பெற்றோரிடம் மக்களுக்குள்ள கடமை
மற்றோரிடம் நேரான பொருத்தமான மனோ பாவத்தை வளர்ப்பதற்கு வீட்டில் அவற்றைப் பயில வேண்டுமாதலால், நமது திரு நூல்கள் மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோபவ (அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்) என்று கூறுகின்றன. நம் பொருட்டு, நமது நன்மைக்காக நமது பெற்றோர்கள் புரியும் தியாகத்தைப் பற்றிநாம் அறிவோம். அதன் ஒரு சிறு பங்கினுக்குக்குக்கூட நாம்நன்றிக்கடன் செலுத்த இயலாது. இருப்பினும், நம்மால்முடிந்தஅளவுக்குநன்றிக் கடன் செலுத்துவது நமது கடமையாகும்.
நமதுபெற்றோரை நேசித்திலும், அவர்களுக்குக்கீழ்படிதலும்நமதுதலையாய கடமையாகும். இறைவனே நமக்கு முன்னுதாரணமாக விளங்கியுள்ளார். ஸ்ரீ ராமன் அயோத்தியின் இளவரசராக முடிசூடப் பெறும் தருணம். அதற்காக எல்லாம் தயாராக இருந்தது. கடைசி நேரத்தில், சூழ்நிலைகள் வேறுவிதமாக மாறின. தந்தையின் வாக்கினைக் காப்பாற்ற, அரண்மனையினின்று விலகி, அரசுரிமையினை விடுத்துப் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்குச்செல்ல வேண்டுமென்ற முடிவு தெரிவிக்கப்பட்டது. ஒரு வினாடி கூட தயங்காமல், சிறிது கூட முணுமுணுக்காமல், தந்தையின் வாக்கினையும் உறுதி மொழியினையும் காப்பாற்றுகிறோம் என்ற மகிழ்ச்சியில் திளைத்து ஸ்ரீ ராமன் வனவாசம் சென்றான். இவ்வாறு, “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்ற இலட்சியத்துக்கு முக்காலத்துக்கும் முன்னுதாரணமாக விளங்கினார்.
பெற்றோருக்குச் சேவை செய்தலும் மிக முக்கியமாகும். வீட்டு வேலைகளில் நாம் பெற்றோருக்கு உதவி செய்யவேண்டும். பெற்றோருக்கு சேவை செய்தலே மிக உயர்ந்த சமய நெறி என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். புண்டலிகன் இதற்கு சிறந்த முன்னுதாரணமாவார்.
புண்டலிகன் பெற்றோரின் சேவையில் ஈடுபட்டிருந்தான். பகவான் விட்டலர் அவனது கதவை வந்து தட்டினார். வந்தவர் இறைவன் என்று தெரிந்து கொண்டே, தனது வயதான பெற்றோர்களை நீராட வைத்து உணவளிக்கும் வரை, அவரைக் காத்திருக்கும் படி கூறினான். வாயிற்படியில் ஒரு செங்கல்லை விட்டெறிந்து, தான் வரும்வரையில் அதன்மேல் நின்று கொண்டு காத்திருக்கும்படி வேண்டினான். இதனை இறைவன் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக பெற்றோர்களிடம் ஒரு மித்த பக்தியுடனும்., பிரேமையுடனும் புண்டலிகன் சேவை செய்வதைக் கண்டு மகிழ்ச்சியும் ஆனந்தமும் கொண்டார்.
