ATTRACTION OF KRISHNA
He attracts every heart by His divine plays, miracle powers, and by His love and draws the mind away from sensory desires. Baba says this attitude of attraction is characteristic of Divinity and adds that the Divine attracts not to deceive or mislead us, but to transform, reconstruct, and reform us.
THE CULTIVATING ASPECT OF KRISHNA
The name ‘Krishna’ also comes from the root ‘Krish’ which means ‘to cultivate, as a field, for growing crops’. The name therefore means ‘He who removes the weeds of negative tendencies from the heart of humans and sows seeds of positive traits such as faith, courage and joy’. Krishna cultivates the harvest of joy in the hearts of His devotees and makes them aware of His being Existence-Knowledge-Bliss.
கிருஷ்ணரைப் போலவே ஸ்வாமியும்
கலி சாரதாதேவி என்னும் சிரத்தையான பக்தியுடைய ஒரு பெண்மணியின் அனுபவத்தை இங்கு காண்போம். நம் பகவான் ஷிர்டி சாயியாய் அவதரித்த போது அவருடன் இருந்த இப்பெண், பின்னர் பல காலங்களுக்குப் பிறகு புட்டபர்த்திக்கு வந்து பகவானை வந்தடைந்தாள். ஆக, இப்பெண் பாபாவின் இரு அவதாரங்களிலும் அவர் அருகாமையில் இருக்கும் பாக்கியத்தை அடைந்தவள் ஆவாள்.
சுவாமி அவளை ‘பெரிய பொட்டு’ எனப் பொருள்படும்படி ‘பெத்த பொட்டு’ என்று பிரியமுடன் அழைப்பார். அது இந்து சமயப் பெண்கள் தங்களின் நெற்றியில் வட்ட வடிவமாக சிவப்பு நிறத்தில் அணிந்து கொள்ளும் பெரிய திலகம் என்பதைக் குறிக்கும். அவள் ஒரு சிறந்த பெண்மணி. தன் இறுதிக்காலம் வரை பிரசாந்தி நிலையத்திலேயே வசித்து வந்தாள் ஸ்வாமியிடம் மிகுந்த பக்தி கொண்டவள். ஸ்வாமியும் அவளிடம் பிரியமுடன் இருந்தார். அவள் இளமைப் பருவத்தில் கிருஷ்ணரிடம் மிகுந்த பக்தி உடையவளாக இருந்தாள். கிருஷ்ணரின் விக்ரகத்தைப் பூஜித்து வந்தாள். அவளுடைய வாழ்க்கை முழுவதும் பலவிதமான தெய்வீக அனுபவங்கள் நிறைந்திருந்தன. அவள் நம் அன்பு ஸ்வாமியிடம் வந்த பின்பு, அவளுக்கு ஸ்வாமியைத் தனக்கு மிகவும் பிரியமான கோபாலனாகக் காணவேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஆனால், அதை ஸ்வாமியிடம் அவள் ஒருபோதும் வெளிக்காட்டியதில்லை.
ஒரு முறை ஸ்வாமி அவளிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, அவள் ஸ்வாமியின் திருவடிகளைத் தன் இரு கரங்களாலும் பிடித்துக்கொண்டே பாபா தான் அன்னை, தந்தை, சொந்தம், பந்தம், நட்பு, அறிவு, செல்வம் மற்றும் எல்லாமும் அவரே; அதனால் தன் ஹ்ருதயத்தில் வசிக்கும் அவரே தன்னை இரட்சிக்கவேண்டும் என்று பொருள் படும்படியான ஒரு ஸ்லோகத்தை உச்சரித்துக் கொண்டே பிரார்த்தனை செய்தாள். அப்பொழுது என்ன ஆயிற்று தெரியுமா? பெத்தபொட்டுவிடமே கேட்கலாம்.
அவளுடைய சுய சரித்திரத்தில் இவ்வாறு எழுதியிருந்தாள், “நான் கண்களை மூடிக்கொண்டு என் தலையை பாபாவின் திருவடிகளில் வைத்து நமஸ்கரித்துக் கொண்டிருந்தேன், அப்பொழுது அவருடைய மஞ்சள் நிறப் பட்டால் மூடிய முழங்கால் வரையிலான கால்களை என்னால் பார்க்க முடிந்தது. ஆனால் நான் பார்த்தது, மஞ்சள் நிறப் பட்டும், காலில் கொலுசும் அணிந்த ஆறு வயது சிறுவனானக் கிருஷ்ணரைத் தான்”. அப்புறம் சிறிதுநேரம் கழித்து எனக்கு சுயநினைவு வந்தபோது ஸ்வாமியிடம் நான், “ஸ்வாமி! ஏன் இப்படிச் செய்தீர்கள்? ஏன் எனக்கு முழு தரிசனமும் தந்திருக்கக்கூடாது? என்று கேட்டேன். அதற்கு ஸ்வாமி, அது போதும். நான் பாதி தரிசனம் தந்ததற்கேப் பாதி மரணமடைந்து விட்டாய்; முழு தரிசனம் தந்திருந்தால் நீ முழுவதுமாக மரணம் எய்தியிருப்பாய்” என்று கூறினார்.