தன்னம்பிக்கை உள்ளவர்களையே கடவுள் விரும்புகிறார்
அறிவை கூர்மையாக்கு. இயற்கையில் ஒற்றுமை இருப்பது தெளிவாக விளங்கும். வேதங்களில் மிகவும் போற்றப்பெற்று மிகவாக பரவி யிருக்கும் மந்திரம், சாஸ்திர சடங்குகளுடன் பிரார்த்தனையாக அமைந்திருக்கும் காயத்ரி மந்திர மாகும். அது ஒளிகளுக்கெல்லாம் ஆதாரமான பேரொளிப்பிழம்பின் திருவருளைப் பெற்று வேறு எதையும் வேண்டாமல் ஒருவரது அறிவை ஊக்குவிக்க மட்டுமே ஓதப் பெறுகிறது
தெனாலி இராமகிருஷ்ணன் ஒருபுகழ் வாய்ந்த ஆந்திர நாட்டு பாடகன். அதுமட்டு மன்று, அவன் ஒரு நகைச்சுவையூட்டுபவனாகவும் ஒரு தத்துவ வாதியாகவும் இருந்தான். ஒரு முறை அவன் அடர்ந்த காட்டை கடக்க வேண்டி நேர்ந்தபோது வழி தவறி விட்டு திகைத்தான். விஜய நகர அரசன் கிருஷ்ணதேவராயர் காலத்தில், கிபி.1500-ஆம் ஆண்டில் வாழ்ந்தவன் அவன். .அரச சபையில் திடீர் திடீரென்று நகைச்சுவையாக பேசுபவனாக, அவன் ஒரு அறிவுமிக்கச்சிறந்த அமைச்சனாயிருந்தான்
நடுகாட்டில் கையறு நிலையில் சுற்றி வந்தபோது அவன் ஒரு வயதான சாதுவைக் காணநேர்ந்தது.உடனே ஓடிச்சென்று அவரது கால்களில் மரியாதையுடன் பணிந்து வணங்கினான். அந்த பயங்கரமான காட்டில் அவர் எப்படிவந்து மாட்டிக் கொண்டார் என்று வினவினான். அதற்கு அவர், “எளிதில் புரிந்து கொள்ள முடியாத எந்த ஆற்றல் உன்னை இங்கு இழுத்து வந்ததோ அதே ஆற்றல் தாம் என்னையும் இழுத்து வந்தது. இவ்வளவு நாட்களாக நான் தங்கியிருந்த இந்த உடலை விட்டு அகலும் நேரம் நெருங்கிவிட்டது.இத்தனை ஆண்டுகளாக ஓதிவந்த என் கவசமாக, என் பொக்கிஷமாக நான் போற்றி வந்த ஒரு மந்திரத்தை உனக்கு இப்போது ஓதிக்கற்றுக் கொடுக்கிறேன்” என்றார். பிறகு இராமகிருஷ்ணனை அருகே அழைத்து அவன் காதில்,குரலொலி வெளியே கேட்காதவாறு, காளியின் மந்திரமான அந்த மந்திரத்தை ஓதினார்.
இராமகிருஷ்ணன் எதிர்பாராது கிடைத்த பெருமை மிக்கப்பெரிய வெகுமதியால் மிக்க மகிழ்ந்து போனான். உடனே அந்த அடர்ந்த காட்டினுள் மறைந்திருந்த காளி கோவிலுள் சென்று அன்னையின் முன்னர் அமர்ந்து அந்த மந்திரத்தை இடைவிடாது ஓதலானான். நடு இரவில் ‘கோயர்கள் என்ற இனத்தின் காட்டுவாசிக் கும்பல் ஒன்று கோவிலுக்கு வந்தது. அவர்கள் கையில் ஒரு வெள்ளாட்டைப்பிடித்து வந்தனர். அதைக் காளி மாதாவிற்கு பலியிட்டு அவளது அருளைப் பெறுவதற்கு முயன்றனர். அவர்களைக்
கண்டதுமே காளிசிலையின் பின்னால் மறைந்து கொண்ட இராமகிருஷ்ணன், அவர்கள் கத்தியை ஓங்கி ஆட்டின் கழுத்தில் வெட்டு போட முயன்றபோது, காளிதேவி போன்ற குரலில், “ நீங்கள் உட்பட எல்லா உயிரினங்களின் அன்னை நான். என் குழந்தையை நீங்கள் கொன்றுவிட்டால் நான் வாழ்த்துவதற்கு பதிலாக உங்களை சபித்துவிடுவேன்” என்று கூறினான்.காளிதேவியே வாய் திறந்து அங்கனம் கட்டளையிட்டு விட்டாள் என்று நம்பிவிட்ட “கோயர்கள்” தங்கள் செயலை நிறுத்திவிட்டுச் சென்று விட்டனர்
