அலக் நிரஞ்சன – செயற்பாடு

Print Friendly, PDF & Email
அலக் நிரஞ்சன – செயற்பாடு
தேவையான பொருட்கள்:
  1. சார்ட் பேப்பர் அல்லது போர்டு.
  2. பென்சில் அல்லது மார்கர்.
கற்பிக்கப்படும் நற்குணங்கள்:
  1. எந்த செயல் செய்தாலும், பகவன் நாமா சொல்லிக்கொண்டே செய்யவேண்டும்
  2. கவனம்/மனம் ஒருமுகப்படுதல்.
முன்னேற்பாடுகள்:
  1. குருமார்கள், குழந்தைகளுக்கு பஜனையின் பொருளையும், நாமஸ்மரண மகிமையையும் விளக்கவேண்டும்.
  2. கீழே கொடுக்கப்பட்டுள்ள ‘வழிதேடல்’ படத்தை அச்செடுத்து, சார்ட் பேப்பரில் ஒட்டவும் அல்லது அதே போன்ற ஒரு படத்தை போர்டில் வரையலாம்.
  3. உள் வட்டத்தின் நடுவில் நம் ஸ்வாமியின் படம் ஒட்டவும்.
விளையாடும் முறை:
  1. முதலில் ஒரு குழந்தையை அழைத்து, ‘நாராயணா’ சொல்லிக்கொண்டே படத்தில் உள்ள முதல் வட்டத்திலிருந்து இரண்டாம் வட்டத்திற்குள் நுழைய வழி வரையச் சொல்லவும்.
  2. அடுத்த குழந்தையை அழைத்து, ‘நாராயணா’ சொல்லிக்கொண்டே, இரண்டாம் வட்டத்திலிருந்து மூன்றாம் வட்டத்திற்குள் நுழைய வழி போடச் சொல்லவும்.
  3. உள் வட்டத்தில் உள்ள ‘சத்ய நாராயணரை’ அடையும் வரை இதனைத் தொடரவும்
  4. இறுதியாக, விளையாடிய குழந்தைகள் அனைவரும் ஒன்று சேர்ந்து, பஜனையைப் பாடி முடிக்கவும்.

பதில்:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன