தெய்வீக லீலைகள்

Print Friendly, PDF & Email
ஒம் ஸ்ரீ சாயிராம்
பர்த்தியில் கோர்த்த நல்முத்துக்கள்

‘தர்சனம் பாப நாசனம் ஸ்பர்சனம் கர்ம விமோசனம் ஸம்பாஷனம் ஸங்கட நாசனம்’

இறைவன் அளவிடமுடியாத வல்லமை பெற்றவன். அவனது மகிமைகள் லீலைகள் கட்டுக்குள் அடங்காமுடியாதவை. சொல்லமுடியாத ஆனந்தம் அளிக்கவில்லவை. ராமாவதாரம், கிருஷ்ணாவதாரத்தின் மகிமைகளை நாம் கேட்டும் நூல்களில் படித்தும் மகிழ்ந்திருக்கிறோம். ஷிர்டி ஸாயியாக இறைவன் அவதரித்து லீலைகள் புரிந்தவை சில பக்தர் அனுபவித்துக் கூறியதையும் கேட்டிருக்கிறோம். ஆனால் இறைவன் ஸத்ய ஸாயியாக அவதரித்து செய்த லீலைகள், மகிமைகள், அற்புதங்கள் இவைகளை நேரில் கண்டும் கேட்டும் பரவசமடைகிறோம். பகவானின் 108 நாமாவளிகளில், உள்ள ஒவ்வொரு லீலையும், மகிமையும், அற்புதமும், பக்தர்கள் மனதார அனுபவித்து உணர்ந்தவை. இறைவன் இக்கலியுகத்தில் பூவுலகில் தோன்றி செய்த அற்புதங்களைக் கூடவே இருந்து பார்த்து அனுபவித்த பாக்கியசாலிகள் நாம். இவரது ஒவ்வொரு நாமாவளிக்கும் தகுந்த ஒரு லீலையை கோர்த்து அளித்திருக்கிறோம். பக்தி என்ற நூல் கொண்டு 108 நல்முத்துக்கள் கோர்த்தெடுத்த இம்முத்து மலையை எம் இதய தெய்வமாம் பகவான் ஸ்ரீ ஸத்ய சாயிநாதனின் கமல மலர்ப் பாதத்தில் பரிபூர்ண ப்ரேமையுடன் ஸமர்ப்பிக்கிறோம். இறைவன் சாயியின் பெருமைகளை எடுத்துக் கூறும் ஓர் இனிய நூலை தொகுத்தளிக்கக்கூடிய ஓர் அரிய வாய்ப்பை எங்களுக்கு தந்தருளிய இறைவனுக்கு எமது பணிவு கலந்த நன்றி வணக்கங்கள்.

ஸ்ரீ சத்ய சாயி டிரஸ்ட் (தமிழ்நாடு)
1. ஒம் ஸ்ரீ பகவான் ஸத்ய ஸாயி பாபாய நம:

ஸத்ய-ஸாயி – ஸத்தியத்தில் ஸயனிப்பவர் ஆயி – அன்னை பாபா – தந்தை

பாபாவின் தாய் ஈஸ்வரம்மா. இரண்டு பெண்மகவும், ஒரு ஆண் மகவும் பெற்றிருந்த ஈஸ்வரம்மா, தனக்கு இன்னொரு ஆண் மகவும் வேண்டும் என்று இறைவன் ஸத்ய நாராயணைக் குறித்து நோன்பு இருந்தார். அவரது கோரிக்கையை நிறைவேற்றி அந்த அம்மையார் கேட்ட வரத்தை கொடுத்தார் இறைவன். ஆன்மீக முன்னேற்றத்திற்கு முதற்கண் வேண்டப்படுவது ஸத்தியம் என்று பாபா கூறுகிறார். வாழ்க்கையை நல்ல முறையில் வாழ நாம் உண்மையையே பின்பற்ற வேண்டும். அந்த உண்மை உருப் பெற்று விளங்கினால்? ஆம்! அதுவே ஸத்ய ஸாயி பாபா! இறைவன் ஸத்ய ஸாயி! உண்மையையே படுக்கையாகக் கொண்டு சயனித்தார். 1926- ம் ஆண்டு, நவம்பர் திங்கள் 23-ம் நாள், கார்த்திகை சோம வாரம், திருவாதிரை நட்சத்திரத்திலே, அன்னை ஈஸ்வரம்மாவின் பிராத்தனைக்கு இணங்கி, அவரது திருமகனாக இறைவன் அவதரித்தார். தனக்கு ஆண் மகவு வேண்டும் என்று ஈஸ்வரம்மா ஸத்ய நாராயண பூஜை செய்ததால், ஸத்ய நாராயணன் என்ற பெயராலேயே அக்குழந்தை அழைக்கப்பட்டான். பிறந்த அக்குழந்தை கீழே துணியில் கிடத்தியபோது அத்துணி விசித்திரமாக மேலும் கீழும் நகருவதைக் கண்ட அந்த கிராமப் பெண்கள், என்ன என்று பார்க்கையில்! என்ன அதிசயம்! துணிக்குவியலுக்கு அடியில் ஒரு பாம்பு மண்டலமிட்டு படுத்திருப்பதைக் கண்டனர்! ஸத்ய ஸ்வரூபமான நாராயணனே அவதரித்திரருக்கிறார்! அனந்த ஸயனனுக்கு ஆதிசேஷனே படுக்கையாக அமைந்தார்!

ஓ ஸாயி! இளவா! ஸத்தியத்தில் ஸயனித்திருப்பவரே! உமக்கு எனது வணக்கம்.

2. ஒம் ஸ்ரீ ஸாயி ஸத்யஸ்வரூபாய நம:

ஸத்ய – உண்மை ஸ்வரூப –வடிவமுடையவர்

ஸத்யகம ஸாயி! உண்மையே வடிவமுடையவர். இறைவன் எங்கும் இருப்பவர். பர்த்தியில் ஒரு நாள் பாபா தனது இருக்கையில் அமர்ந்து, சுற்றி அமர்ந்திருந்த பக்தர்களுடன் விளையாட்டாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். சென்னைலிருந்து வந்திருந்த பக்தர் ஒருவருக்கு நூதனமான எண்ணம் ஒன்று தோன்றியது. சிரித்த முகத்துடன் அமர்ந்திருக்கும் பகவானை ஒரு போட்டோ எடுக்க எண்ணி, தனது பையிலிருந்து ‘காமிராவை’ எடுத்தார். அதற்குள் பாபா எழுந்திருந்து காமிராவை தன்னிடம் கொடுக்குமாறு கேட்டார். காமிராவை தன கையில் வாங்கிக் கொண்ட பிறகு ஸ்வாமி அந்த பக்தரை தான் அமர்ந்திருந்த சோபாவிற்குப் பின்னால் போய் நிற்குமாறும், காமிராவை தான் இயங்குவதாகவும் கூறினார். தெலுங்கானாவிலிருந்து வந்திருந்த இரண்டு பக்தர்கள் இதை விரும்பவில்லை. ஸ்வாமி இல்லாமல் போட்டோ எடுக்கக் கூடாது என்பது அவர்களது விருப்பம். அங்கு இருந்த திரு. கஸ்தூரி, “பாபாவே காமிராவை இயக்கும்போது அவரது இருக்கை காலியாக இருக்காது” என்று கூறினார். பாபாவும் இதை ஆமோதித்தார்! அப்போது திரு. கஸ்தூரி தனது கையை பகவான் பாதத்தை வைக்கும் இடத்தில் வைத்தார். காரணம் என்னவென்றால் ஸ்வாமி எடுக்கும் போட்டோவில், காலியாக இருக்கும் அவரது இருக்கையில், ஸ்வாமியின் உருவம் அங்கு தோன்றினால் அவரது பாதத்திற்கு அடியிலோ அல்லது பாதத்தின் மேலோ தனது கை இருக்வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால்! ஸ்வாமி அவரை அங்கிருந்து தனது கையை எடுக்குமாறு கூறினார். அவரும் கீழ்படிந்தார். ஸ்வாமி காமிராவை இயக்கிய பின் அந்த பக்தாிடம் அதை திருப்பி கொடுக்கும்பொழுது “ஏய்! ஜாக்கிரதை, அதில் நான் இருக்கிறேன்” என்று கூறினார். பத்து நாட்கள் கழித்து அதன் பிரதி திரு.கஸ்தூரிக்கு வந்தது. என்ன ஆச்சாியம்! அவர் அதில் கண்டது என்ன? சுற்றிலும் பக்தர்களும் திரு. கஸ்தூாியும் அமர்ந்திருக்க பகவான் அந்த சோபாவில் அமர்ந்து இருந்தார்!

ஓ ஸாயி! உண்மையின் ஸ்வரூபகமே! உமக்கு எனது வணக்கம்.

