ஆசைக்கு உச்சவரம்பு-முன்னுரை

Print Friendly, PDF & Email
ஆசைக்கு உச்சவரம்பு

“விரும்பிய ஒன்றை அடைந்த பின் கிடைக்கும் மகிழ்ச்சியும் நிறைவும் தான்”ஆசையின் பரிமாணம் ஆகும். ஆசைகள் நம்மை தவறான முறையில் நம்ப வைக்கும். அதாவது,

(அ) ஆசைகள், நிறைவேற்றப்பட்டவுடன் மனதிலிருந்து மறைந்து விடும்.

(ஆ) நிறைவேற்றப்படுவதால் நமக்கு மனநிறைவும் கிட்டும்.

இந்த இரண்டு கருத்துக்களுமே உண்மை அல்ல என்று ஸ்வாமி வலியுறுத்துகிறார்.

“ஆசைகள் பெருகப் பெருக, மகிழ்ச்சி குறைகிறது என்பதை மனிதன் உணர்வதில்லை. ஆசைகளுக்கு வரம்பே கிடையாது. ஒரு எறும்பு புற்றில் எறும்புகள் பெருகுவது போல் அவை பெருகிக் கொண்டே போகும். நம்மிடையே எவ்வளவு பொருளும் மகிழ்ச்சியும் இருந்தாலும், நமக்கு நிறை உணர்வு இருப்பதில்லை. “எவன் ஒருவனுக்கு அளவில்லாத ஆசைகள் இருக்கிறதோ, அவனே உலகில் ஏழ்மையானவன். மனநிறைவுடன் இருப்பவனே செல்வந்தன்”

– பகவான் பாபா -1983

ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு, ஆசைகளின் வரம்பு இன்றியமையாததாகும். அளவில்லாத ஆசைகள் துக்கங்களின் பக்கம் இழுத்துச் செல்லும். இந்த செயல்கள் நமது ஆன்மீக முன்னேற்றத்திற்குத் தடையாக செயல்படும். எல்லையில்லாத ஆசைகள் ஒருவனின் மகிழ்ச்சியையும் உடல் நலத்தையும் சீர் குலைக்கும். ஆசைகளை குறைத்துக் கொள்வது இந்த வரம்பை நோக்கிச் செல்வதற்கான பாதையாகும். ஆசைகள் என்ற விதையைச் சுட்டுப் பொசுக்கினால் மறுபடி முளைக்காது.

இதிகாசங்களும் புராணங்களும் ஆசைகளின் வரம்பைக் கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. ஆசைகள், ஆசைகளை பெருக்குகின்றன. ஒரு ஆசை நிறைவேறினால் அது மற்ற ஆசைகளைத்தூண்டி கடைசியாக பேராசையில் முடிகிறது. நிறைவேறாத ஆசைகள் பொறாமையையும், கோபத்தையும். தூண்டுகின்றன. இவை மனிதனின் வீழ்ச்சிக்குக் காரணமாகின்றன.

அளவற்ற, நன்னெறியற்ற ஆசைகளை எப்படிக் களைந்து எறிவது? பகவான் பாபா கீழ்கண்ட கட்டளைகளைத் தருகிறார்.

  1. எப்போதும் கவனமாக இரு. கெட்ட சகவாசத்தை தவிர்
  2. தீயவற்றைபார்க்காதே; நல்லவற்றையே பார்.
    தீயவற்றை கேட்காதே; நல்லவற்றையே கேள்.
    தீயவற்றை பேசாதே; நல்லவற்றையே பேசு.
    தீயவற்றை எண்ணாதே; நல்லவற்றையே எண்ணுக.
    தீயசெயலைச் செய்யாதே நல்ல செயலையே செய்.
  1. செல்வம்
  2. உணவு
  3. காலம்

    (அ) நேரம் மற்றும்

  4. காலம்

    (அ) சக்தி

ஆகிய நான்கு வளங்களைக் கட்டுப்பாட்டுடன் உபயோகப்படுத்துவதன் மூலம், நமது ஆசைகளைக் குறைக்கும் ஓர் கருவியாக”, ஆசைக்கு ஒரு வரையறை” உதவி புரிகிறது.

மேலே கூறிய நான்கு வளங்களும் இறைவன் மனிதனுக்கு வழங்கிய பரிசுகளாகும். இந்த ஆற்றல்கள் அனைத்தும் இறைவனின் சொரூபம், எனவே மிகவும் புனிதமானவைகளாகும்.

1. காலம் கடவுளாகும். வீணாக்கப்பட்ட காலம் வீணாக்கப்பட்ட வாழ்க்கையாகும்:

காலத்தை வீணாக்காதீர்கள். இறைவன், காலாய நம: காலகாலாய நம: காலாதீதாய நம: காலஸ்வரூபாய நம: என்றெல்லாம் புகழ்ந்து பேசப்படுகிறார். காலமே இறைவன். ஆகவே நம்மை புனிதப் படுத்திக் கொள்ளும் வகையில் காலத்தைச் செலவிடுங்கள். காலத்தை வீணாக்காதீர்கள்.

– பகவான் பாபா – கோடை மழை -1993

2. ஆற்றல் (அல்லது) சக்தி எனப்படுவது இறைவனாகும்:

கோபம், ஆசைகள், வேறு பல தீய எண்ணங்கள், உடல் வலிமை, மனவலிமை மற்றும் ஆன்மீக ஆற்றல் ஆகியவற்றை குறைத்து வெறுமையாக்குகிறது. சக்தியை வீணாக்காதீர்கள். “மக்கள், தீய எண்ணங்கள் மூலம் தீயதை பார்த்தல், தீயதை கேட்டல், தீய செயல்கள், ஆகியவற்றில் ஈடுபட்டு, தங்கள் ஆற்றலை வீணடிக்கிறார்கள்.

– பகவான் பாபா – கோடை மழை-1993

3. செல்வம் கடவுளாகும்:

செல்வம் இறைவனுடைய உருவமாகும். இறைவனைச் செல்வமாகக் கருதுவதால், பணத்தை தவறான வழியில் உபயோகப்படுத்துவது தீங்காகும். அளவுக்கும் மீறி வீணாகப் பணத்தைச் செலவழிப்பதை விடுத்து, பொருள், உணவு, உடை, வீடு இவைகளைக் கொடையாக வழங்கும் பழக்கத்தைக் கடைபிடியுங்கள். பணத்தைத் தவறான வழியில் செலவழிப்பது தீய செயல் மட்டுமல்ல; பாவச் செயலுமாகும்.

– பகவான் பாபா – கோடை மழை -1993

4. அன்னம் இறைவனாகும்:

ஒருவன் வீணாக்கும் உணவு, பட்டினியால் வாடும் மற்றொருவனின் பசியைப் போக்கும். உணவை வீணடிக்காதீர்கள். உங்கள் தேகம் உணவினாலானது. உங்கள் பெற்றோர் உண்ட உணவின் விளைவுதான் நீங்கள். “அன்னம் ப்ரம்மா“ (அன்னம் இறைவனாகும்). தேக ஆரோக்கியத்திற்கு மிதமான உணவு உண்ணுங்கள். (ஸ்வாமி கூறுவது- மித திண்டி, அதி ஹாயி) தேவைக்கு அதிகமான உணவை பரிமாறிக்கொண்டு வீணடிக்காதீர்கள்.

– பகவான்பாபா – கோடை மழை -1993

ஸ்வாமி காருண்யானந்தா ஒருமுறை பாபாவிடம் கேட்டார் – ஸ்வாமி! நீங்கள் இறைவன் அவதாரம். தற்பொழுது ஸ்தூலமாக வீற்றிருக்கிறீர்கள்.அப்படியிருக்க இந்த சுவற்றிற்கு அப்பால் சிறு குழந்தைகள் குப்பை தொட்டியில் கிடக்கும் தூக்கி எறிந்த உணவுப் பண்டங்களுக்காக தெரு நாய்களுடன் சண்டையிடுகிறார்களே இது எப்படி சாத்தியம் ஸ்வாமி?

பகவான் பாபா காருண்யானந்தாவிடம் கூறினார், “இந்தக் குழந்தைகள் முற்பிறவிகளில் செல்வந்தர்களாக சகல சுக போகங்களுடன் வாழ்ந்தவர்கள். மேசையில் குவிந்து கிடந்த பலவித உணவுகளை அலட்சியமாக இதில் துளி அதில் துளி என்று கொத்திக் கொத்தி உண்டார்கள். உண்ட உணவை விட அதிகமான அளவை மதிப்பு மிக்க பண்டங்களை இறுமாப்புடன் தூர எறிந்தார்கள். அதன் விளைவாகத் தான் குப்பை மேட்டில் எறிந்த அந்த உணவுப் பண்டங்களை இந்த பிறவியில் பொறுக்கி உண்கிறார்கள்” என்றார்.

ஆசைகளை வரம்பில் வைப்பதற்கு உண்டான சில குணநலன்களான தன்னலமற்றல், பொறுப்பாகவும் பகிர்ந்து கொள்ளும் தன்மை, அடுத்தவர்களின் நலனில் அக்கறை மற்றும் கையிலிருக்கும் பொருளை சிக்கனமாக செலவிடுதல் ஆகியவற்றை நாம் கடைப்பிடிக்க அனைத்தும் ஆகும். இக்கருத்துக்களைக், குழந்தைகளின் மனதில் பதிய வைக்கும் விதத்தில், பொருத்தமான கதைகளைத் தேர்வு செய்து சொல்ல வேண்டியது பெற்றோர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பாலவிகாஸ் குருமார்களின் பொறுப்பாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: