அன்னை ஈஸ்வரம்மாவும் தெய்வ மகனும்
அன்னை ஈஸ்வரம்மாவின் வாழ்க்கை நல்-யல்பும் தூய்மையும் நிறைந்தது. “நான் அவதரிக்கவேண்டும் என்று சங்கற்பித்தபோது, யார் எனது அன்னையாக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்தேன்.” அவ்வாறு பாபா தேர்ந்தெடுத்த அன்னை தான் ஈஸ்வரம்மா. ஆகவே தான் அவர் “தேர்ந்தெடுக்கப்பட்ட தாய்” என்று அழைக்கப்படுகிறார். அவர் ஏழை. இளகிய மனமுள்ளவர், பக்தி மிகுந்தவர், படிப்பறிவில்லாதவர், கிராமத்திய இல்லத்தரசி.
அவதாரங்கள், தீர்க்கதரிசிகள் இவர்கள் அவதரிக்குமுன் அற்புதமான நிகழ்ச்சிகள் ஏற்படுவதுண்டு. ஈஸ்வரம்மாவின் மாமியார் ஸ்ரீசத்யநாராயணரைப் பற்றிய ஒரு கனவு கண்டார். “ஏதாவது அசாதாரணமாக நடந்தால் கவலைப்பட வேண்டாம்” என்று கடவுள் அவரிடம் கூறினார். ஒருநாள் ஈஸ்வரம்மா கிணற்றி-ருந்து தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தபோது, ஒரு நீலநிற ஒளிப்பந்து அவரை நோக்கி உருண்டு வந்தது. அவருக்குள்ளே புகுந்தது. அவர் மயக்கமடைந்தார். ஆம், பகவான் பாபா தன் தாயினைத் தேர்ந்தெடுத்தார்.
சின்ன சத்யாவுக்கு வயது ஒன்பது மாதங்கள். ஒருநாள் ஈஸ்வரம்மா அவருக்கு நீராட்டி, ஆடை அணிவித்து கண் மை, விபூதி, குங்குமம் இவற்றை இட்டு தொட்டி-ல் கிடத்தி, தொட்டிலை ஆட்டினார். அப்போது பால் பொங்கிக் கொண்டிருந்ததால், அடுப்பின் பக்கம் திரும்பினார். திடீரென்று சத்யாவின் அழுகைக் குரல் கேட்டார். அவர் அதிசயத்தில் ஆழ்ந்தார்; ஏனெனில் பசியோ, வ-யோ, சுகவீனமோ எதற்காகவும் குழந்தை இதுவரையில் அழுததில்லை. குழந்தையைத் தூக்கி, தன் மடியில் வைத்துக் கொண்டார். குழந்தை அழுகையை நிறுத்தியது. அதே சமயம் குழந்தையைச் சுற்றி குளுமையான, பிரகாசமான ஒளிவட்டம் (ஹன்ழ்ஹ) இருப்பதைக் கண்டார். ஆனந்தப்பரவசம் அடைந்தார்.
