சித்ராவதீ தட
சித்ராவதீ தட
கேட்பொலி
வரிகள்
- சித்ராவதீ தட விஶால ஸுஶாந்த ஸௌதே
- திஷ்டந்தி ஸேவக ஜனாஸ்தவ தர்ஶனார்த்தம்
- ஆதித்ய காந்திரனுபாதி ஸமஸ்த லோகான்
- ஸ்ரீ ஸத்யஸாயி பகவன் தவ ஸுப்ரபாதம்.
விளக்கவுரை
சித்ராவதி நதிக்கரையில் அமைந்த அகன்ற அமைதியான மாளிகையில் உன்னுடைய தரிசனத்திற்காக ஸேவக ஜனங்கள் நிற்கிறார்கள். சூரிய ஒளி அனைத்து உலகங்களையும் ஒளிரச் செய்கிறது. ஸ்ரீ ஸத்யஸாயி பகவானே! உங்களுக்குக் காலை மங்களகரமானதாக இருக்கட்டும்.
பதவுரை
சித்ராவதீதட | சித்ராவதியின் கரையில் |
---|---|
தட | கரை |
விஶால | அகன்ற |
ஸு- | நல்ல |
ஶாந்த | அமைதியான |
ஸௌதம் | அரண்மனை, மாளிகை |
ஸௌதே | மாளிகையில் |
திஷ்டந்தி | நிற்கிறார்கள் |
ஸேவகஜனா: | ஸேவகஜனங்கள் |
தவ | உன்னுடைய |
தர்ஶனார்த்தம் | தரிசனத்தின் பொருட்டு |
அர்த்தம் | பொருட்டு |
ஆதித்ய | சூரியன் |
ஆதித்ய காந்தி | சூரிய ஓளி |
அனுபாதி | ஒளிரச் செய்கிறது |
ஸமஸ்த | எல்லா |
லோகான் | உலகங்களையும் |
ஸ்ரீஸத்யஸாயிபகவன் | திருநாமம் (இங்கு விளி) |
தவ | உன்னுடைய |
ஸு | நல்ல |
ப்ரபாதம் | காலை |
தவஸுப்ரபாதம் | உங்களுக்கு காலை மங்களகரமானதாக இருக்கட்டும். |
விளக்கம்
புட்டபர்த்திக்கு! ஸ்தல பெருமை, தீர்த்தப் பெருமை, மூர்த்தி பெருமை மூன்றும் உண்டு. பவக் கடலிலிருந்து உயிர்களைக் கரை ஏற்ற வந்த எம்பெருமான் திவ்ய மங்கள விக்ரகமாக சித்ராவதியின் கரையில் உறைகிறார். அழகு தவம் செய்து அவதார புருஷரைத் தன் கரையில் உள்ள ஊரில் அவதரித்து இருக்கச் செய்து தன் பெருமையைக் கூட்டிக் கொண்டது. அகன்ற, தெய்வீக அமைதி கொண்ட ப்ரஸாந்தி நிலையத்தில், எம்பெருமானே‚ உன் தரிசனத்தின் பொருட்டு ஸேவக ஜனங்கள் நிற்கிறார்கள். எல்லா உலகங்களையும் ஆதித்தனொளி ஒளிரச் செய்கிறது. ஆதித்தனை ஒளிரச் செய்பவன் நீ. அவனுக்குக் கர்ம யோகத்தைக் கற்பித்தவன் நீ. நிற்காமல் வேலை செய்யும் ஸேவக ஜனங்கள் நிற்கிறார்கள் தரிசனம் தந்தாலன்றோ கர்ம யோகிகளான அவர்கள் தம் அலுவல்களைத் தொடர முடியும். ஆகவே எழுந்தருள்வீராக.
சித்ராவதி என்று ஆரம்பிக்கும் சுலோகம்:
இந்த நாள் பொழுது புலர்ந்தது. அறிவு என்ற சூரியன், அறியாமை என்ற இருளிலிருந்து. எழுப்பி விழிப்புறச் செய்கிறது. இறைவன் என்ற சத்குரு (சத்யசாயி பாபா). நம் வாழ்வின் வழிகாட்டியாக இருக்கிறார், நம் மனத்தின் தீமைகள் கெட்ட குணங்கள் அதாவது காமம், குரோதம், லோபம், மோஹம், மதம், மாத்சர்யம் என்ற இத்தீமைகளை விரட்டி நற்குணங்களான உண்மை ஒழுக்கம் அமைதி, அன்பு இவற்றை எங்களுள் நிறைக்க வேண்டும். பறவைகளும் விலங்குகளும் பூச்சிகளும் விடியலில் சுறுசுறுப்பு அடைந்து பகலொளியைத் தாங்காமல் விரைகின்றன. நமது பத்து அறிவும் நமது அலைபாயும் மனத்தில் செலுத்தப்படாமல் நல்லறிவாக நடத்தப்படும் இப்போது, நாம் நமது ஆத்மாவை நோக்கிய உள்முகப்பயணத்தை, அன்னமய கோசத்திலிருந்து தொடங்கியுள்ளோம்.
தரிசனத்தின் உட்பொருள்:
இந்த உயிரின் தெய்வீகத்தன்மை ஆறு ஆதார சக்திகளில் விழிப்புணர்வு பெற்று மேல் செலுத்தப்படட்டும். உமது உயர்வான ஞான ஒளியால் எமது அறிவு தெய்வத்தன்மை அடையட்டும்.
பாபாவின் தரிசனம் (இறைவன்) : அது ஒரு தனி உள் அனுபவம் (Frank Baranowski) ப்ராங்க் பாரனோஸ்கி என்ற விஞ்ஞானி “ஸ்வாமியிடமிருந்து பரவும் ஒரு வகை ஒளி பலவகை வண்ணங்களையுடையது,” என்கிறார். அவர் கிர்லியன் காமிராவை பயன்படுத்திப் பார்த்தபோது வெள்ளை, ஆரஞ்சு, நீலம், தங்கம், வெள்ளி என்ற வண்ணங்கள் இணைந்து பாபாவின் உருவத்திலிருந்து பரவுவதைக் கண்டார். இவ்வுலகில் எவரிடமிருந்தும் இத்தகைய ஒளி இவ்வளவு பரவுவதை தான் கண்டதில்லை என்று கூறுகிறார்.
தெய்வீகம் மிக்கவரின் தரிசனம்:
உட்பொருள் – தரிசனம் ”பாபநாசனம்” என்பது பழமொழி. ஒரு புனிதரின் தரிசனம் நமது முந்தைய பாவங்களை அழித்து நீக்கும் எப்படி? ஒரு தவசியின் உடலிலிருந்து வெளி வரும் ஒரு வகை ஒளி ஆச்சரியகரமானது. ப்ராங்க் பாரனோஸ்கி (Frank Baronowski)இது குறித்து விளக்குகிறார். அதாவது ஸாயியிடமிருந்து வெளிப்படும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி ஆகிய கதிர்கள் பக்தர்கள்பால் பரவுகின்றன. அதனால் ஆன்மாவும் மிகுந்த ஒளி பெறுகின்றது.