செருப்புச் செப்பனிடும் தொழிலாளி
ஸ்வாமி இளைஞராக இருந்தபோது, இந்த நிகழ்ச்சி நடந்தது. அவரது அன்பு, கருணை இவற்றை நமக்கு இது உணர்த்துகிறது. பங்களூரில் ஒரு தெருக்கோடியில் செருப்புச் செப்பனிடுபவன் தன் தொழிலைச் செய்து கொண்டிருந்தான். அவன் உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்து எதிரே இருந்த பங்களாவில் பாபாவைப் பார்க்க நேர்ந்தது. பங்களாவுக்குள் பக்தர்கள் கார்களில் சென்று திரும்பிய வண்ணமாக இருந்தனர். திரும்பியவர்களின் முகம் ஒளி மிகுந்து மகிழ்ச்சியுடன் இருப்பதைக் கண்டான். அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணன், சாயிபாபா இவர்களின் அவதாரத்தைப் பற்றிப் பேசுவதைக் கேட்டான். அவனும் துணிந்து வாயிற்கதவைத் தாண்டி ஹாலுக்குள் எட்டிப்பார்த்தான். அங்கு ஆண்கள் ஒரு பக்கமும் பெண்கள் ஒரு பக்கமும் வரிசையாக அமர்ந்திருந்தனர். எதிரே நாற்கா-யில் பாபா அமர்ந்திருப்பதைக் கண்டான்.
அவன் கண்கள் பாபாவைப் பார்த்த அதே நேரத்தில், அவரும் இவனைப் பார்த்தார். அவர் உடனே எழுந்திருந்து, செருப்புத் தைப்பவன் நின்றிருந்த கதவுப்பக்கம் வந்தார். அவன் அவரிடம் கொடுப்பதற்கு முன்னாலேயே அவன் கையி-ருந்த வாடிய மாலையை வாங்கிக் கொண்டார். பிறகு அவனுக்குத் தெரிந்த ஒரே மொழியான தமிழில் அவனிடம் “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். தனது விருப்பத்தைச் சொற்களாக உருவாக்கி, அவற்றை உரக்கக் கூற, பாபாதான் அந்த ந-ந்த, வயது முதிர்ந்த, செருப்பு தைப்பவனுக்கு தைரியம் கொடுத்திருக்க வேண்டும். சுற்றியிருந்த அனைவரும் அதிசயிக்கும்படி, தயக்கமில்லாமல் “தயவு செய்து என் வீட்டுக்கு வந்து ஏதாவது ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கேட்டான். பாபா அவன் முதுகினை அன்புடன் தட்டிக் கொடுத்து, “சரி வருகிறேன்” என்று கூறிவிட்டு ஹாலுக்குள் சென்றார்.
செருப்புத் தைப்பவன் வெகுநேரம் காத்திருந்தான். தன் வீடு எங்கே இருக்கிறது என்று கூறி எப்போது அவர் வருவார், என்று அறிந்து அதற்குத் தகுந்தாற்போல, வீட்டைச் சுத்தம் செய்து, அவரை வரவேற்கவேண்டும் என்று எண்ணினான். மக்கள் கூட்டத்தால் அங்குமிங்கும் தள்ளப்பட்டான். பாபா தன் வீட்டுக்கு வருவதாக வாக்குறுதி கொடுத்ததை இவன் கூறியபோது, யாருமே காதில் வாங்கிக் கொள்ளவில்லை. எப்பொழுது அவர் வருவாரென்று பாபாவிடமிருந்து கேட்டுச் சொல்லும்படி தான் பார்த்தவர்களை யெல்லாம் கேட்டான். சிலர் அவனைப் பார்த்துச் சிரித்தனர். சிலர் அவன் குடித்திருக்கிறான் என்றும் அவனுக்குப் பித்துப் பிடித்திருக்கிறது என்றும் கூறினர். நாட்கள் பல சென்றன. செருப்புத் தைப்பவன் பாபாவை மறுபடியும் சந்திக்கும் நம்பிக்கையினை இழந்தான்.
திடீரென்று ஒருநாள், வயது முதிர்ந்த செருப்புத் தைப்பவன் முன்னால் ஒரு கார் வந்து நின்றது. அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. போலீஸ்காரரோ, வேறு யாராவது அதிகாரியோ தான் பிளாட்பாரத்தில் தொழில் நடத்துவதற்காக அவன் மேல் வழக்குப் போட வந்திருப்பார்களோ என்று பயந்தான். ஆனால் அங்கிருந்தவர் சாயிபாபாதான். அவர் செருப்புத் தைப்பவனைக் காருக்குள் வரும்படி அழைத்தார். அவனுக்கு இருந்த குழப்பத்தில் டிரைவரிடம் தன் குடிசை எங்கிருக்கிறது என்று தெளிவாகக் கூற முடியவில்லை. ஆனால் பாபா இடமறிந்தவர் போலக் காணப்பட்டார். சாலை ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு, குறுக்குச் சந்து வழியாக, குண்டுக் கற்கள் நிறைந்த பாதையில் வேகமாக நடந்து, சேரிக்கு இடையே இருந்த குடிசைக்கு சரியாக வந்து நின்றார். செருப்புத் தைப்பவன், குடும்பத்தினரிடம் முன்னறிவிப்புக் கொடுக்க வேகமாகச் சென்றான். பாபா சில இனிப்புப் பண்டங்களையும், பழங்களையும் வரவழைத்து, குடும்பத்துக்கு பிரஸôதமாகக் கொடுத்தார். பிறகு சுவற்றுக்கு அருகில் இருந்த பலகையில் உட்கார்ந்தார். செருப்புத் தைப்பவனை ஆசீர்வதித்தார். அவன் கண்களில் நீர் வழிய நின்றான். அவன் பக்கத்துக் கடையில் வாங்கி வந்த வாழைப்பழங்களை அவன் மகிழும் வண்ணம் ஏற்றுக் கொண்டார். பாபா அந்தக் குடிசையி-ருந்து விடைபெற்றுச் சென்றார். அந்தக் குடிசை, அன்றி-ருந்து அந்த இடத்திலுள்ளோர் அனைவருக்கும் புண்ணிய ஸ்தலமாக அமைந்தது.