புட்டபர்த்திக்கு வந்த ஒருவரைப் பற்றி ஒரு சம்பவம் கூறப்படுகிறது. அந்த மனிதருக்கு உண்மையில் ஸ்ரீ சத்யசாய்பாபாவிடம் சிறிதும் நம்பிக்கை இல்லை. ஆனால் அவருடையமாப்பிள்ளை பாபாவிடம் பக்தி பூண்டிருந்தார். மகள் திருமணம் முடிந்ததும், மாப்பிள்ளை வற்புறுத்தியதால், சம்மதமில்லமால் தனது மகளுடன், மாப்பிள்ளையுடனும் புட்டபர்த்திக்குவந்தார். அங்கு வந்தாலும்கூட, அங்கு வந்த எல்லா மக்களும் மிகவும் எதிர்ப்பார்த்திருந்த பாபாவின் தரிசனம் கூட அவர் மனதைக் கவரவில்லை. அவர் எங்கோ ஓரிடத்தில் ஒதுங்கித்தனியாக நின்று கொண்டிருந்த போது, பாபாவே அவரை நோக்கி வந்து அவரருகில் வந்து, அக்கறையுடனும் அன்புடனும், நான் எந்த அளவுக்கு உன்னை நேசிக்கிறேன் என்பதும் ஏன் நேசிக்கிறேன் என்பதும் உனக்குத் தெரியுமா? உன் அன்னையிடம் நீ கொண்டுள்ள பக்தியினையும், அன்பினையும் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தினமும் காலையில் கண் விழித்ததும்b எழுந்திருந்து உன் தாயின் காலடிகளில் விழுந்து வணங்குகிறாய். ஒருவனுக்கு கடவுளிடம் பக்தியிருக்கிறதா, இல்லையா என்பது அவ்வளவுமுக்கியமல்ல. கண்கண்ட தெய்வங்களாக உள்ள தாய் தந்தையுமே உண்மையில் கடவுளராவர். அவர்களுக்குச் செய்யும் சேவையும், அவர்களுக்குக் காண்பிக்கும் மரியாதையுமே கடவுளுக்கு அளிக்கும் மிக உயர்ந்த வழிபாடாகும்” என்று கூறினார். இந்த சம்பவமானது, ஏழையான புண்டலிகன் குடிசைக்கு அக்காலத்தில் கடவுள் ஏன் நடந்து சென்றார் என்பதை விளக்குகிறது. புண்டலீகன் பெற்றோரிடம் கொண்ட ஆழ்ந்த அன்பும், பக்தியும் அவர் செய்த சேவையுமே வைகுந்தத்திலிருந்த பரந்தாமனை வீட்டு வாயிற் படியிற் கொண்டுவந்து நிறுத்தி ஆசீர்வதித்து அருளும் படி செய்தது.
மூன்றாவதாக நாம் மனந்திறந்தும், உண்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும். நமது பெற்றோரிடமிருந்து நாம் எதனையும் மறைக்கலாகாது. அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கையில் நமக்கு ஒரு முன்னுதாரணம் இருக்கிறது. இளமைப்பருவத்தில் அவர் கெட்டவர்களுடன் சகவாசம் கொண்டார்.அவருக்கு நெருங்கிய நண்பன் அவரைப் புகைப்பிடிக்கவும், புலால் உண்ணவும் தூண்டினான். பண வசதியில்லாததால் காந்தி வீட்டில் ஒரு தங்க வளையலைத் திருடினார். ஆனால் அவரது மனச்சாட்சி அவரைக் குத்தியது. அவர் மிகுந்த பச்சாதாபத்தால் வருந்தினார். இந்தகுற்றத்தை ஒப்புக்கொண்டு ஒரு கடிதம் தந்தைக்கு எழுதினார்; தன்னை மன்னிக்கும்படி தன் தந்தையைப் பிரார்த்தித்து .இனி இத்தகைய செயல்களில் ஈடுபடுவதில்லை என்று வாக்குறுதியும் அளித்து எழுதினார். அவர் தந்தையிடம் சென்று, அவரிடம் இக் கடிதத்தைக் கொடுத்தார். அவரது தந்தை அக்கடிதத்தைப் படித்ததும். அவரது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அண்ணல் காந்தியடிகள் சத்திய சோதனை என்றதமது சுய சரிதையில் எழுதுவதாவது ; “என் தந்தை இதற்கு பிறகு என்னைத் தண்டிக்கவில்லை, ஒரு சொல்லும் கூறவில்லை. அவரது கண்ணீரே எனக்குப் போதுமானதாக இருந்தது. இதற்குப் பிறகு காந்தி மனந்திருந்திய பையனாக மாறினார். பிற்காலத்தில் மகாத்மா ஆவதற்கான விதை அன்று வித்திடப்பபட்டது. குடும்பத்துக்கு மட்டுமல்ல நாட்டுக்கும், உலகத்துக்கும் விளக்காகத் திகழ்ந்த சான்றோரைப் பெற்றெடுத்த குடும்பமானது இறைவனின் நல்லாசி பெற்றதாகும்.