சத்யா விரைவிலேயே கிராமத்திலுள்ள அனைவரின் கவனத்தையும் நன்மதிப்பையும் கவர்ந்தார். ஈஸ்வரம்மா, பொறாமை, பகைமை இவற்றின் கண்ணேறு (தீவிழி) படலாகாது என்று அஞ்சத் தொடங்கினார். தேங்காயைச் சுற்றி, கற்பூரம் கொளுத்தி இத்தகைய பாதிப்பைத் தடுக்க முயற்சி செய்தார். சத்யா இதைக் காணும்போது, “யாருடைய கண்ணும் என்னை என்ன செய்யும்” என்று கேட்டுக் கொண்டே ஓடிவிடுவார். துடுக்காகவும், அதிகாரத் தொனியுடனும் கூறும் இந்த பதில், யசோதைக்கு கிருஷ்ணன் கூறும் பதிலை நினைவுபடுத்தும். சிறிது மண்ணை வாயில் போட்டுக் கொண்டதற்கு யசோதை கண்டித்தபோது, தெய்வக் குழந்தை, நான் சாதாரணக் குழந்தையென்றோ, குறும்புக்காரன் என்றோ, பித்துப்பிடித்தவன் என்றோ தவறாக நினைக்காதே” என்று பதில் கூறினான். புதியவர் ஒருவர் கிருஷ்ணனிடம் “உன் பெயர் என்ன?” என்று கேட்டபோது, “என்னுடைய பல பெயர்களில் எந்தப் பெயரை நான் சொல்லுவேன்?” என்று விடை தந்தான். பாபா கூறுகிறார்: “அனைத்துப் பெயர்களும் என்னுடையவை. அனைத்து வடிவங்களும் என்னுடையவை.” சத்யா ஈஸ்வரம்மாவுக்கு பல தடவைகள் ஸ்ரீகிருஷ்ணனை தனது நடத்தை மூலம் நினைவூட்டினார். இவரும் எட்டாவது குழந்தையாகத் தான் பிறந்தார்.
சத்யா வெளியில் சென்று குன்றுகளையும், நட்சத்திரங்களையும், வானத்தையும், மௌனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டேயிருக்க விரும்பினார். அவர் வளர்ந்து, மற்றக் குழந்தைகளுடன் விளையாடும் போது, கண்ணாமூச்சியாட்டமோ அல்லது கண்ணைக் கட்டிக்கொண்டு ஆடும்போதோ, வழியில் தென்படும் ஒவ்வொரு பசுவினையும், எருமையினையும் அன்புடன் தட்டிக் கொடுப்பார். ஒருநாள் ஒரு குழந்தை தெருவில் ஆடை ஒன்றும் உடுத்தாமல், குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது. சத்யா அவனைக் கண்டதும், உடனே தனது சட்டையைக் கழற்றி, அந்தக் குழந்தைக்கு அணிவித்தார். யாராவது வ-யுடனோ, துன்பத்துடனோ இருப்பதைக் கண்டால், அவற்றைக் கட்டாயம் தீர்த்தே ஆகவேண்டும் என்பான் என்று ஈஸ்வரம்மா கூறுவார். அவள் அறிந்த மற்ற குழந்தைகளைவிட, அவரது சொற்கள் மென்மையாகவும், இனிமையாகவும் இருந்தன என்று கூறுவார்.
அடிக்கடி அன்னை, “சத்யம், உனக்கு என்ன வேண்டு மென்று சொல்” என்று மன்றாடுவார். அவருக்கு விருப்பு, வெறுப்பு ஒன்றுமில்லையாதலால் அவ்வாறு ஈஸ்வரம்மா கேட்க நேரிட்டது. ஆனால் தன்னைச் சுற்றியுள்ள குழந்தைகள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்பதைக் கண்டால், அவரது முகம் மலர்ந்து ஒளியுடன் திகழும்.
பாபாவுக்கு பதினான்கு வயது ஆனபோது, பிற்காலத்தில் ஈஸ்வரம்மா ஏற்று நடத்தவேண்டிய பாத்திரத்துக்குத் தகுந்த பயிற்சிக்கு முதற்பாடம் கற்பித்தார். அவரது பக்தர்கள் அவரை அழைக்கிறார்கள் என்றும், இனி, தான் அவளுக்குச் சொந்தமில்லை என்ற கசப்பான உண்மையை அவளிடம் கூறினார். அன்னை அதற்கு “பிறகு யாருக்குத்தான் சொந்தம்?” என்று கேட்டாள். “உலகத்துக்கும் அதன் மக்களுக்கும் சொந்தம்” என்ற பதில் வந்தது. பிரசாந்தி நிலையத்துக்கு வருகின்ற நூற்றுக்கணக்கான புதல்வர்களுக்கும், புதல்விகளுக்கும் அன்னையாக இருக்கும் பொறுப்பு ஈஸ்வரம்மாவுக்கு ஏற்பட்டது. அவர் நோய்வாய்ப் பட்டவர்களைத் தேடிச் சென்று ஆறுதல் கூறி அவர்களை அன்புடன் பராமரித்தார்.
