கிறிஸ்தவ மதம் – முக்கிய உபதேசங்கள்:
- உங்கள் எதிரிகளை நேசியுங்கள்.
- உங்களை வெறுப்பவர்களுக்கும் நல்லது செய்யுங்கள்.
- உங்களைச் சபிப்பவர்களுக்கு ஆசிர்வாதம் செய்யுங்கள்.
- உங்களைத் தவறாக நடத்துபவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.
- ஒருவன் உங்கள் ஒரு கன்னத்தை அடித்தால்,உங்கள் மற்றொரு கன்னத்தையும் அடிக்க விடுங்கள்.பிரதியாக எதையும் எதிர்பார்க்காதீர்கள்.
- பரமண்டலத்தில் இருக்கும் பரமபிதா கருணையுடன் இருப்பது போல, நீங்கள் கருணையுள்ளத்துடன் இருங்கள்.
- உங்களுக்கு மற்றவர் செய்வதில் எதனை நீங்கள் விரும்புவது இல்லையோ, அதனை மற்றவர்களுக்கு நீங்கள் செய்யாதீர்கள்.
- மற்றவர்களை எடை போடாதீர்கள்,உங்களை முதலில் திருத்திக் கொள்ளுங்கள்.
- மற்றவர்களைப் பற்றித் தீர்ப்பு கூறாதீர்கள்:இறைவன் உங்களைப் பற்றித் தீர்ப்புக் கூற மாட்டார்.
- மற்றவர்களை மன்னியுங்கள்:இறைவன் உங்களை மன்னிப்பார்.
- நான் உங்களை நேசிப்பது போல நீங்கள் மற்றவர்களை நேசியுங்கள்.
- மனிதனிடமும் விலங்கினிடமும் பறவையினிடமும் நன்கு அன்பு செலுத்துபவன், இறைவனை நன்கு தொழுதவனாகிறான்.
- மனம் வருந்தித் திருந்திய ஒரு பாவிக்காக பரமண்டலத்தில் மகிழ்ச்சி அதிகம் இருக்கும்.
- உண்மையில் இறைவன் மனிதனின் உள் உணர்வில் உறைகின்றார் என்ற அறிவு நிலையே பர மண்டலம்.பர மண்டலம் என்பது ஏதோ ஒரு இடமல்ல,தனக்குள் அனுபவிக்கப்படும் ஆன்மிக நிலை.
கிறிஸ்தவம் – பிரார்த்தனை