நடித்துக் காட்டு!
நோக்கம்:
இந்த எளிய, ஆனால் உன்னதமான விளையாட்டு, குழந்தைகளைக் கட்டாயமாக தங்கள் இருக்கைகளில் இருந்து எழச்செய்து, அவர்களின் வியத்தகு திறன்களை வெளிப்படுத்த ஒரு சிறந்த வழியாகும்.
தெய்வங்கள், துறவிகள் மற்றும் பிறரின் பெயர்களைக் குறிக்கும் வார்த்தையை விளக்க முயற்சிக்கும் இவ்விளையாட்டில், தொடர் சைகைகள் மற்றும் வெளிப்பாடுகள் (வாய்மொழியைத் தவிர) உள்ளடக்கிய வெறும் நடிப்பின் மூலம் கொடுக்கப்பட்ட வார்த்தை விளக்கம் செய்யப்பட வேண்டும், சிறந்த நடிப்பால் அந்த வார்த்தை மிகவும் தெளிவாக விளங்கும். பிற குழந்தைகள், அந்த வார்த்தையை எளிதில் யூகிக்க முடியும்.
மேலும், மற்றவர்களுடன் பழகும் போது முகபாவனைகள், உணர்ச்சிகள் மற்றும் உடல் மொழியைப் புரிந்துகொள்ளவும், படிக்கவும், விளக்கவும் இந்த விளையாட்டு அவர்களுக்கு உதவும். குழந்தைகளின் கற்பனைத் திறனை மேம்படுத்துவதால், பழக்கமான கதாபாத்திரங்களைக் காட்சிப்படுத்துவதற்கும் அவர்களின் தனித்துவமான குணாதிசயங்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கும் கூட இவ்விளையாட்டு உதவுகிறது.
கற்பிக்கப்படும் குணங்கள்:
- கவனம்
- எச்சரிக்கை
- பொறுமை
- குழுவாக செயல்படுதல்
- பிணைப்பு
தேவையான பொருட்கள்:
- காகிதம் மற்றும் பேனா
- வார்த்தைகளின் பட்டியல்
மாதிரி வார்த்தைகளின் பட்டியல்கள்:
- தெய்வங்களின் பெயர்கள்- சந்திரசேகர், நீலகண்டன், கங்காதர், கிரிதர், ஸ்ரீராம், அனுமன், ஏக்தந்த், லம்போதர், நட்ராஜ், கிருஷ்ணா, பார்த்தசாரதி, முரளீதர், முருகன், காளி, விஷ்ணு, சரஸ்வதி, விட்டல், நரசிம்மர், இயேசு, புத்தர்.
- துறவிகள்/ரிஷிகள் போன்றவர்கள், அவ்வையார், மீராபாய், விவேகானந்தர், சைதன்ய மஹாபிரபு, நாரதர்.
- ஆளுமைகள்- அர்ஜுன், காந்திஜி, போஸ், பாலகங்காதர திலக், ராணி லக்ஷ்மிபாய், சிவாஜி மகாராஜ், கவிஞர் பாரதி, அன்னை தெரசா.
- திருவிழாக்கள்- ஹோலி, தீபாவளி, நவராத்திரி, கிறிஸ்துமஸ், ரக்ஷாபந்தன், ஈத், சுதந்திர தினம்.
- கூறுகள்- பூமி, நெருப்பு, நீர், காற்று, ஆகாயம்.
தயாரித்துக்கொள்ள வேண்டியவை:
- மேலே உள்ள பட்டியலிலிருந்து ஒவ்வொரு வார்த்தையைக் கொண்டிருக்கும் சிறிய சீட்டுகள்
விளையாட்டு:
-
-
- குரு வகுப்பை இரண்டு குழுக்களாகப் பிரிக்கிறார்.
- ‘அ’ குழுவில் உள்ள ஒரு குழந்தை வகுப்பின் முன் நிற்கும்படி கேட்கப்படுகிறது.
- குரு அந்தக் குழந்தையிடம் ஒரு சீட்டைக் கொடுத்து, அந்த சீட்டில் எழுதியுள்ள வார்த்தையை வாய்மொழியாக எந்தக் குறிப்பும் கொடுக்காமல், நடிப்பின் மூலம் வெளிப்படுத்தச் சொல்கிறார்.
- ‘அ’ குழுவில் உள்ள குழந்தை என்ன சித்தரிக்க முயற்சிக்கிறது என்பதை ‘ஆ’ குழு குழந்தைகள் யூகிக்க வேண்டும். அவர்கள் தங்கள் யூகங்களை ஒவ்வொன்றாகக் கொடுக்கலாம்.
- சரியாக யூகிக்கும் குரூப் ‘ஆ”வைச் சேர்ந்த குழந்தை, குருவால் பரிந்துரைக்கப்படும் அடுத்த வார்த்தையைச் சித்தரிக்கும் வாய்ப்பைப் பெறுகிறது.
- மிகுந்த உற்சாகத்துடனும் வேடிக்கையுடனும் இந்த முறையில் விளையாட்டு தொடர்கிறது!!!
-