ஓம் நமோ பகவதே- மேலும் படிக்க
எண்ணம், சொல், செயல் இவற்றின் சக்தி – துருவனின் கதை – சத்யசாயி அருளமுதம்
பாகவதத்தில் துருவனின் கதா பாத்திரம் உங்கள் அனைவருக்கும் பரிச்சயமானதே. உலக அறிவு ஏதுமற்ற ஐந்து வயது பாலகன் அவன். தன் தாயினால் கொடுக்கப்பட்டு, தெய்வ முனிவர் நாரதரால் வலுவூட்டப்பட்ட திட நம்பிக்கை ஒன்றையே துணையாகக்கொண்டு கடவுளைக் காணக் கடுந்தவம் செய்யக் கானகம் சென்றான்.
பெரியோரின் வார்த்தையில் நாம் எப்போதும் நம்பிக்கை வைக்க வேண்டும். தெய்வீக முனிவர் நாரதரிடம் வைத்த நம்பிக்கை அவனுக்கு கடவுள் காட்சியைக் காண உதவியது. ஆனால். மஹாவிஷ்ணு அவன் முன் தோன்றி அவனுக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது ,அந்த பாலகன் கூறினான், “இறைவா, நான் எங்கிருக்கிறேன் என்று உங்களுக்கு தெரிந்திருக்கக்கூடும். மேலும் இந்த அடர்ந்த கானகத்திற்குள்ளும் வந்துள்ளீர்கள். எனக்கு என்ன வேண்டும் என்று தங்களுக்குத் தெரியாதா?”
கடவுள் அறிவற்றவர் அல்ல. அவர் அறிவில் சிறந்தவர்களுக்கெல்லாம் மேலானவர் என்று இறைவன் பதிலளித்தார், “நீ எங்கிருக்கிறாய்; உன் விருப்பம் என்ன; என்பதெல்லாம் எனக்குத் தெரியும். ஆனால் எனது வழிமுறைகள் தீர்மானமானவை. மனிதனை அறிந்தால் மனித குலத்தைச் சரியாக அறிய முடியும், எண்ணம், சொல், செயல் ஒத்திசைந்திருப்பவனே மனிதன் எனப்படுவான். இவ்வாறு நீ உள்ளாயா என அறிந்த பின்னரே நான் உனது ஆசையைப் பூர்த்தி செய்ய இயலும்”.
நீ உன் தந்தையின் மடியில் அமர்வதற்காக இறைவனை ப்ரார்த்தித்து அவன் அருளை வேண்டுவேன் என வீட்டிலிருந்த போது கூறினாய். அவ்வாறே தவமும் செய்தாய். ஆனால் தற்போது நீ முதலில் நினைத்ததைக் கேட்கவில்லை. நீ எதை உண்மையாக விரும்புகிறாய் என்பதைச் சோதிக்க விரும்புகிறேன்..
துருவன் விடையளித்தான், “ஓ, இறைவா, முதலில் என்னுடைய விருப்பம், மதிப்பில்லாத ஒரு கண்ணாடித்துண்டைக் கேட்பதற்கு ஒத்திருந்தது. ஆனால் தங்கள் காட்சியோ வைரத்துக்கு ஒப்பானது. கன்ணாடி துண்டினைத் தேடிய எனக்கு வைரம் கிடைத்தது. நான் எவ்வளவு அதிருஷ்டமானவன். எனக்கு கண்ணாடித்துண்டு வேண்டாம்.
இறைவன் கூறினார் “உனது எண்ணம், சொல், செயல் இவற்றில் இரண்டு ஒத்திருக்கிறது. ஆனால் நீ வேறாயிருக்கிறது. நன்று. இரண்டு ஒன்றாயிருக்கிறது. ஆகவே, நீ சென்று உன் நாட்டை ஆள வரமளிக்கிறேன் என்றார்.
அனைத்திலும் இறைவன், எண்ணம், சொல், செயல் இவற்றின் ஒத்திசைவைக் காண விரும்புகிறார். இம்மூன்றின் ஒத்திசைவு இல்லாததை அவர் விரும்புவதில்லை. கடுந்தவம் செய்தும் பகவான் விஷ்ணுவின் காட்சியைக் கண்டும் அவனால் விடுதலையைப் பெற முடியவில்லை, என்பதனை நாம் கவனிக்க வேண்டும். இதன் காரணம் என்னவெனில், அவனது சொல்லானது, அவனது எண்ணம், செயல் இவற்றிலிருந்து வேறுபட்டிருந்தது தான். எனவே தான் சொற்களை நாம் மிக கவனமாக உபயோகிக்க வேண்டும்