யா குந்தேந்து
கேட்பொலி
ஸ்துதி வரிகள்
- யா குந்தேந்து துஷாரஹார தவளா யாஶுப்ர வஸ்த்ராவ்ருதா
- யா வீணாவர தண்டமண்டிதகரா யா ஶ்வேத பத்மாஸனா
- யா ப்ரம்மாச்யுத ஶங்கரப்ரப்ருதிபி: தேவை ஸதா வந்திதா
- ஸா மாம் பாது ஸரஸ்வதி பகவதி நி:ஶேஷ ஜாட்யா பஹா
விளக்கவுரை
எவளொருத்தி குந்தமலர், சந்திரன், பனி, முத்துமாலை (இவற்றைப் போன்று வெண்மையாக இருக்கின்றாளோ, எவள் வெண்மையான ஆடையை உடுத்தியிருக்கிறாளோ, எவள் உயர்ந்த வீணையின் தண்டினால் அலங்கரிக்கப்பட்ட கையை உடையவளோ, எவள் வெண்மையான தாமரையை இருக்கையாக உடையவளோ, எவள் ப்ரம்மா, விஷ்ணு, சிவன் முதலிய தேவர்களால் எப்போதும் வணங்கப்படுகிறாளோ, எவள் மிச்சமின்றி மந்தத்தன்மையை போக்கடிப்பவளோ, ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீரியம், தேஜஸ் ஆகிய ஆறு கல்யாண குணங்களையும் உடைய பகவதியான அந்த ஸரஸ்வதி தேவி என்னைக் காப்பாற்றட்டும்.
காணொளி
பதவுரை
யா | எவள் |
---|---|
குந்த | குந்தமலர் |
இந்து | சந்திரன் |
துஷார | பனி |
ஹார | மாலை |
தவளா | வெண்மையான |
யாகுந்தேந்து துஷாரஹார தவளா | எவளொருத்தி குந்தமலர், சந்திரன், பனி, முத்துமாலை (இவற்றைப் போன்று வெண்மையாக இருக்கின்றாளோ |
யா | எவள் |
ஶுப்ர | வெண்மையான |
வஸ்த்ர | ஆடை |
ஆவ்ருதா | அணிந்தவளோ |
யா ஶுப்ரவஸ்த்ராவ்ருதா | எவள் வெண்மையான ஆடை அணிந்திருக்கிறாளோ |
யா | எவள் |
வீணா | வீணை |
வர | உயர்ந்த |
தண்ட | வீணைத் தண்டு |
மண்டித | அலங்கரிக்கப்பட்ட |
கரா | கையை உடையவள் |
யா வீணாவரதண்ட மண்டிதகரா | எவள் உயர்ந்த வீணையின் தண்டினால் அலங்கரிக்கப்பட்ட கையை உடையவளோ |
யா | எவள் |
ஶ்வேத | வெண்மையான |
பத்ம | தாமரை |
ஆஸனா | இருக்கையுடையவள் |
யா ஶ்வேத பத்மாஸனா | எவள் வெண்மையான தாமரையை இருக்கையாக உடையவளோ |
யா | எவள் |
பிரம்மா | நான்முக ப்ரம்மா |
அச்யுத | விஷ்ணு |
ஶங்கர | சிவன் |
ப்ரப்ருதிபி: | முதலான |
தேவை: | தேவர்களால் |
ஸதா வந்திதா | எப்போதும் வணங்கப்படுகிறாளோ |
யா ப்ரம்மாச்யுத ஶங்கர ப்ரப்ருதிபி:தேவை ஸதா வந்திதா | எவள் ப்ரம்மா, விஷ்ணு, சிவன் முதலிய தேவர்களால் எப்போதும் வணங்கப்படுகிறாளோ |
ஸேஷம் | மிச்சம் |
நி:ஶேஷ | மிச்சமின்றி |
ஜாட்ய | மந்தத்தன்மை |
அபஹ | போக்கடிப்பவள்< |
ஸா | அவள் (அந்த) |
ஸரஸ்வதி | ஸரஸ்வதியானவள் |
மாம் | என்னை |
பாது | காப்பாற்றட்டும் |
நி:ஶேஷ ஜாட்யாபஹா ஸரஸ்வதி மாம்பாது | மிச்சமின்றி மந்தத்தன்மையை போக்கடிப்பவளான அந்த ஸரஸ்வதியானவள் என்னை காப்பாற்றட்டும் |
பகவதி | ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீரியம், தேஜஸ் ஆகிய ஆறு கல்யாண குணங்களையும் உடையவள் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 2
-
செயற்பாடு
-
மேலும் படிக்க