எனது பிரார்த்தனை
- குரு, முதலில் ஸ்லோகத்தின் முழுமையான அர்த்தத்தை விளக்க வேண்டும்.
- பிறகு முக்கியமான வார்த்தைகளுக்கான அர்த்தங்களைக் கரும்பலகையில் எழுதிப் போட வேண்டும். உதாரணமாக: உமாவின் துணைவன், தேவ குரு, பாம்புகளால் அலங்கரிக்கப்பட்டவர், சூரியன், சந்திரன் மற்றும் அக்னியைக் கண்களாகக் கொண்டவர்.
- பிறகு, குரு வகுப்பில் ஒரு மாணவனை சிவபெருமானாக வேஷம் போடலாம், அல்லது ஒரு சிவன் படத்தை வகுப்பில் வைக்கலாம்.
- பின்னர், குழந்தைகளை ஒரு குழுவாகவோ அல்லது தனித்தனியாகவோ (வகுப்பின் குழந்தைகள் எண்ணிக்கைக்கேற்றபடி) கரும்பலகையில் உள்ள வார்த்தைகளை உபயோகித்து சிவனின் மேல் ஒரு பிரார்த்தனை எழுதச்சொல்லலாம். உதாரணம்- உமாவின் துணைவனை வணங்குகிறேன், தெய்வ குருவை வணங்குகிறேன், அனைத்து உயிர்களையும் படைத்தவர், பாம்பாபரணங்களை அணிந்தவர் என்னை காப்பாற்றுவாராக.
- பிறகு, குழந்தைகள் ஒருவர் பின் ஒருவராக அல்லது ஒவ்வொரு குழுவாகத் தன் ப்ரார்த்தனையைக் கூறி, மலர்களை சிவனுக்கு அர்ப்பணிக்கலாம்.
சுருக்கமாக
இது ஒரு விளையாட்டுத்தனமானப் பயிற்சியே. சிவபெருமானிடம் பக்தி கொள்ளவும், இறைவன் உணர்த்தும் நற்பண்புகளைத் தெரிந்து கொள்ளவும் உதவும். இது குருப்-1 –மூன்றாம் வருட ஸ்லோகமாகையால் எவ்வளவு வார்த்தைகளை நினைவு கூற முடிகிறது என்று கவனிக்கலாம்.
பிறகு அனைவரும் சேர்ந்து உச்சரித்துப் பின்னர் பொருளையும் கூறலாம்.