அமைதி என்பது சாய்-லென்ஸ்
விளையாட்டின் நோக்கம்:
எந்தவொரு குழப்பமான சூழ்நிலையிலும் குழந்தைகள் தங்கள் அமைதியை இழக்காமல் இருக்கும் மன வலிமையை வளர்ப்பதே இந்த விளையாட்டின் நோக்கமாகும்.
கற்பிக்கப்படும் குணங்கள்:
- சுய கட்டுப்பாடு
- பொறுமை
- சமாதானம்
- அமைதி
விளையாட்டு
- குரு வகுப்பை இரண்டு குழுக்களாகப் பிரிக்கிறார்.
- A குழுவில் இருந்து ஒரு குழந்தை எதிரில் வந்து அமைதியாக அமர்ந்திருக்கிறது.
- அடுத்து, B குழுவில் உள்ள குழந்தைகள், அமைதியாக அமர்ந்திருக்கும் குழந்தையைத் தொடாமல் பல்வேறு வழிகளில் (நகைச்சுவைகள், வேடிக்கையான செயல்கள் போன்றவை) தொந்தரவு செய்ய முயற்சிக்க வேண்டும்
- இவர்களது குறும்புகளுக்கு ஆளாகாமல், இறுதிவரை மௌனம் காக்க முடிந்தால், அக்குழந்தை தனது குழுவிற்கு ஒரு புள்ளியைப் பெற்றுத் தரும், மீண்டும் அவரது சொந்தக் குழுவைச் சேர்ந்த ஒரு குழந்தை வந்து அதன் இடத்தில் அமரலாம்.
- ஆனால், அக்குழந்தை குறும்புகளால் குழப்பமடைந்து, நடுவில் தனது மௌனத்தைக் கைவிட்டால், அக்குழந்தை ஆட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும். அப்பொழுது குழு B ஒரு புள்ளியைப் பெறுகிறது.
- இப்போது B குழுவில் இருந்து ஒரு குழந்தை வந்து முன்னால் அமர, A குழுவிலிருந்து குழந்தைகள் அவரை தொந்தரவு செய்ய முயற்சிக்க வேண்டும்.
- இந்த முறையில் விளையாட்டு தொடரும், அதிகபட்ச புள்ளிகள் பெற்ற அணி வெற்றி பெற்ற அணியாகக் கருதப்படும்!!