அதன் பின்னர் காளிதேவி இராமகிருஷ்ணன் முன்னர் சுய உருவத்தில் தோன்றினாள் அவனுடைய ஆன்மீக சாதனையைக்கண்டு அவள் உள்ளம் குளிர்ந்தாள். தன்னிடமிருந்து அவன் என்ன பெற விரும்புகிறான் என்று அன்போடு கேட்டாள். தன் இரு கரங்களிலும் இரு கிண்ணங்களை ஏந்திக்கொண்டு, “ இவற்றில் உனக்கு எது வேண்டும்?” என்று கேட்டாள். ஒன்றில் தயிர் சாதம் இருந்தது. மற்றொன்றில் பாலன்னம் இருந்தது தயிர்சாதம் புசித்தால் என்ன பலன் கிடைக்கும்,பால் சாதம் உட்கொண்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று திட்டமாக தெரிந்துகொள்ள விரும்பினான் இராம கிருஷ்ணன். எது வேண்டும் என்று அவன் தீர்மானிக்கும் முன்பு அவற்றின் இயல்பு களை அறிந்து கொள்ள காளியிடமே கேட்டான் அவன். அதற்கு காளி மாதா, “ தயிர் சாதம் உனக்கு எல்லாவகை செல்வத்தையும், செலவினத்திற்கேற்ற பொருள் வசதியையும் நிலையாகத் தரும். பாலன்னம் உன்னை ஒரு பெரிய அறிவார்ந்த பண்டிதனாக்கும். இப்போது எது வேண்டும் என்று சொல்” என்று விளக்கினாள்.
இராமகிருஷ்ணன் சற்று குழம்பினான். “பெருந்தனக்காரனாகி அடிமுட்டாளாக இருந்தால் என்ன பயன்? ஆனால் வெறும், அறிவு மூன்று வேளை வயிற்றை நிரப்பாதே”. என்று பலவாறு எண்ணினான். அவன் கூர்மையான அறிவு பெற்றவன் அல்லவா? அதனால் மீண்டும் “ என் எதிரில் இரு கிண்ணங்களை கண்களால் நான் பார்க்கிறேன்; அவற்றின் சுவை எப்படியிருக்கும் என்று நான் அறியும்படி கொஞ்சம் கூறுங்களேன்.” என்று காளியிடம் பணிவாக வேண்டினான்
காளி தேவி வாய் திறந்து சிரித்தாள். “நான் எப்படி இதன் சுவையை விளக்கி அவற்றின் வேறுபாட்டை நீ புரிந்து கொள்ள வைக்க முடியும்? அதனால் இதோ நீயே சுவைத்துப் பார்த்துச் சொல்” என்று இரண்டு கிண்ணங்களையும் அவன் கையில் தந்தாள். அறிவு கூர்மையான இராமகிருஷ்ணன் இரண்டு கிண்ணங்களையும் வாங்கி இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு நொடியில் வாயிலிட்டு,பால், தயிர் அவற்றோடு இருந்த சாதம் அனைத்தையும் எப்படியோ விழுங்கி விட்டான்.</p
காளி திகைத்து விட்டாள்! அவனது குறும்புத்தனமான செயல் பயங்கர தண்டனையை தரும் என்று அச்சுறுத்தினாள். இராமகிருஷ்ணன் தன் தவறை ஒப்புக்கொண்டு அதற்கு அவள் தருவதாக சொன்ன தண்டனையை ஏற்கத் தயாரானன். ஆனால் குழந்தையிடம் எத்தகைய குற்றம் கண்டுபிடித்தாலும் ஒரு அன்னையின் தண்டனை குழந்தையை அழித்துவிடுமா என்ன?
“என் தண்டனை உன்னைக் கட்டாயம் உய்விக்கும் கவலைப்படாதே”என்றாள் காளி மாதா. பிறகு அவள் தன் தண்டனையைக் கூறினாள். நீ ஒரு விகடகவியாவாயாக! ” அதாவது அறிவு கூர்மையான நகைச்சுவையாளனாக அரச சபையில் செல்வாக்கு மிகுந்தவனாக வாழ்வாயாக. செல்வம் நிறைந்து பெற்று உன் அறிவுரையை நாடி வருபவர்களுக்கு தக்கவாறு உன் கெட்டிகாரத்தனமான அறிவுரை நல்குவாயாக! என்று வாழ்த்தி அருளினாள் காளி தேவி!
கேள்விகள்:
- இராமகிருஷ்ணன்—————————————- அரச சபையில் இருந்தான்
- அவனுக்கு———————————————போதிக்கப்பெற்றது
- காளி அன்னையால் அளிக்கப்பெற்ற கிண்ணங்களில்——————– ————————— இருந்தன. அவை பக்தனுக்கு—————- —————–தருவனவாக இருந்தன
- இராமகிருஷ்னன்—————– கேட்டான்
- இராமகிருஷ்ணன் ————————– என்று புகழப் பெற்றான்