3. ஓம் ஸ்ரீ ஸாயி ஸத்ய தர்ம பராயணாய நம:

தர்ம – தர்மத்தில் பராயண – ஈடுபட்டிருப்பெருக்கு

ஸத்யகம ஸாயி! உண்மையே வடிவமுடையவர். இறைவன் எங்கும் இருப்பவர். சத்தியம், தர்மம், சாந்தி, ப்ரேமை இவைகளின் உயர்வினைக் குறித்து எல்லோரும் பேசுகிறார்களே தவிர பாபா ஒருவர் மட்டுமே, மிகத் தெளிவாக இதை கடைபிடித்து வருகிறார். திரு.கஸ்தூரி தனது தாய், மனைவியுடன் பெங்களுரில் அப்போது இருந்தார். கஸ்தூரி ஸ்வாமியை தனது வீட்டிற்கு வரவேண்டும் என்று பிரார்த்தித்தார். “ஓ உனது வீடா?” என்று கேட்டார் ஸ்வாமி. “இல்லை ஸ்வாமி, அது உங்கள் வீடு, அங்கு உங்களது பதம்பாட வேண்டும் என்பது எங்கள் விருப்பம் ” என்று கஸ்தூரி கூறினார். “எனது வீட்டுக்கு என்னை அழைக்க நீ யார்? எனது வீட்டின் உள்ளும், வெளியிலும் எனது விருப்பம் போல் நான் இருப்பேன்” என்று கூறிவிட்டார் ஸ்வாமி. பிறகு விநாயக சதுர்த்தி அன்று வீட்டிற்கு வருவதாக ஒப்புக்கொண்டார். பகவான்! அதேபோல் மற்றும் சில பக்தர்களிடம் ஸ்வாமி இதே மாதிரி அவர்களுடைய வீட்டிற்கு வருவதாக உறுதி இட்டுக் குறி இருந்தார்! அந்த பன்னிரண்டு பக்தர்கள் தம் வீட்டையும், இதயத்தையும் திறந்து வைத்துக் கொண்டு பகவான் வரவுக்காக காத்திருந்தார்கள். காலை போய் மதியம் ஆயிற்று! மாலை ஐந்து மணியும் ஆயிற்று! உஹும்! ஸ்வாமி வரவில்லை! ஐந்து மணிக்குமேல் இந்த பன்னிரண்டு பேரும் பாபாவைச் சுற்றி வருத்தத்துடன் நின்று கொண்டிருந்தார்கள். பாபா இந்த காட்சியை மிகவும் ரசித்தார்! பாபா கூறினார்” நான் உங்களுடைய வீடுகளுக்கும் வந்திருந்தேன். நான் எப்போதும் எனது வார்த்தையை உண்மை இல்லையென ஆக்கமாட்டேன். நான் உங்கள் எல்லோருக்கும் ஒரு ஸமிக்ஞ காட்டினேன். இப்போது சொல்லுங்கள். நீங்கள் எனது போட்டோவுக்குப் போட்டிருந்த மாலை இரு துண்டாகி கீழே விழவில்லை?” ஆம்! பன்னிரண்டு பேர்களுடைய வீட்டிலும் உள்ள பாபாவின் போட்டோவிலிருந்த மாலை இரு துண்டுகளாக விழுந்து இருந்தது! இதைக்கேட்டு, அவர்களுடைய முகங்கள் மலர்ந்தன. பன்னிரண்டு பேரும் நன்றியுடன் பகவானின் பாதத்தை நமஸ்கரித்தனர். இறைவன் ஸாயி தனது வாக்கின்படி பன்னிரண்டு பேருடைய வீட்டிற்கும் சென்று தான் கூறிய சத்தியத்தை நிறைவேற்றினார்.

ஓ ஸாயி! ஸத்ய-தர்மத்திகலகய ஈடுபட்டிருப்பவனே! உமக்கு எனது வணக்கம்.

4. ஒம் ஸ்ரீ ஸாயி வரதாய நம:

வர – வரத்தை , தாய – கொடுப்பவருக்கு

ஸத்யகம ஸாயி! உண்மையே வடிவமுடையவர். இறைவன் எங்கும் இருப்பவர். ஒரு நாள் பாபா அவரைச் சுற்றி பக்தர்கள் குழு அமர்ந்திருந்தார். அப்போது பண்டிதர் ஒருவர் “ஸ்வாமி! இறைவன் பூவுலகில் அவதரித்ததைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறோம்” என்று பகைவனைக் கேட்டார். அன்னை ஈஸ்வரம்மாவும் அப்போது அங்கு இருந்தார். பகவான் ஈஸ்வரம்மாவின் பக்கம் திரும்பி “உனது மாமியார் உன்னை எச்சரித்தபின் அன்று அந்த கிணற்றுக்கு அருகில் என்ன நடந்தது? அதை இவர்களுக்குச் சொல்” என்றார். கொண்டம ராஜுவின் துணைவியான ஈஸ்வரம்மாவின் மாமியார் தன் கனவில் ஸத்ய நாராயணன் தோன்றியதாகவும் ஏதாவது அதிசயங்கள் இறைவன் அருளால் உனக்கு நேர்ந்தால் நீ பயப்படக் கூடாது என்று தன்னை எச்சரித்ததாக ஈஸ்வரம்மா கூறினார். “அதே போல் அன்று காலை நான் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெரிய பந்து போன்ற நீல ஒளி உருண்டு என்னை நோக்கி வந்தது. நான் மயங்கி விழுந்துவிட்டேன் . என்னுள் அது பிரவேஸித்ததை என்னால் உணர முடிந்தது” என்று கூறினார். இறைவன் ஈஸ்வரம்மா கேட்ட வார்த்தை அவருக்கு கொடுத்து அவரது மகனாக அவ்ரதரித்தார்.

ஓ ஸாயி! கேட்ட வரங்களை கொடுப்பவரே! உமக்கு எனது வணக்கம்.

5. ஓம் ஸ்ரீ ஸாயி ஸத்புருஷாய நம:

ஸத் – நிலைபெற்ற புருஷ – ஆத்மாவுக்கு புருஷ் – புாி என்னும் தேகத்தில் உரைவதால் புருஷ்

இறைவன் ஸத்புருஷன்; இறைவன் மனிதனாக அவதரித்திருக்கிறார். மனித சரீதத்தினுள் இறைவன் இருப்பதால் அவனே ஸத் புருஷன் என அழைக்கப்படுகிறான். பாபாவின் தந்தையார் வெங்கமராஜு 18 வயதே ஆன தனது சிறிய மகனைச் சிகிச்சைக்காக மதனப்பள்ளியிலுள்ள காசநோய் மருத்துவமனையில் சேர்த்திருந்தார். மருத்துவர்கள் அந்தப் பையனின் வலது பக்க நுரையீரலில் ஆபரேஷன் செய்தார்கள். அது நல்லபடியாக முடிந்திருந்தது. வெங்கமராஜு ஒரு அஞ்சலட்டையில் பாபாவுக்கு இதைப் பற்றி எஹுதி இருந்தார். அது அன்றைய தபாலில் மற்றயை கடிதங்களுடன் வந்திருந்தது. பாபா எல்லா கடிதங்களையும் மடியில் வைத்துக்கொண்டு, அந்த கட்டுகளில் உள்ள கடிதங்களை ஒன்றின்பின் ஒன்றாக தள்ளிகொண்டே வந்தார். வெங்கமராஜு எழுதி இருந்த அஞ்சல் அட்டையை எடுத்து ஒரு நொடி அதைப் பார்த்து விட்டு, எதிரில் இருந்த திரு. கஸ்தூரியை நோக்கி அதை வீசினார். கஸ்தூரியும் அதைக் கையில் எடுத்துக்கொண்டார். ஸ்வாமி கடிதத்தை படிக்குமாறு கட்டளையிட்டார். அது தெலுங்கில் எழுதப்பட்ட கடிதம்! கஸ்துரி அதிலிருந்து இரண்டு வரிகள் படித்தார். போதும் நிறுத்து என்று கூறிய ஸ்வாமி, “யாரிடமிருந்து அந்த கடிதம் வந்திருக்கிறது” என்று கூறினார் கஸ்தூரி. “ஆம்! இந்த உடலுக்குத் தந்தை! அவர் என்னை எப்படி அழிக்கிறார் என்பதை அறிய நீ ரொம்ப ஆவலாக இருந்தாய் இல்லை?” என்று கேட்டார் ஸ்வாமி! அக்கடிதத்தில் என்ன எழுதி இருந்தது? ஸ்ரீ ஸத்ய ஸாயி பாபாவுக்கு பெத்த வெங்கம ராஜுவின் சாஷ்டாங்க நமஸ்காரம் என்று எழுதி இருந்தார் பெத்த வெங்கமராஜு மனித சரீரம் எனினும் வந்திருப்பது ஸதிர புருஷன் என்பதை அவர் அறிந்திருந்தார்!

ஓ ஸாயி! மனித சரீரத்தில் அவதரித்துள்ள நிலைபெற்ற புருஷா! உமக்கு எனது வணக்கம்.

