வந்தே தேவம் உமாபதிம் ஸ்லோகம் – மேலும் படிக்க
வந்தே தேவம்
இறைவன், இப்பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, அழித்து ஆரம்ப நிலைக்குக் கொண்டு செல்கிறார்
சிவம் என்னும் தெய்வம், அழித்தல் மற்றும் மறைத்தல் ஆகிய சக்தியை உருவகிக்கிறது
இறைவனின் வைராக்கிய குணத்தைக் காட்டும் அவர், முழுதும் பற்றற்றவர். தன்னுடைய சங்கல்ப மாத்திரத்திலேயே இப்பிரபஞ்சத்தைப் படைத்த இத்தெய்வம் அதில் சிறிதளவிற்கும் ஏங்கியதில்லை.
இவரே சிவன், அதாவது மங்கள மானவர் என்று அழைக்கப்படுகிறார். இறைவனிடமிருந்து நம்மைப் பிரிக்கும் அனைத்து குணங்களையும் அழிக்கிறார். அதாவது மாயை, பேராசை, பெருமை, பொறாமை மற்றும் கோபம் இவற்றை விலக்கி, நமக்கு மங்களத்தை அருளுகிறார்.
ஒளி மயமானதும்,பரிசுத்தமானதும், பரமானந்தமானதுமானகைலாய மலையே இவரது இருப்பிடம்.
உருவகம்
அவரது சன்னியாச உருவம், அவரது வைராக்கியத்தையும்,முழுமையான பற்றற்ற நிலையையும் குறிக்கிறது
அவரது மூன்றாவது கண், ஞானத்தைக் குறிக்கிறது. சர்வ வியாபியாய்,சர்வ சாக்ஷியாய் எங்கும் நிறைந்து,அனைத்தையும் கவனிக்கிறார். உடலில் சாம்பல் பூசியுள்ளார்- தன் பக்தர்களின் பாவங்களைப் பொசுக்கி, அந்த சாம்பலையே, தான் அணிந்துள்ளார்
நாகங்கள் ஆன்மீக ஆற்றலைக் குறிக்கின்றன.
தலையின் ஜடாமுடியிலிருந்து வெளிப்படும் கங்கை, ஞான கங்கை. முனிவர்களிடமிருந்து, ஞானம் ஊற்றாய் வெளிப்படுதலைக் குறிக்கிறது. இதில் மூழ்கி எழுவது, எத்தனையோ பிறவிகளின் பாவத்தைப் போக்கி, மங்களத்தை அருளுகிறது.
கையிலுள்ள திரிசூலம், அவரே, இறந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய முக்காலத்திற்கும் அதிபதி. விண்வெளியின் மூன்று பரிணாமங்கள். அதாவது, பூ(பூலோகம்), புவ(புவர்லோகம்), ஸுவஹ(ஸ்வர்க்கலோகம்) லோகங்களுக்கும், மற்றும் இந்த உலகத்தை (இயற்கையை) ஆளும் சத்வ(சாந்தி நிலை) ரஜஸ் (உணர்ச்சி, குறிக்கோள், அமைதியின்மை ஆகிய நிலை) தமஸ் (அறியாமை, மற்றும் மந்தமான நிலை) ஆகிய மூன்று குணங்களுக்கும் தலைவர்.
பிச்சையெடுக்கும் திருவோடு அவர் இந்தப் பிரபஞ்சத்திற்கே, தலைவரானாலும், ஒவ்வொரு மனித இதயத்திலிருந்தும் அன்பு என்கிற பிச்சை கேட்டுத் திருவோடு ஏந்தி நிற்கும் பிச்சைக்காரனாகவேத் திகழ்கிறார். புலித் தோல்: மூர்க்கத்தனமானப் புலி, மிருகத்தின் தன்மையைக் குறிக்கிறது. சிவன், அந்தப் புலியைக் கொன்று, அதன் தோலை ஆடையாக அணிகிறார். இது, மிருகத்தன்மையை முற்றிலுமாக ஆட்கொள்பவர் என்பதைக் காட்டுகிறது.
பிறைச் சந்திரன், மனத்தைக் குறிக்கிறது. அவர் மனதையும் அடக்கி ஆள்பவராவார்.