இளம் சத்யாவின் அற்புதமான ஞானத்தைக் கண்டும், ஆன்மீக விஷயத்தில் அவர் பேசும் அதிகாரத்தைக் கண்டும், ஈஸ்வரம்மா குழம்பித் திகைத்தார். பிற்காலத்தில் ஸ்வாமி வேதங்களி-ருந்து மேற்கோள் எடுத்துக் கூறும்போது, ஈஸ்வரம்மா கள்ளங்கபடமற்ற முறையில் பேராசிரியர் கஸ்தூரியிடம் சென்று, “இப்போது சொன்னதெல்லாம் சரியாக இருக்கிறதா?” என்று கேட்பார்.
பாபா அவரது வெகுளித்தன்மையைப் பயன்படுத்தி, பயத்தைத் தூண்டி பரிகாசம் செய்வதுண்டு. உதாரணமாக, பாபா கிழக்கு ஆப்பிரிக்காவுக்குச் செல்வதற்கு முன்னர், அவர் கடலுக்கு மேலே விமானத்தில் பயணம் செல்வதை நினைத்து மிகவும் மனங்கலங்கினார் அம்மா. அவரது பயத்தைக் குறைப்பதற்கு ஸ்வாமி ஒன்றும் செய்யவில்லை. மாறாக, பலவற்றையும் கூறி அவரைப் பயமுறுத்தினார். ஆப்பிரிக்கா தலைகீழான உலகம் என்றும், அங்கு நரமாமிச பட்சிணிகள் பலர் இருக்கின்றனர் என்றும், பேரீச்சம்பழம் போல தங்கம் கொள்ளை ம-வு என்றும் கூறினார். இந்தப் பயணத்தில் காலம் எவ்வாறு பின்னோக்கி கணக்கிடப்படுகிறது என்ற அதிசய உண்மையினையும் தெரிவித்தார்.
பிற்பகல் தேனீர் அருந்தி மாலை 3 மணிக்கு மும்பையி-ருந்து கிளம்பி, அங்கு அதேநாள் காலை 11 மணிக்கு ஆப்பிரிக்காவுக்குச் சென்று மதிய உணவு பிறருடன் சேர்ந்து அருந்தலாம் என்ற அதிசய உண்மையினை அறிவித்தார். பீதி அதிகரித்து, ஈஸ்வரம்மா அந்தப் பிசாசு பிடித்த நாட்டுக்குச் செல்லவேண்டாம் என்று மன்றாடினார். இவ்வாறெல்லாம் பேசி பாபா அவரது மனோபாவத்தை விரிவுபடுத்தினார்.
அன்னையிடம் புனிதமான எண்ணங்களும், உயர்ந்த உணர்ச்சிகளும் நிரம்பி இருந்தன. ஒருநாள் அவர் கூறினார்: “ஸ்வாமி, புட்டபர்த்தி ஒரு குக்கிராமம். இங்கு பள்ளிக்கூடம் இல்லை. குழந்தைகள் பக்கத்திலுள்ள கிராமங்களுக்கு வெகுதொலைவு நடந்து பள்ளிக்குச் செல்ல வேண்டியுள்ளது. இங்கு ஒரு பள்ளிக்கூடம் கட்டித் தாருங்கள்”. ஸ்வாமியும் அவ்வாறே செய்து, அன்னைக்கு மிகுந்த மகிழ்ச்சி தந்தார். பின்னர், கிராமத்துக்கு ஒரு மருத்துவமனையும் கட்டப்படுதல் வேண்டும் என்று விரும்பினார். ஸ்ரீசத்யசாயி மருத்துவமனையின் சுவர்களில் உள்ள ஒவ்வொரு செங்கல்லும், ஈஸ்வரம்மா ஏற்பாடு செய்த சேவைத் தொண்டர்களால் கட்டப்பட்டது.