6. ஓம் ஸ்ரீ ஸாயி ஸத்ய குணாத்மகன நம்:

ஸத்ய – முக்காலத்திலும் அழியாத, குண – குணங்களின், ஆத்மனே – வடித்திற்க

“கடமையையும் குணங்களையும் கடந்த பரம்பொருள், ஒரு கடமையையும் பாத்திரத்தையும் ஏற்று வந்திருக்கிறேன்” என்று பாபா குறு இருக்கிறார். எக்காலத்திலும் அழியாதது ஸத்தியம் – அதுவே இறைவன். இறைவன் மானுடரூபம் தரித்து பூவுலகிற்கு வந்திருக்கிறார். அவர் நினைப்பது ஸத்தியம்- பேசுவது ஸத்தியம் – செய்வது எதுவாயினும் அதுவே ஸத்தியம். தெலுங்கு ஆசிரியரான பாபாவின் அண்ணன் சேஷமராஜு! இவரால் முக்காலத்திலும் அழியாத இறைவனின் குணங்களை, அவரது அற்புதத்தின் உட்பொருளை, ஒரு சிறிதும் உணர முடியவில்லை! ஒளிமயமான நகரங்களிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து காத்திருந்து எளிமையான, கிராமத்தில் வாழும் தன் தம்பியை காரில் அழித்து செல்வதை, பெரும் குழப்பத்துடனும், பீதியுடனும் உண்மையான சகோதர பாசத்துடன் கவனித்து வந்தார். பாபாவிற்கு அப்போது வயது இருபது! அவர் சமூகத்தைப் பற்றியும், அதனுடைய குறைகளைப் பற்றியும் புகழைப் பற்றியும், அதன் துணைவர்களைப் பற்றியும், தான் அறிந்தவைகளை, ஒரு கடிதத்தின் மூலம் பகவானுக்கு தெரிவித்து எச்சரித்தார்! அதற்கு ஸ்வாமி ஒரு பதில் கடிதம் அனுப்பினார். எல்லாவற்றுக்கும் அவருக்கு அன்புடன் பதில் கடிதம் எழுதிவிட்டு “நெறி பிறழந்தாரை மீன்டும் நெறிப்படுத்திக் காக்கவே நான் வந்துளேன்! துன்புற்றோரின் துயர்துடைத்து, அவருக்கு வேண்டுவன அளித்து மகிழ்விப்பேன். உள்ளன்புடன் எனைப் போற்றி வழிபடுபவரை, நான் கடைசியில் தேற்றுகிறேன்! உயர்வு, தாழ்வு, புகழ்ச்சி, இகழ்ச்சி, இவற்றை ஒரு தன்மையாக்கிக் கொள்ளும் மன உறுதி எனக்குண்டு. ஆழ்ந்து நோக்கின் நான் கூறும் வாக்கு சத்தியம் விரைவில் வெல்லும்” என்று எழுதி இருந்தார்.

ஓ ஸாயி! முக்காலத்திலும் அழியாத குணங்களின் வடியுடையவனே! உமக்கு எனது வணக்கம்.

7. ஓம் ஸ்ரீ ஸாயி ஸாது வர்தனாய நம:

ஸாது – நன்மக்கள், வர்தனாய – காப்பவருக்கு

“ஒரு சமயம் ரிஷிகேசத்திலுள்ள வஸிஷ்ட குகையிலிருந்து திரும்பும் போது, பாபா தன் பூத உடலை விட்டு எங்கோ சென்றார். முதிர்ந்த யோகி ஒருவரைக் காப்பதற்காக அவ்வாறு சென்றதாக அவர் காரணம் சொன்னார். அதைப்பற்றி தெரிந்து கொள்ள எல்லோரும் ஆவலுற்றனர். அப்போது ஒரு பக்தரை பக்கத்தில் அழைத்து, “நீ கண்டத்தைக் கூறு” என்றார் பாபா. “கங்கையில் ஒரு பிணம் மிதந்து சென்றதைப் பார்த்தேன். அப்போது அதைச் சொல்வது உசிதமல்ல என்று பேசாமல் இருந்தேன்” எனக் கூறினார் அந்த பக்தர். ஸ்வாமி சிரித்தார். “அது ஒரு யோகியின் உடல். அந்த யோகியோ தான் நீரில் அடித்துச் செல்லப்படுவதை அறியவில்லை. ஒரு பாறையின் மீது நிஷ்டையிலிருந்த போது, வெள்ளம் அவர் அமர்ந்திருந்த பாறையின் அடியிலுள்ள மண்ணை அரித்துவிட, பாறை வெள்ளத்தினுள் விழுந்தது . யோகி நிஷ்டையிலிருந்த காரணத்தால், ரிஷி முழுகாமல் மிதந்து கொண்டு வெள்ளத்தோடு வெள்ளமாக சென்றார். பின்னர் யோகி விழிப்படைந்தபின் தான் தனது ஆபத்தான நிலையை உணர்ந்து தம்மைக் காப்பாற்றும்படி இறைவனை வேண்டினார். பாபா அந்த ப்ராத்தனையைக் கேட்டார். உடனே அவ்வுடலை மெதுவாக அனைத்துச் சிவானந்த நகருக்கு சில மைல்கள் மேற்புறமாக ஒரு சிறு குடிசை இருக்கும் இடத்தில் கரை சேர்ந்தேன்” என்று பாபா கூறினார்.

ஓ ஸாயி! ஸாதுக்களைக் காத்து போஷிப்பவரே! உமக்கு எனது வணக்கம்.

8. ஓம் ஸ்ரீ ஸாயி ஸாதுஜன போஷணாய நம:

ஸாது ஜன – ஸாது ஜனங்கள், போஷணாய – போஷிப்பெருக்கு

“ஒரு சமயம் ரிஷிகேசத்திலுள்ள வஸிஷ்ட குகையிலிருந்து திரும்பும் போது, “ஸாதுக்களும், ஸாதகர்ளும் தான் வர வேண்டும் என்று பிராத்தனை செய்ததாலேயே நான் உலகில் தோன்றியுள்ளேன். உனது ஆன்மீக வளர்ச்கிக்குத் தடையாக நிற்கும் உனது வறுமையையோ, பினியையோ, நான் உன்னை நோக்கி வந்து சரி செய்து விடுவேன்” என்று கூறியுள்ளார் பாபா. வடகோடியில் இருக்கும் வஸிஷ்டர் குகையில் வசித்து வரும் புருஷோத்தமானந்தா தென் கோடியில் இருக்கும் பத்மநாபரை நினைத்துப் பரவசம் அடைந்திருந்தார். அச்சமயம் பாபா தாமே அங்கு சென்று, அங்கு இருந்தவர்களை வெளியே போகச் சொல்லிவிட்டு குகையை முடச் சொன்னார். பிறகு பாபா எழுந்து வயதான அந்த துறவியின் மடியில் சயனம் செய்தார். பாபாவின் உடல் அந்த குகை கொள்ளாமல் ஆனதுமல்லாமல், அவரது முகத்திலிருந்து உடலிருந்தும், அதிப் பிரகாசமான ஒளி எல்லா இடங்களிலும் வியாபித்திருந்தது! துறவியும் அவரது இரு சிஷ்யர்களும் பிரமித்து போயினர்! துறவியின் இதயத்தில் பதிந்திருக்கும் பத்மநாபரின் தரிசனம் தந்ததாக பாபா கூறினார்! ஆரம்பத்தில் அந்த குகையில் நெருப்பு உண்டாக்க முடியமால் புருஷோத்தமானந்தா அவதிப்பட்டுக் கொண்டிருந்த போது, ஒரு மூலையில் ஒரு கட்டுத் தீப்பெட்டி இருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார். அதைத் தானே அங்கு வைத்ததாக பாபா கூறுகிறார். அந்த குகைக்கு அத்துறவி முதன் முதல் வந்தபோது பட்ட துன்பங்களையும் அல்லல்களையும் பாபா நினைவுபடுத்தினார். பாம்பு புலிகள் நிறைந்த அந்த காட்டின் நடுவில், அவர் துயர் உற்றதையும் தான் உடன் இருந்து அவரைக் காத்ததையும் கூறினார். இவ்வாறு ஸாது ஜனங்களின் துயர் நீக்கி அவர்களை போஷித்து, பாலித்து வருகிறார் பாபா.

ஓ ஸாயி! ஸாது ஜனங்களைக் காப்பவரே! உமக்கு எனது வணக்கம்.

9. ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வக்ஞாய நம:

ஸர்வ – எல்லாவற்றையும், ஞா– அறிதல்

எல்லோருள்ளும் இருப்பவர், எங்கும் நிறைந்தவர், எல்லாவற்றையும் அறிந்தவர் இறைவன் ஸாயி. பெங்களூரில் உள்ள ஹிந்தி பிரசார சபையின் செயளாலர் ஒருவர் ஒரு நாள் தனது நண்பரைக்காண அவர் வீட்டிற்குச் சென்றார். அங்கு அவர் சென்ற பின்பு தான், பாபா அந்த நண்பரின் வீட்டிற்கு வந்திருப்பதைப் பற்றி தெரிந்துகொண்டார் அங்கே கூடி இருந்த பக்தர்கள் அனைவரும் பாபாவின் பாதங்களில் விழுந்து வணங்கினார்கள். எல்லோரும் வணங்கும் போது தான்மட்டும் வணங்காமல் தனித்து நின்றிருந்தால் மற்றவர்கள் தன்னை கர்வம் கொண்ட மனிதன் என்று நினைப்பார்கள் என்ற ஆச்சத்தினால் அவர் பாபாவின் காலில் விழுந்து வணங்கினார். அப்படி அவர் வணங்கும் பொழுது, “இந்த வணக்கம் மாத்தூரில் உள்ள உன் குருவை அடைய வேண்டும்”, என்று நினைத்து வணங்கினார். வணங்கி எழும்போது பாபா அவருடைய முதுகை மெதுவாகத்தட்டி, “உன் நமஸ்காரம் மாத்தூரில் உள்ள உன் குருவை அடைந்துவிட்டது!” என்று இனிய குரலில் புன்னகையோடு கூறினார். “இறைவன் அறியாதது எதுவும் இல்லை! உன் முற்பிறவியையும், உன் அடுத்த பிறவியையும் நான் அறிவேன். அதனால் நீ ஏன் துன்பப்படுகிறாய் என்றும், அதிலிருந்து தப்பிக்கும் வழி என்ன என்றும் நான் அறிவேன்” என்று கூறினார் பாபா !

