புத்த மதம் – முக்கிய உபதேசங்கள்: நான்கு உயரிய உண்மைகள்:
- வாழ்வு துன்ப மயமானது.
- ஆசைகளே துன்பத்தின் மூலமும்,காரணங்களுமாகும்.
- ஆசைகளை அடக்க முடியும்:துன்பத்தை நிறுத்த முடியும்.
- எண்வகை வழிமுறை, துன்பத்தை நிறுத்த வல்லதாகும்.
நிர்வாணம் அடைய எண்வகை வழி:
- நேர்மையான அறிவு/பார்வை (நான்கு உயரிய உண்மைகளைப் பற்றிய).
- நேர்மையான உறுதி/இலட்சியம்.
- நேர்மையான வாக்கு.
- நேர்மையான நடத்தை.
- நேர்மையான வாழ்க்கை முறை.
- நேர்மையான முயற்சி.
- நேர்மையான மனோபாவம்(நோக்கம்/எண்ணம்).
- நேர்மையான தியானம்.
நேர்மையான உறுதி என்பது கீழ்க்கண்ட பஞ்ச சீலங்களைக் குறிப்பிடுவதாகும்.
பஞ்ச சீலங்கள்(ஐந்து ஒழுக்கங்கள்):
- எந்த உயிருக்கும் துன்பம் விளைவிப்பதை விலக்கிக் கொள்வேன். (அஹிம்சை)
- பொய்மையிலிருந்து என்னை விலக்கிக் கொள்வேன்.(சத்யம்)
- திருடுவதிலிருந்து என்னை விலக்கிக் கொள்வேன்.(ஆஸ்தேயம்)
- புலனின்பத்திலிருந்து என்னை விலக்கிக் கொள்வேன்.(பிரம்மச்சர்யம்)
- போதைப் பொருள்களில் இருந்து என்னை விலக்கிக் கொள்வேன்.