நல்லதைப் பார்
விளையாட்டின் நோக்கம்:
குறிக்கோள் இந்த பயிற்றுவிப்பான் அல்லது செயல்பாட்டின் நோக்கமானது குழந்தைகள் மற்றவர்களை விமர்சிப்பதில் ஈடுபடாமல் எப்போதுமே அவர்களிடம் உள்ள நல்ல பண்புகளையே பார்க்க வேண்டும். இதைத்தான் பகவான் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
கற்பிக்கப்படும் குணங்கள்:
- அன்பு
- பாராட்டுதல்
தேவையான பொருட்கள்:
- ஒவ்வொரு குழந்தையின் பெயரும் எழுதப்பட்ட காகிதத்துண்டுகள்
- ஒரு கிண்ணம்
- இசை/பாட்டு
விளையாடும் முறை:
- குரு குழந்தைகளை வட்டமாக அமர வைக்க வேண்டும்.
- அவர் காகித்துண்டுகள் நிரம்பிய கிண்ணத்தை ஒரு குழந்தையிடம் கொடுக்க வேண்டும்.
- இசை/பாட்டு இசைக்கப்பட வேண்டும்.
- கிண்ணம் ஒரு குழந்தையிடமிருந்து மற்றொரு குழந்தைக்கு மாறிக் கொண்டே இருக்க வேண்டும்.
- இசை நிற்கும் போது எந்தக் குழந்தையிடம் கிண்ணம் இருக்கிறதோ அந்தக் குழந்தை ஒரு காகிதத் துண்டை எடுத்து அதிலுள்ள பெயரை படிக்க வேண்டும். (எ.கா) உமா
- இப்போது அந்தக் காகிதத் துண்டை எடுத்த குழந்தை உமாவிடம் உள்ள ஒரு நல்ல பண்பை கூற வேண்டும். (எ.கா) அக்கறை
- உமா பெயர் கொண்ட காகிதத்துண்டு நீக்கப்பட்டு விளையாட்டு முன்புமாதிரி இசையுடன் தொடங்க வேண்டும்.
- எல்லாருடைய பெயர்களும் படிக்கப்படும் வரை விளையாட்டை தொடரவேண்டும். எல்லாக் குழந்தைகளுக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையிலும் விளையாட்டு தொடர வேண்டும்.
- கிண்ணத்தை வைத்திருக்கும் குழந்தை தனது பெயரை எடுக்க நேர்ந்தால் தன்னிடம் உள்ள தீய பண்பை கூற வேண்டும். (எ.கா) கோபம்
குருக்களுக்கான குறிப்புகள்:
வகுப்பில் பகவான் கூறியுள்ள கீழ்கண்ட தகவல்களை கொண்டு குழந்தைகளிடம் விவாதிக்க வேண்டும்.
- மற்றவர்களைப் பற்றி விமர்சிப்பதில் ஈடுபடுவது நமது நாக்குக்குச் செய்யும் ஒரு பாவச் செயல்.
- மற்றவர்களிடம் உள்ள நல்ல பண்புகளையும், பழக்கவழக்கங்களை யும் நாம் கவனம் செலுத்தி அதனை நாம் பின்பற்ற வேண்டும்.