ஓ ஸாயி! எல்லாவற்றையும் அறிந்தவரே! உமக்கு எனது வணக்கம்.

10. ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வ ஜனப்ரியாய நம:

ஸர்வ ஜன – எல்லாவித மக்கள், ப்ரிய – ப்ரியன்

எபாபா எல்லோருக்கும் பிரியமானவர். அவர் சன்னிதானம் ஒன்றே எல்லா மக்களும் வரவேற்கப்படும் இடம். ஏழைகளின் பிணிபோக்குபவன், கற்றவர், கல்லாதவர், செல்வந்தர், துயர் உற்றோர், மகிழ்ச்சி உள்ளவர், வெளிநாடுகளில் உள்ளவர், பாலர்கள், முதியவர்கள் என்று அனைவருக்கும் பிரியமானவன். அன்னையாய், தந்தையாய், நண்பனாய், கடவுளாய், காவலனாய், எல்லோருமே தானாகி நிற்பவர். பாரபட்சமின்றி எல்லோரிடமும் அவர் காட்டும் அன்பே, எல்லோராலும் அவர் விரும்பப்படும் காரணம். 1957 -ஆம் ஆண்டு , வேங்கடகிரியில் ஒன்பதாவது தெய்வீக வாழ்வுச் சங்கத்தின் மாநாடு ஆரம்பிக்கும் முதல் நாளே கானஹஸ்தி, ரிஷிகேஷ், ராஜமஹேந்திரம், சென்னை, முதலான இடங்களிலிருந்து சந்யாஸிகள் வந்து குவிந்தனர். பாபாவை மாநாடு ஆரம்பமாக இருக்கும் கழமண்டபத்துக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்ல மலர்களால் நன்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு ஒன்றை வெங்கடகிரி அரசர், தன் அரண்மனை முன் வாசலில் வைத்திருந்தார். பாபா வெளியே வந்தார். பல்லக்கில் வருமாறு அரசர் மிக வேண்டியும் அதை வேண்டாம் என்று மறந்துவிட்டு, “இங்கு எத்தனையோ சந்யாஸிகள் வந்துள்ளனர். அவர்களுடன் நானும் நடந்து செல்லவே விரும்புகிறேன்”, என நடந்து வந்தார். உயர்வு, தாழ்வு இல்லாத இறைவன், சந்நியாசிகளின் நடுவில் ரத்தின ஹராம் போல விளங்கினார்.

ஓ ஸாயி! எல்லோராலும் விரும்பப்படுபவரேய! உமக்கு எனது வணக்கம்.

11. ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வ சக்தி மூர்த்தயே நம:

ஸர்வ – எல்லா, ஸக்தி – ஆற்றல், மூர்த்தி – உருவம்

குஜராத்தில் உள்ள ஜாம் நகருக்கு பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பாபா அங்கு சென்றிருந்தார். அங்கிருந்து பக்தர்கள் புடைசூழ துவாரகைக்குச் சென்றார். பாபா வருவதற்கு முன்பே ஸாயிபக்தர்களும் துவாரகை மக்களும் அங்கு உள்ள க்ருஷ்ணர் கோவிலில் குழுமி இருந்தனர். ஸாயி பக்தர்கள் துவாரகா க்ருஷ்ணரைக் காணச் சென்ற போது துவாரகா மக்கள் ஸாயிகிருஷ்ணனை சூழ்ந்து கொண்டனர். கூட்டமிகுதியால் அங்கு பிரதிஷ்டை செய்ப்பட்டிருந்த க்ருஷ்ணரை நன்றாகப் பார்க்க முடியவில்லை. இதனால் பாபா பக்தர்களிடம் இரக்கம் கொண்டார். திரும்பும் வழியில் ‘கூரங்கா’ என்ற இடத்தில் காரை நிறுத்தச் சொல்லி பாபா இறங்கினார். அலைகளின் ஓரமாக களிப்போடு நடந்தார். சற்று நேரம் கழித்து மணலில் வந்து அமர்ந்து கொண்டு, தமக்கு முன்னால் இருந்த மணலை ஒரு முழு உயர்துக்குக் குவிக்கத் தொடங்கினார். எதோ அற்புதம் நடக்கப் போகிறது! அதைக்கான பக்தர்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டனர். அந்த மனாட்குவியலின் மேற்பகுதியை பாபா சாமபடுத்தினார். பின்னர் அதில் மூன்று சாய்வு கோடுகளை விரைந்தார். அதன் மேல் ஒரு வட்டத்தைப் போட்டார். வட்டத்திற்கு மத்தியில் சிறிய குறுக்குக் கோடு ஒன்றையும் வரைந்தார். “எல்லாம் தயார்”, என்று கூறினார். வட்டம் தலையாகவும், சிறிய முக்கோணம் மயிலிறகாகவும், குறுக்குக்கோடு புல்லாங்குழலாகவும் உருவானதை பக்தர்கள் அறியவில்லை. பாபா தனது திருக்கரத்தை மணல் குவியலுக்குள் விட்டு பதினைந்து அங்குலமுள்ள க்ருஷ்ணரின் பொற்சிலையை எடுத்தார்! “கோவிலில் க்ருஷ்ணனை சரியாக தரிசிக்க முடியவில்லை அல்லவா? இப்பொழுது தரிசித்துக் கொள்ளுங்கள்”, என்று பக்தர்களை அழைத்துக் காண்பித்தார்! இறைவன் ஒருவனே எல்லா சக்தியும் பெற்றவன்.

ஓ ஸாயி! எல்லா ஆற்றலையும் உடைய இறைவா! உமக்கு எனது வணக்கம்.

12. ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வேசாய நம:

ஸர்வ – எல்லா, ஈசா – தலைவர்

“பூஜிக்கப்படும் இடங்களில் அந்த தெய்வமாக இருக்கிறேன். யாக யக்ஞங்களில் சமர்ப்பிக்கும் அனைத்து பூஜையையும் ப்ரார்த்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்”, என பகவான் பாபா கூறி இருக்கிறார். பக்தர்களுக்கு பிருந்தாவன கோபாலனாகவும் நரசிம்ஹராகவும் பரமன் காட்சி அளித்துள்ளார். கமலாபுரத்திலுள்ள ஒரு பக்தருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தனது தாயாருக்கும், தசாவதார கட்சிகளைக் காண்பித்தார். ஒரு தடவை “கவனியுங்கள்! அதோ! ஷீர்டி ஸாயிராம்”, என்று பாபா கூறியவுடன், யாரோ ஒருவர் கட்டைச் செருப்புடன் நடந்துவரும் ஓசையை ஈஸ்வரம்மா முதலானோர் கேட்டனர். முதற் சத்தம் கேட்டவுடன் “யார் செருப்புடன் உள்ளேய வருவது?” என்று அன்னை கேட்டாராம். அன்னையின் அனுபவம் இது! பெனுகொண்டாவில் வழக்கறிஞராக இருந்தவர் கிருஷ்ணமாச்சாரி என்பவர். இவர் வெங்கமராஜுவிடம் “நீ ஒரு ஏமாற்றுவித்தைக்காரன். உன் மகனை வைத்துப் பாமர மக்களை நீ ஏமாற்றுகிறாய்” என்று கூறினார். தந்தை, பாபாவிடம் சென்று “உனது உண்மையான சக்தியை காட்டு, நம்பாதவர்களின் சந்தேகத்தைப் போக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார். சந்தத்தோடு அங்கு எல்லோரையும் அழைத்து வரச் சொன்னார். சுப்பும்மாவை அழைத்து, “உனக்கு ஷிரடியைப் பார்க்க வேண்டுமா? என கேட்க, அவர் “ஆம்” என்று சொன்னார். உள்ளே ஒரு அறைக்குக் கூட்டிச் சென்று காண்பித்தார். என்ன அதிசயம்! ஊது பத்திகள் மணத்தை பரப்ப மூலையில் ஒருவன் அமர்ந்து மந்திரத்தை முணுமுணுக்க ஷிர்டிஸமாதி அவர்கள் முன் அப்படியே தோன்றியது. சூப்பும்மா, கிருஷ்ணமச்சாரியையும் உள்ளே சென்று பார்க்கும்படி தூண்ட அவரும் அதைக் கண்டு மெய்மறந்து நின்றார்! தெரியாமல் பேசிவிட்டதாக கூறி வெங்கமராஜுவிடம் மன்னிப்பு கேட்டார் வழக்கறிஞர்.

ஓ ஸாயி! எல்லாவற்றுக்கும் தலைவரே! உமக்கு எனது வணக்கம்.

13. ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வ ஸங்க பாித்யாகினே நம:

ஸர்வ – எல்லாவிதமான, ஸங்க – பற்றுகள், தளைகள், பாித்யாகினே – விட்டுவிட்டவருக்கு

ஸத்யாவை எப்படியாவது, பள்ளி இறுதி வகுப்புவரை படிக்கவைத்து, அரசாங்க உத்யோகத்துக்குத் தகுதி பெறச் செய்துவிடவேண்டும், என்று ஸத்யாவின் அண்ணா சேஷமராஜு நினைத்தார். ஸத்யாவை அவர் மீண்டும் உரவ கொண்டா உயர்நிலைப் பள்ளியில் கொண்டுபோய் சேர்த்தார். 1940-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 20-ஆம் நாள் ஸத்யா வழக்கம் போல் பள்ளிக்குப் புறப்பட்டார். சில நிமிடங்களுக்கு பிறகு வீட்டிற்கு திரும்பி வந்து “நான் இனி ஸத்யா அல்ல. என் பக்தர்கள் என்னை அழைக்கிறரர்கள். நான் போகிறேன்”, எனக் கூறிவிட்டு எக்ஸைஸ் இன்ஸ்பெக்டரின் பங்களாவில் உள்ள தோட்டத்தில் போய் அமர்ந்து கொண்டார். அண்ணி எவ்வளவு கெஞ்சியும் கேட்கவில்லை. அண்ணனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. பெற்றோரை வரவழைத்தார். உலகிலேயே மிகச் சிறந்தது தாய் அன்பு! தாயின் அன்பு, பாசத்திற்கு கட்டுப்படாதவர் யாருமே இருக்க முடியாது. அன்னை ஈஸ்வரம்மா வருவதைப் பார்த்த உடன் “மாயை வந்துவிட்டது” என்று கூறினார் பகவான். அன்னை எவ்வளவோ அழுது கெஞ்சினார். “யாருக்கு யார் சொந்தம்?” என மறுத்தார் பலஸாயி! தாயை தனக்கு உணவு அளிக்குமாறு கேட்டார். தாய் கொண்டு வந்த உணவுகளை ஒன்றாகப் போட்டு கலந்து மூன்று உருண்டைகளாக தாயின் கையால் வாங்கி சாப்பிட்டுவிட்டு , “இப்போது மாயை அகன்றது. இது உண்மை. இனி கவலையில்லை” என்று கூறி பஜனையில் ஈடுபட்டார்.

ஓ ஸாயி! எல்லா பற்றுகளையும் விட்டவரே! உமக்கு எனது வணக்கம்.

14. ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வாந்தர்யாமினே நம:

ஸர்வ + அந்தர் + யாமினே – எல்லாவற்றையும் அந்தர் – உள்ளிருந்து யாமிகன – இயக்குபவருக்கு

1972-ல் பாபாவின் ஜன்ம தினத்திற்காக அஸ்ஸாம் மாநில பக்தர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு பஜனை ஹாலில், பிரத்யேக தர்ஷனமும், ப்ரஸாதமும் தந்தார் பாபா. அப்போது ஒரு பெண்ணிடம் பிரஸாதம் கொடுத்து நகர்ந்து பின் மீண்டும் வந்து இரண்டு பொட்டலங்கள் விபூதிபிரஸாதம் கொடுத்து “இவை பூனைக்காக” என்று கூறிச் சென்றார். என்ன இது? ஒன்றும் புரியவில்லையே? ஓ! இப்போது ஞாபகம் வந்துவிட்டது! மெய் சிலிர்த்தது அந்த பெண்மணிக்கு! எட்டு மாதங்களுக்கு முன் கௌஹாத்தியில் அவள் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தாள். அச்சமயம், அவளுடைய வளர்ப்புப் பூனை சாப்பாட்டு மேஜை மேல் பாய்ந்து தின்பண்டத்தை எடுத்துக் கொண்டு போயிற்று. அந்த பெண்மணிக்கு ரொம்ப கோபம் வந்துவிட்டது. உடனே ஒரு தடியை எடுத்து அந்த பூனையை நன்றாக அடித்துவிட்டாள். பிறகு அங்கு நடந்தது என்ன? ஹாலில் மாட்டி இருந்த படங்கள் தடால் தடால் என விழுந்தன. இதென்ன! அஸ்ஸாமுக்கே உரிய பூகம்பம் வந்து விட்டதா? அச்சத்தாலும் பச்சாபத்தாலும் ஓடிச் சென்று பூனையை எடுத்தால், ஆஹா அதன் மேல் ஒரே விபூதி வர்ஷம்! பாபா ஸ்ருஷ்டிக்கும் விபூதிக்கே உரிய வாசனை! பூனையின் புண் ஆறியது. எட்டு மதத்திற்குப்பின் அந்த பூனைக்குத்தான் விபூதி கொடுத்து அனுப்பி இருந்தார் பாபா!

ஓ ஸாயி! எல்லவற்றையும் உள்ளிருந்து இயக்குபவரே! உமக்கு எனது வணக்கம்.

15. ஓம் ஸ்ரீ ஸாயி மஹிமாத்மனே நம:

மஹிமா – பெருமை, ஆத்மனே – ஸ்வரூபத்திற்கு

அன்று க்ருஷ்ணஜயந்தி! பாபா சென்னை வந்திருந்தார். எனவே அந்த விழாவை விமர்சையாக நடத்தவேண்டும் என்று பக்தர்கள் திட்டமிட்டு ஏற்பாடு செய்திருந்தனர். பாபா தங்கி இருந்த வீட்டின் விசாலமான கூடம், நன்கு அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பக்தர்கள் எல்லோருக்கும், அழைப்புகள் அனுப்பப்பட்டன. பகவான் மேடையிலே ஸிம்மாஸனத்திலே வந்து அமர்ந்தார்! ஆர்த்தி எடுப்பதற்கு முன் அவர் எழுந்து, தம்முடைய இரண்டு கரங்களையும் தலைக்கு மேல் உயர்த்தினார்! கூடி இருந்த பக்தர்கள் ஆவலோடு பகவானின் கரங்களையே கவனித்துக் கொண்டிருந்தனர். அதற்கு முன் நிகழ்ந்த எந்த விழாவிலும் அவர் அம்மாதிரி நின்றதே இல்லை! கண்மூடி கண் திறக்கும் நேரம்! எங்கிருந்தோ வந்த கண்ணாடிப் பாத்திரம் ஒன்றை பாபா தம் கையால் பிடித்திருந்தார்! அந்த கண்ணாடி பாத்திரம் மினொளியில் ப்ரகாசித்தது. அந்த பாத்திரத்தின் ஒவ்வொரு கோடியிலும் பறவை ஒன்று மிக அழகாக தன் இறக்கைகளை விரித்தாற்போல், நேர்த்தியான சிற்பம் செய்யப்பட்டிருந்தது! “இதோ! ப்ருந்தாவனத்திலிருந்து வந்த மிட்டாய் தினுசுகள்” என்று அறிவித்தார் ஸ்வாமி! வெவ்வேறான நாற்பத்திமூன்று இனிப்புப் பண்டங்கள் அந்த பத்திரத்திலே இருந்தன! தென்னிந்தியர்களுடைய சுவைக்கு முற்றிலும், புதிதானவை அவை!

ஓ ஸாயி! மஹிமை பொருந்தியவனே! விளையாட்டாகவே உனது பெருமைகளை வெளிக்காட்டுபவனே! உமக்கு எனது வணக்கம்.

16. ஓம் ஸ்ரீ ஸாயி மகஹஸ்வர ஸ்வரூபாய நம:

மஹா + ஈஸ்வர – தெய்வ, ஸ்வரூப – வடிவமுடையவருக்கு

ஸத்யா, தான் “ஸாயி பாபா” என்று அறிவித்ததும் அவரது தமயன் சேஷம ராஜுவிற்கு அதை ஒப்புக் கொள்ள மனம் இல்லை. உல்லாசப் பிரயாணம் அழைத்துச் சென்றால் பையனின் மூளைக்குச் சிறந்த மருந்தாக இருக்கும் என நினைத்து, விஜயநகர ஸாம்ராஜ்யத்தின் தலைநகரான ஹம்பிக்கு ஸத்யாவை அழித்துச் சென்றார். அரசமா தேவிகளின் அரண்மனைகள், விஜயதசமி மேடை, யானைபந்திகள், கல்லால் ஆன தேர், ஒரேகல்லில் செதுக்கப்பட்ட நரசிம்மமூர்த்தி இவைகளைப் பார்த்தார். கடைசியில் விஜயநகர பேரரசர்களின் வழிபடு தெய்வமாகிய விருபாக்ஷரின் ஆலயத்தை அடைந்தனர். ஸத்யா அன்று முழுவதும் ஒரு உணர்வும் இல்லாமல் ஏதோ கனவுலகில் சஞ்சரிப்பவன் போலவே, இடிபாடுகளிடையே சுட்டிக் கொண்டிருந்தான். அந்தக் குழுவினர் விருபாக்ஷர் ஆலய ப்பிரகாரத்தினுள் சென்றபோது ஸத்யாவும் உள்ளே சென்றான். ஆனால் கர்ப்பக்ரஹத்தினுள் செல்லவில்லை. வெளியில் நின்றுவிட்டான். அர்ச்சகர் கற்பூர ஹாரத்தி எடுத்து அங்கு உள்ள விருபாக்ஷருக்கு காண்பித்தார். அந்த வெளிச்சத்தில் இறைவனை நன்றாக தரிசித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். ஹா! அவர்கள் உள்ளே கண்டது என்ன? கர்ப்பக்ரஹத்தில் லிங்கம் இருக்கும் இடத்தில் ஸத்யா சிரித்த முகத்துடன் நின்று கொண்டு அவர்கள் வழிபாட்டை ஏற்றுக்கொண்டிருந்தான்! “இந்தப் பையனை பற்றிய விஷயம் ஒவ்வொன்றும் மிக ஆச்சரியமாக இருக்கிறதே? கோவிலுக்கு வெளியே இருந்தவன் எல்லோருடைய கண்களையும் கட்டிவிட்டு எப்படி உள்ளே வந்தான்? இதை நன்கு அறிய வேண்டும்” என எண்ணி சேஷம ராஜூ வெளியே ஓடி வந்து பார்த்தார். அங்கே சத்யா ஒரு சுவரின் மேல் சாய்ந்து கண் கொட்டாமல் அடிவானத்தையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார்! பாபா விருபாக்ஷராக காட்சி கொடுத்த செய்தி எங்கும் பரவியது. அவர் கடவுளின் அவதாரம் என்று நம்பிக்கையும் உறுதிப்பட்டது.

