சமூகத்தில் நமது பொறுப்பு
நோக்கம்:
சமூகத்தின் முன்னேற்றத்திற்கு உதவும் பல தொழில் புரிவோர் பற்றி அறிய வைக்கும் ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு.
கற்பிக்கப்படும் நற்பண்புகள்:
கலை திறமைகளை பயன்படுத்தி சமூகத்தில் மக்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவது.
தேவையான பொருட்கள்:
மனித மதிப்பீடுகள் பற்றிய சீட்டுகள்
குருவிற்கான ஆயத்த வேலைகள்:
ஒன்றும் இல்லை
விளையாட்டு:
- குழந்தைகளை இரண்டு குழுக்களாக பிரிக்கவும். இரண்டு அரை வட்டத்தில் அமர்ந்து இரண்டு குழுக்களும் ஒரே நேரத்தில் விளையாட வேண்டும்.
- நாட்டின் வளர்ச்சியில் பலத்தரப்பட்ட மக்கள் ஆற்றும் கடமைகளை குரு குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
- ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒருவர் குருவிடம் வரவேண்டும். குரு ஒரு தொழிலின் பெயரை குழந்தையின் காதில் ரகசியமாக கூறுவார். அக்குழந்தை தனது குழுவிற்கு சென்று அதை மௌனமாக நடித்து காட்ட வேண்டும்.
- சரியான விடையை முதலில் கண்டுபிடிக்கும் குழுவிற்கு ஒரு “மனித மதிப்பீடு” சீட்டு வழங்கப்படும். ஒவ்வொரு சுற்றுக்கு பிறகும், குழுக்கள் அந்த தொழில் புரிவோர் நாட்டுக்கு செய்யும் நன்மைகளை விளக்க வேண்டும்.
- நாட்டின் வளர்ச்சியில் பல்துறை வல்லுனர்களின் பங்களிப்பை இந்த விளையாட்டு முன்வைக்கிறது.
- புது தொழில்களை நடித்து காட்ட மற்ற குழந்தைகளுக்கும் வாய்ப்பு அளித்து இந்த விளையாட்டை தொடரலாம்.
குருமார்களுக்கான குறிப்புகள்:
- குழந்தைகளின் எண்ணிக்கை சிறியதாக இருப்பின், குழுவாக அமைக்காமல் நேரடியாக விளையாடலாம்.
- சரியாக கண்டுபிடிக்கும் குழந்தையிடம் அந்த “மனித மதிப்பீடு” சீட்டு வழங்கப்படும்.
- பல சுற்றுகளுக்கு பிறகு, எந்த குழந்தையிடம் அதிக சீட்டுகள் உள்ளதோ, அதுவே வெற்றி பெற்ற குழந்தை.