ஓம் ஸ்ரீராம் – செயற்பாடு
சாய்ராம் விளையாட்டு
குழந்தைகள் வட்டவடிவமாக நிற்க வேண்டும்.விளையாட்டின் தலைவன் தான் நடுவர் (ஜட்ஜ்). எல்லா குழந்தைகளும், வட்டத்தின் உட்புறத்தை நோக்கி,கையை நீட்ட வேண்டும். உள்ளங்கை மேற்பக்கம் இருக்க வேண்டும் சாயி என்று சொல்லும்போது உள்ளங்கை மேற்பக்கம்(வானத்தை பார்த்தபடி) இருக்க வேண்டும். ராம் என்று சொல்லும்போது உள்ளங்கையை கவிழ்த்து போட வேண்டும்(தரையை பார்த்த படி) இதை மாற்றி செய்தால் அவுட். அவுட் அனால் அவன் வெளியேறவேண்டும் ராம்- சாய்- சாய் ராம் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். கடைசியில் மீந்து இருப்பவனே வெற்றியாளன்.