ஓ ஸாயி! எல்லாவற்றுக்கும் பெரிய தலைவனே! உமக்கு எனது வணக்கம்.

17. ஓம் ஸ்ரீ ஸாயி பர்த்தி கிராமோத்பவாய நம:

பர்த்தி + க்ராம – பர்த்திக்ராமத்தில், உத்பவாய – அவதரித்தவருக்கு

அவதாரம் தன் பெற்றோர்களைத் தேர்ந்து எடுக்கும் போதே, என்றும் நிலைத்திருக்கக் கூடிய கீர்த்தியை அடையும் இடத்தையும் தேர்ந்து எடுக்கிறார். பகவான் ஸ்ரீ ஸத்ய ஸாயி தான் பிறக்கும் இடம் என புட்ட பார்தி கிராமத்தை தேர்ந்து எடுத்தார். “உன்னுடைய வெங்காவதூதர் ப்ரார்த்தனையின்படி நான் உனது வீட்டில் அவதரித்திருக்கிறேன்” என்று கூறினான் ஸத்யா! இச்செய்தி தந்தை வெங்கமராைஜூவுக்கு ஆச்சரியமாக இருந்தது! ஆனால் பாட்டனார் கொண்டமராஜூவுக்கோ, வெண்காவதூதரின் பெயரை ஸத்யா கூறியது புலரிப்பாக இருந்தது. இதைக் கேட்டு அவர் மிகவும் பூரிப்படைந்தார். திரு. கொண்டமராஜூ, திரு. கஸ்தூரியின் கைகளைப் பற்றியவாறு கூறினார். “ஒரு நாள் மதியம் நான் ஆலமரத்தின் கீழே வெண்கவதூதரின் அருகில் அமர்ந்து இருந்தேன். அப்போது வெண்கவதூதர் “தேவி வருந்துகிறாள். அதனால் நாராயணன் தோன்றுகிறார். அவரை நீ காணலாம். அவர் உன்னிடம் அன்பாய் இருப்பார்,” என்று திரும்பத் திரும்ப என் காதுகளில் உரைத்தார். இறுதியில் “நான் இவார்த்தைகளை நம்புகிறேன்,” என்று என்னிடமிருந்து வாக்குறுதியையும் பெற்றுக் கொண்டார். திரு. கொண்டமராஜூ கூறுகிறார்” நான் என் வீட்டிலேயே என்னுடைய மடியில் நாராயணனை மனித உருவில் காண்பேன் என்று கனவு கூட கண்டதில்லை” என்று.

ஓ ஸாயி! பர்த்தி கிராமத்தில் அவதரித்தாரே! உமக்கு எனது வணக்கம்.

18. ஓம் ஸ்ரீ ஸாயி பர்த்தி சேக்ஷத்ர நிவாஸினே நம:

பர்த்தி சேக்ஷத்ர – பர்த்தி சேக்ஷத்திரத்தில், நிவாஸினே – வஸிப்பவருக்கு, நிவாஸம் –வாழ்விடம்.

“நான் உங்களுடையவன் அல்லன், எனது பக்தர்களுக்காக நான் வந்துளேன்” என்று கூறிய ஸத்யா, இனி தன்னுடன் வந்து இருக்க மாட்டான் என்பதை அன்னை ஈஸ்வரம்மா அறிந்தே இருந்தார். ஸ்வாமி முதலில் பாடிய பஜனைப்பாடல் ‘மானஸ பஜரே குரு சரணம்’. அன்று இரவு நேரம் முழுவதும் எல்லோரும் பஜனையில் அமர்ந்து இருந்தனர். ஈஸ்வரம்மாவும் அமர்ந்திருந்தார். தனது மகனைக் குளிரில் விட்டுவிட்டு தானும் போக விரும்பவில்லை அந்த தாயின் உள்ளம். ஈஸ்வரம்மா பிராதித்துக் கொண்டார். “ஸத்யா! நாங்கள் மாயையின் உருவங்கள், மாயையில் இருப்பவர்கள். நீ மாயையிலிருந்து விலகி இருப்பவன். நாங்கள் வாதங்கள் செய்ய்யமாட்டோம். நீ யாராக வேண்டுமானாலும் இரு. ஆனால் ஸத்யா! ஹிமாலயத்திலோ, குகைகளிலோ, மலைகளிலோ அல்ல. எங்களை விட்டுப் பிரிந்து தூரமாக இருப்பதில்லை என எனக்கு வாக்கு கொடு. புட்டபூர்த்தியிலேயே இருக்கிறேன் என எனக்கு வாக்கு கொடு. புட்டபர்த்தியிலேயே இருக்கிறேன் என எனக்கு நீ வாக்கு கொடுக்க வேண்டும்” என்று கேட்டு மன்றாடினார். அப்போது ஸ்வாமி கூறினார், “இந்த வரம் உனக்கு நான் தருகிறேன். ஆனால் உனக்காக அல்ல, கிராமத்திற்காக, உலகத்திற்காக நான் புட்டபர்த்தியை எனது சேஷத்திரமாக தேர்ந்து எடுத்து இருக்கிறான்” என்று கூறினார்.

ஓ ஸாயி! புட்டபர்த்தி சேஷத்திரத்தை இருப்பிடமாகக் கொண்டவனே! உமக்கு எனது வணக்கம்.

19. ஓம் ஸ்ரீ ஸாயி யச: காய ஷிர்டி வாஸினே நம:

யச: – புகழ், காய – உடம்பு, ஷிர்டி வாஸி – ஷிர்டியில் வசிப்பவர்

ஷிர்டி பாபாவைப் பற்றி பேசும் போதெல்லாம். பாபா அவரை தம்முடைய ‘முந்தைய மேனி’ என்று குறிப்பிடுவார். அவருடைய முந்தைய திருமேனியில், பற்பல விஷயங்களுக்கு, அந்தந்த சந்தர்ப்பங்களில் பற்பல விளக்கங்கள் கொடுத்ததாகவும், அப்போது யார் யார் எந்த கேள்விகள் தன்னை கேட்டார்கள் என்றும் அடிக்கடி விவரித்து கூறுவார். மஹாலஸ்பதி, தாஸ்கணு என்பவருக்கு அப்போது என்ன சொன்னார் என்றும் விவரித்துக் கூறுவார். நிஜாம் அரசாங்கத்தைச் சார்ந்த சிஞ்சோலி ராஜா ஷீர்டி பாபாவின் அத்யந்தபக்தர். ஷீர்டி பாபாவோடு அவர் வருடம் தோறும் சில மாதங்கள் தங்குவது வழக்கம். அரசர் காலமானபின், அவரது ராணியார் ஸத்ய ஸாயி பாபாவை ஷீர்டி அவதாரம் என கேள்விப்பட்டு ஆனந்தமும் ஆச்சரியமும் அடைந்தார். புட்டபர்த்திக்கு விஜயம் செய்து பதினைந்தே வயதான ஸத்ய ஸாயி பாபாவை, தம்மோடு சிஞ்சோலிக்கு வருமாறு அழைத்தார். பால ஸாயியும் சிஞ்சோலிக்குச் சென்றார். அங்கே முன்பு இருந்த இப்பொழுது விழுந்து விட்ட வெப்பமரத்தையும், தூர்ந்து மூடப்பட்ட ஒரு கிணற்றைப் பற்றியும், புதிதாக எழுந்துள்ள கடைகளைப் பற்றியும் விசாரித்து ராணியை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். முந்தைய மேனியிலிருந்த போது அரசருக்கு தான் கொடுத்த ஆஞ்சநேய விக்ரஹத்தைப் பற்றிக் கேட்டார். ராணிக்கு அந்த விஷயம் தெரியாது. பாபா தானே அந்த விக்ரஹத்தை எடுத்துக் கொடுத்தார்!

ஓ ஸாயி ! புகழ் உடம்பில் ஷிர்டியில் வசிப்பவரே! உமக்கு எனது வணக்கம்.

