என் பிரார்த்தனை
- குருமார்கள், முழு அர்த்தத்துடன் ஸ்லோகத்தை விளக்கவும்.
- பின்னர், ஸ்லோகத்தின் அர்த்தத்திலிருந்து முக்கிய சொற்றொடர்களை ஒரு பலகையில் எழுதவும். உதாரணம்:- மங்களகரமான, எல்லாவிதமான
செல்வங்கள், சிவனின் மனைவி, விஷ்ணுவின் சகோதரி, வெற்றியை அளிப்பவள் மற்றும் பல. - பிறகு ஒரு சிறுமியை அழைத்து, பார்வதி தேவியைப் போல நடித்துக் காட்டச் சொல்லவும். (குருமார்கள் ஒரு சிறுமியை பார்வதி தேவி போன்று உடை அலங்காரம் செய்யலாம் அல்லது பார்வதி தேவியின் படம் வைக்கலாம்).
- மற்ற குழந்தைகளைத் தனித்தனியாகவோ அல்லது 2 அல்லது 3 பேர் கொண்ட குழுவாகவோ சேர்ந்து, பலகையில் எழுதப்பட்ட முக்கியத் தொடர்களை வைத்து, சொந்தமாகப் பிரார்த்தனை எழுதச் சொல்லவும். உதாரணத்திற்கு – “தாயே ! நீதான் சிவனின் மனைவி, விஷ்ணுவின் சகோதரி, வெற்றியைத் தந்து அருள்வாயாக.!” என்றிருக்கலாம். மற்றொரு உதாரணம் – “மங்களகரமானவளே, உன்னிடம் சரணடைகிறேன். எனக்கு அனைத்து விதமான செல்வங்களையும் தந்தருள்வாய்” என்றமைக்கலாம்.
- பின்னர் அனைத்து குழந்தைகளையும் தனியாகவோ, குழுக்களாகவோ அவரவர் எழுதியப் பிரார்த்தனையை பக்தியோடு படித்து, பார்வதி தேவிக்கு மலர்கள் சமர்ப்பிக்கச் சொல்லவும்.
கருத்துச் சுருக்கம்
இது, ஸ்லோகத்தின் பொருளை நன்கு புரிந்துகொண்டு நினைவில் வைத்துக்கொள்ள குழந்தைகளுக்கு உதவும் ஓர் அற்புதமான செயற்பாடு. இது குழந்தைகளுக்கு, ஒரு வேடிக்கையான பயிற்சியாகவும், தேவியின் மேல் பக்தியை வளர்ப்பதாகவும் அமைந்துள்ளது. மேலும் தேவி ஸ்லோகம் எடுத்துக்காட்டும் நல்ல குணநலன்களையும் குழந்தைகளுக்குப் புரிய வைக்கும். அதே சமயம், கடினச் சொற்களைத் திணித்து அவர்களை சிரமப்படுத்தக் கூடாது.
இந்த செயற்பாடு முடிந்தவுடன், அனைத்து குழந்தைகளையும் சேர்ந்து, இந்த ஸ்லோகத்தை அதன் பொருளோடு கூறச் சொல்லலாம்.