இந்த ஆச்சரியம் இருமுறை நிகழ்ந்தது , அப்பொழுது ஸ்வாமி அழகாகக் கூறினார், “நான் சோரன் அல்ல; நான் சித்தச் சோரன்” (நான் திருடன் அல்ல, உங்கள் மனதைத் திருடுபவன்).
[தகவல்: http://media.radisai.org/journals/vol-06/01Aug08/07-principal.html]