20. ஓம் ஸ்ரீ ஸாயி ஜோடி ஆதி பள்ளி ஸோமப்பாய நம:

ஜோடி ஆதிப்பள்ளி ஸோமப்பாய – திருநாமங்களில் ஒன்று

1958 நவம்பர் 26-ம் தேதி ஒரு பக்தர் பகவானின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு விட்டு காரில் பெங்களூருக்குத் திரும்பி கொண்டிருந்தார். பாகேபள்ளிக்கு அருகில் சென்று கொண்டிருந்த சமயம், அவரது இரண்டு வயது பெண் குழந்தைக்கு இழுப்பு நோய் வந்துவிட்டது. குழந்தை இதை தாங்காமல் மூச்சுத்திணறி மயங்கிவிட்டது. எல்லாம் அறிந்த பாபா, கிராமத்தை கிழவன் போல் உருவம் கொண்டு மற்றும் இரு கிராமத்து ஜனங்களையும் ஸ்ருஷ்டித்து அவர்களையும் தன்னுடன் அழைத்துச் கொண்டு அங்கு தோன்றினார். குழந்தையை தன் கையில் கொடுக்குமாறு அவர்களை வற்புறுத்தினார். கூடவந்தவர்களும் அப்படியே செய்யும்படி கூறினார்கள். “அவனிடம் கொடுங்கள். அவன் அந்தக் குழந்தையை நலமாக்கித் தருவான். ஆயிரக்கணக்கானவர்களை அவன் காப்பாற்றுவான்”, என்று கூறினார்கள். அந்தக் கிழவன் கூறினான், “மூன்று நாட்களாக எனக்கு ரொம்ப வேலைகள் இருந்தன. இப்பொழுது தான் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் என்று படுத்தேன். ஆனால் ஒரு குழந்தை சாலையில் மிக ஆபத்தான நிலையில் இருப்பது தெரிந்து உடனே ஓடி வந்தேன்” எனக் கூறி குழந்தையை வாங்கி தனது மடியில் படுக்கவைத்துக் கொண்டான். அவனது கைப்பட்டவுடன் சில நொடிகளில் குழந்தைக்கு குணமாகியது. குழந்தையை அதனுடைய பெற்றோர்களிடம் கொடுத்தான். அவர்களது சந்தோஷத்துக்கு எல்லையே இல்லை! அவர்கள் அவனுக்கு ஒரு ரூபாய் நாணயத்தை கொடுத்தார்கள். ஆனால் அந்தக் கிழவன் அதை வாங்கவில்லை! பாபா கொடுத்து அனுப்பி இருந்த பழத்திலிருந்து பழத்தை எடுத்து அவனிடம் அளித்தார்கள்! “உனது பெயர் என்ன?” என்று கேட்ட அவர்களுக்கு, “ஜோடி அதிபள்ளி ஸோமப்பா” என்று கூறிச் சென்றனர். அப்போது பாபா அவர்களிடம் பேசினார். அச்சமயம் பெற்றோர்கள் அவரிடம் கேட்டனர் “ஏன் அந்த பெயரை தேர்ந்து எடுத்தீர்கள் ஸ்வாமி” என்று! ஸோமப்பா – சிவன், உமா – சிவசக்தி, ஆதிபள்ளி – கைலாஷ் என்று சிரித்துக் கொண்டே கூறினார் பாபா.

ஓ ஸாயி! ஆதி சிவ ஸக்தி ரூபனே! உமக்கு எனது வணக்கம்.

21. ஓம் ஸ்ரீ ஸாயி பாரத்வாஜ ரிஷி கோத்ராய நம:

பாரத்வாஜ ரிஷி – ராமாயண காலத்தில் ஸ்ரீ ராமருடன் நட்பு கொண்டவர் கோத்ரம் – வம்ஸம்

“என்னைப் பற்றிய ஒரு ரகசியத்தை இது வரை உங்களிடம் மறைத்து வைத்திருந்தேன். அதை உங்களுக்கு வெளியாக்க வேண்டிய காலம் வந்து விட்டது. இன்று ஒரு புனித நாள். நான் சிவசக்தி ஸ்வரூபன்” என்று கூறினார் ஸ்வாமி. யாருக்கும் அந்தரங்க பேட்டி தரப்போவதில்லை என அறிவிக்குமாறு கூறினார். மாலை 6.30 மணி! திடீரென மயக்கமாக இருக்கிறதென்று கூறி கீழே விழுந்துவிட்டார் இடதுகாலும் விரலும் விறைத்துவிட்டன. இடது கைவிரல்கள் மூடிக்கொண்டன. முகம் கருத்து, வாய் இடது பக்கம் இழுத்து விட்டது. இடது கண் பார்வை இழந்தது போல இருந்தது. நாடியின் ஓட்டம் 84-லிருந்து 100 வரை இருந்தது. பற்கள் கிட்டி உணர்வற்ற நிலையில் இருந்தார். யாருடைய நோயையோ பகவான் எடுத்துள்ளார் என்றும், “இறைவா, விரைவில் தீர்த்துக்கொள்ளுங்கள்” என்றும் பக்தர்கள் அவரை ப்பிரார்தித்த வண்ணம் இருந்தனர். ஒரு பக்தர் மருத்துவர் ஒருவரை அழைத்து வந்தார். பாபா “கோமா” என்ற நிலையிலிருந்த போதிலும் மருத்துவர் ஊசியை எடுத்துவரும் சமயம் அவரது கை மருத்துவரின் கையை தள்ளிவிட்டது. இப்படியே மூன்று நாட்கள், கழிந்தன. செவ்வாய் கிழமை காலை உணர்வுகள் திரும்புவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. பாபா சைகையால் பேசினார். “இந்நோய் 5 நாள் நீடிக்கும். மருத்துவர்கள் என் தரிசனம் பெற்றுச்செல்லட்டும். நான் இந்த மூன்று நாட்களில் இருமுறை இருதய நோயால் பீடிக்கப்பட்டேன். வேறு யாராலும் இதைத் தாங்கி உயிர் வாழ முடியாது”, என்று கூறினார். எல்லோரும் அவரையே ப்ரார்த்தித்துக் கொண்டிருந்தனர். 6-வது நாள் வியாழக்கிழமை குருபௌவர்ணமி அன்று வழிபாடு மண்டபத்தில் பாபா அனைவருக்கும் தரிசனம் தருவார் என அறிவிக்கச் சொன்னார் பாபா. பக்தர்கள் அனைவரும் வழிபாட்டு அறையில் குடி இருந்தனர். பாபா, மூன்று பக்தர்களால் நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டு, மெதுவாக அங்கு கொண்டு வரப்பட்டார். பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட பகைவனைப் பார்த்து நெஞ்சு உரமிக்கவர்கள் கூட அலறினார்கள். தண்ணீர் வேண்டும்! என சைகையால் கேட்டார் ஸ்வாமி. ஒரு வெள்ளிக் குவளையில் நீர் கொண்டுவரப்பட்டது. வழக்கர விரல்களை அதில் நழுவவிட்டார். அந்நீரை வலக்கர விரல்களால் எடுத்து இடது கரத்தின் மீது தெளித்தார்; இடது காலின் மீது தெளித்தார். வலது கரத்தால் இடது காரத்தைத் தடவினார். எழுந்தார்! அவரது தெய்வீக குரல் ஒலித்தது. “ப்பிரேமஸ்வரூபலாரா”, “கைலாயத்தில் இருக்கும் சக்தியை யாகத்திற்கு அதி தேவதையாக இருப்பதற்காக அழைக்க வந்த பரத்வாஜ ரிஷியிடம், சக்தி எட்டு நாட்கள் காட்டிய பாராமுகத்தால் சிவனின் கோபத்துக்கு ஆளானாள். சக்தியின் புறக்கணிப்பின் விளைவாக பரத்வாஜ ரிஷியிடம், சக்தி எட்டு நாட்கள் காட்டிய பாராமுகத்தால் சிவனின் கோபத்துக்கு ஆளானாள். சக்தியின் புறக்கணிப்பின் விளைவாக பரத்வாஜர் நினைவிழந்து விட்டார். உடலின் ஒரு பக்கம் செயலிழந்துவிட்டது. சிவன் நீரைத்தெளித்து அவரை குணப்படுத்தினார். இன்று அவ்வாறே அந்நோயை சக்தி ஏற்றுக்கொள்ள வேண்டி வந்தது. அவ்வாறே சக்தியின் (இடது பக்கம்) நோயை சிவனார் (வலப்பக்கம்) குணப்படுத்தியதை நீங்கள் பார்த்தீர்கள். பக்தனைக் காக்க நான் நோயை ஏற்றுக்கொண்டேன் என்பது நேர்முக காரணம் பாரத்வாஜருக்கு அளித்த வரமும் அதற்கு ஈடு செய்வதற்காக ஏற்றுக் கொண்ட துன்பமும் மறைமுகக் காரணம்” என்று ஸ்வாமி கூறினார்.

ஓ ஸாயி! பாரத்வாஜ ரிஷியின் கோத்திரத்தைச் சார்ந்தவனே! உமக்கு எனது வணக்கம்.