அதற்குப்பின் தாய், ஸ்வாமியிடம், “இனி எனக்கு கவலை ஏதும் இல்லை. எனது விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றி விட்டீர்கள்.” கிராமத்தாரின் துன்பங்கள் பலவாறு குறைக்கப்பட்டன. பாபா புன்னகை புரிந்தார். “இன்னும் ஏதாவது ஆசை இருந்தால் கூறிவிடு”. ஈஸ்வரம்மா மென்மையாகக் கூறினார்: “ஸ்வாமி, மழைக்காலத்தில் சித்ராவதியில் வெள்ளம் பெருக்கெடுப்பது தங்களுக்குத் தெரியும். ஆனால் கோடைகாலத்தில் மிகச்சிறு ஓடைபோல செல்கிறது. மக்களுக்குக் குடிக்கத் தண்ணீரே இல்லை. கிராமத்தில் சில கிணறுகள் வெட்டுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்”. ஸ்வாமி கூறினார்: “இந்தச் சிறு கிணறுகளுடன் நான் நிறுத்தப்போவதில்லை. ராயலசீமா பகுதி முழுவதற்குமே குடிநீர் வசதிக்கு ஏற்பாடு செய்கிறேன்”.
அன்னையின் மூன்று விருப்பங்களையும் நிறைவேற்றத் தொடங்கப்பட்ட செயல், புட்டபர்த்தி கிராமத்துக்கு மட்டுமல்ல, அதன் சுற்றுப்புறங்களுக்கு மட்டுமல்ல, உலக முழுவதற்குமே வரப்பிரசாதமாகப் பரிணமித்தது. ஸ்வாமி பள்ளிக்கூடங்கள் மட்டுமல்ல, ஓ.எ.யி-ருந்து ட.எ. வரை (இளங்குழந்தைக் கல்வியி-ருந்து, ஆராய்ச்சிப்படிப்புக் கல்வி வரை) இலவசப் படிப்பு தரும் பல்கலைக்கழகமும் தந்திருக்கிறார். இங்கு மனித மேம்பாடுகளுக்கான விதைகள் விதைக்கப்பட்டுப் பாதுகாக்கப் படுகின்றன. மாணவர்கள் இலட்சிய மனிதர்களாக உருவாக இது ஏதுவாகிறது. பிறகு பிரமிப்பைத் தருகின்ற சூப்பர் ஸ்பெஷா-ட்டி மருத்துவமனைகளில், அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான கிராமத்தினருக்குப் பயன்தரும் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறுவீடுகள் கட்டுதலும், விதவைகளுக்கு நிதிவசதி தருதலும் ஸ்வாமியின் அன்பு காரணமான முடிவற்ற நன்கொடைகளின் ஒரு பகுதியாகும்.
உட–ருந்து விடைபெற்றுக்கொள்வதற்கு சில நாட்களுக்கு முன், ஈஸ்வரம்மா பிருந்தாவனத்தில் இருந்தபோது, கண்விழித்து இருக்கும்போதே ஸ்வாமியை ஸ்ரீராமனாகத் தரிசனம் செய்தார். 1972ம் ஆண்டு மே மாதம் 6ந் தேதி ஈஸ்வரம்மா, நீராடி, பிறகு காபியும் பருகினார். திடீரென்று “ஸ்வாமி, ஸ்வாமி, ஸ்வாமி” என்று குரல் கொடுத்தார். பாபாவும் “வருகிறேன், வருகிறேன், வருகிறேன்” என்று கூறிக்கொண்டே வந்தார். அவதார புருஷனாகிய தனது புதல்வனது கண்ணெதிரிலேயே அவரது ஆத்மா பிரிந்தது. ஒருவரது நல்-யல்புக்கு, அவர் மரணமடையும் விதமே சான்றாக அமைகிறது.