22. ஓம் ஸ்ரீ ஸாயி பக்த வத்ஸலாய நம:

பக்த – பக்தர்கள், வத்ஸ – வாத்சல்யம்

ஷிர்டி பாபாவைப் பற்றி பேசும் போதெல்லாம். பாபா அவரை தம்முடைய பத்ரிநாத்துக்கு பகவானுடன் உடன் செல்லும் பக்தர்களும் புறப்பட்டனர். ஹரித்வார், ரிஷிகேஷ் வழி வந்து ஸ்ரீநகர் சென்றனர். அங்கிருந்து ‘ஜோஷி’ மடத்தை நோக்கி எல்லோரும் வாகனங்களில் சென்றனர். அங்கிருந்து 18 மைல் தூரத்தில் பத்ரிநாத்திற்கு எல்லோரும் நடந்தே செல்ல வேண்டும். ஒவ்வொருவருடனும் பகவான் பேசி உற்சாகப்படுத்தி கடினமான பாதையில் நடந்துவரும் அவர்களை ஊக்குவித்தார். ஏனென்றால் வழி குண்டும் குழியுமான பாதை, எச்சரிக்கைப் பலகைகள், பனிப்பாறையால் சூழப்பட்ட சிகரங்கள், பெருமூச்சு வாங்கும் ஏற்றங்கள் நிறைந்தவை. பகவான் பக்த வத்ஸலன்! சிலரைத் தண்டியில் உட்காரச் சொல்லியும், சிலரைக் குதிரை மீது ஏற வைத்தும், தாக்கமடைந்தவர்களுக்கு தண்ணீர் கொடுத்தும் சிலருக்கு விபூதி வரவழைத்துக் கொடுத்ததும் சக்தி ஊட்டினார். அப்போது லாம்பஜார் என்னும் இடத்தை அடைய இரு மைல் தூரம் இருக்கும் போது பாபா ஒரு பாறையின் மீது அமர்ந்து ஒரு புராணக் கதையை தன்னை சுற்றி அமர்ந்திருக்கும் பக்தர்களுக்கு கூறிக்கொண்டிருந்தார். ஒரு செங்குத்தான பாறையின் மீது அமர்ந்து ஒரு புராணக் கதையை தன்னை சுற்றி அமர்ந்திருக்கும் பக்தர்களுக்கு கூறிக்கொண்டிருந்தார். ஒரு செங்குத்தான பாறையை அவர்கள் கடக்க வேண்டி இருந்தது! அதற்காக அவர்களை உற்சாகப்படுத்தவே ஸ்வாமி அந்த கதையை கூறிக்கொண்டிருந்தார். அப்போது பத்ரியிலிருந்து திரும்பச் செல்லும் யாத்ரீகர் கூட்டத்திலிருந்து ஒரு பெண் பாபாவை அடையாளம் தெரிந்துகொண்டாள். ஓடி வந்து வரத்து திருவடிகளில் வீழ்ந்து வணங்கினாள். இறைவன் பத்ரிநாத் செல்லுவதை அறிந்துகொண்டு நடந்து வந்த களைப்பையும் பொருட்படுத்தாமல், தானும் மீண்டும் அவருடன் பத்ரிநாத்திற்கு நடந்து வருவதாக பாபாவிடம் வேண்டினாள். ஸ்வாமி அதற்கு அளித்த பதில் என்ன? “நான் உனக்கு தரிசனம் கொடுப்பதற்காகத்தான் இங்கு காத்திருந்தேன். உனக்கு தரிசனம் கிடைத்தது. இதை விட மேலானது அங்கு என்ன கிடைக்கப் போகிறது? போ! சந்தோஷமாக இரு! ப்ரசாதம் எடுத்துக் கொள்!” என்றார்.

ஓ ஸாயி! பக்தர்களை வாத்ஸல்யத்தோடு காப்பவனே! உமக்கு எனது வணக்கம்.

23. ஓம் ஸ்ரீ ஸாயி அபாந்தராத்மகன நம:

அபாம் – நீர், தர – கடந்த, ஆத்மனே – பரமாத்மாவுக்கு

ஒரு நாள் மலை பாபா, சுவாமி ஸதாநந்தாவையும், உடன் சிலரையும், பிரசாந்தி நிலையத்திற்குப் பின்னால், குன்றுகளிடையே உள்ள இயற்கை ஊற்று ஒன்றுக்கு அழைத்துச் சென்றார். அந்த ஊற்றின் பக்கம் அமர்ந்து கொண்டு பகவான், மானிடர், விலங்கு, தாவரம், கல் ஆகியவைகளுக்குள் இருக்கும் சைத்தானைப்பற்றி விளக்கிக்கொண்டிருந்தார். சுவாமி ஸதாநந்தர் உபநிஷத்துகளிலிருந்து அதற்கு ஆதாரமாக சில சுலோகங்களை எடுத்து கூறி” ஸ்வாமி! இத்தகைய கருத்துக்கள் பழைய காலத்திய சாஸ்திரங்களிலும் காணப்படுகின்றன”, என்று கூறினார். உடனே பகவான், “இவற்றை பழமையானவை என்று நீ சொல்லுகிறாய். ஆனால் எனக்கு பழமை, புதுமை இரண்டும் இல்லை. எனக்குப் பிறப்பு, இறப்பு இல்லை. நான் இடத்தையும் காலத்தையும் கடந்தவன்”. என்று உறுதியாக கூறினார்.

ஓ ஸாயி! பிறப்பு, இறப்பு, காலம் யாவற்றையும் கடந்தவனே பரமாத்மாவே! உமக்கு எனது வணக்கம்.

24. ஓம் ஸ்ரீ ஸாயி அவதார முர்த்தையே நம:

அவதார – கீழ் இறங்கிவந்தவர் , மூர்த்த – பரம்பொருள்

”ஸனாதன தர்மத்தை காக்கும் பொருட்டு நல்லோரின் பிரார்த் தனைக்கு இணங்கி பூவுலகுக்கு இறங்கி வருதலே அவதாரம்”. “வெங்காவதூதர்” என்பவரை புட்டபர்த்தியிலும், புட்டபர்த்தியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராமங்களிலும் பரம்பரையாக, எல்லோரும் குருவாக பாவித்து வந்தனர். அவர் மஹா பண்டிதர், வைராக்யச் சக்ரவர்த்தி, கரைகடந்த யோகீ. ஸத்யாவின் சகோதரர் சேஷமராஜூ ஸாயி பாபா நான் தான் என்று நீ சொல்வதன் பொருள் என்ன? என்று பாபாவிடம் கேட்டார். அதற்கு பாபா “உங்கள் வெண்கவதூதர் நான் உங்கள் குடும்பத்திலே பிறக்க வேண்டும் என்று பிராத்தனை செய்திருந்தார். ஆகவே நான் வந்தேன்” என்று கூறினார்.

ஓ ஸாயி! எங்கும் நிறைந்த பரம் பொருளே! அவதார மூர்த்தியே! உமக்கு எனது வணக்கம்.

25. ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வ பய நிவாரினே நம:

ஸர்வ – எல்லா வித, பய – பயங்கள், நிவாரினே –போக்குபவருக்கு

பாபா அவர்கள் ஊழின் தத்துவத்தை பற்றி எப்போதும் கூறுவார். எவராயினும் தன்னுடைய அருளுக்கு பாத்திரமானால் அது உழ்வினைப் பயன் என்று அடிக்கடி சொல்வார். “கட்டுப்பாடான வாழ்க்கை, தன்னலமற்ற எல்லா ஜீவராசிகளுக்கும் சேவைசெய்தல் இவைகளை கடைபிடித்தால் என் அருளைப் பெறமுடியும்” என்று கூறுவார். ஒரு கிராமத்தில் பீமையா என்பவன் வினைப்பொருட்களை பங்கிடுவதில், தன் சகோதரத்துடன் கருத்து மாறுபட்டு இனி என்ன செய்வோம் என்ற பயத்தில், அந்த வருத்தத்தில், புட்டபர்த்திக்கு வந்து யாத்ரீகர்களிடம் யாசித்து காலத்தை அங்கேயே கழித்து விடலாம் என்ற எண்ணத்துடன் வந்தான். “கொஞ்சம் அன்பும் சாந்தமும் காட்டி இருந்தால் சகோதரனுடனேயே மனமொத்து கிராமத்தில் பெருமையுடன் வாழ்ந்திருக்கலாம்; அதை விட்டு பிறர் அனுதாபத்தை எதிர்பார்த்து அவர்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது” என்று ஸ்வாமி கண்டித்து ஊருக்கு திரும்பிப் போகும்படி கூறினார். பாபா தன்னைத் துரத்திவிடவே அந்த மாதிரி வார்த்தைகள் கூறினார் என்று மானத்தாங்கள் அடைந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ள எண்ணி ஒரு நாள் இரவு தண்டவாளத்தின் குறுக்காக படுத்துவிட்டான் பீமையா. பாபாவின் கருணை அவன் மேல் இருந்தது. தக்கசமயத்தில் பாபா சூட்சம உடலில் அங்கே சென்று அவனை தண்டவாளத்தினின்றும் இழுத்து கீழே உருட்டிவிட்டார்! பாரதியின் இருந்தவர்கள், பாபா கனமான ஏதோ ஒன்றை தள்ளுகிறவரைப் போன்று சைகை செய்வதை பார்த்தனர், பாபா, பீமையாவினுடைய முட்டாள்தனத்திற்காக அவனை கடிந்துகொண்டே உடலுக்குள் மீண்டும் எழுந்தார்! புட்டபர்த்திக்கு, தன்னை காத்த தெய்வத்தைக் காணவந்த பீமையா கண்களில் நீர்தளும்ப, “பாபா தம் கையை நீட்டி என்னை பிடித்து இழுத்து ரயில் வண்டிப் பாதையின் சரிவில் உருட்டி விட்டார்”, என்று கூறி நெகிழ்வுற்றான்.

ஓ ஸாயி! எல்லாவித பயனங்களையும் போக்கி காப்பவனே! உமக்கு எனது வணக்கம்.

26. ஓம் ஸ்ரீ ஸாயி ஆபஸ்தம்ப சூத்ராய நம:

ஆபஸ்தம்ப – ஒரு ரிஷியின் பெயர், ஸூத்ரம் – தர்ம ஸூத்திரங்கள்

பால ஸத்யா! 1940-ம் அண்டு மே மாதம் 28-ம் நாள் வழக்கம் போல படுக்கையை விட்டு எழுந்தார். சற்று நேரம் கழித்து வீட்டில் உள்ளவர்களை எல்லாம் அருகே அழைத்து, தனது தெய்வீக சக்தியால் கற்கண்டு, மலர் இவைகளை ஸ்ருஷ்டித்து அவர்களுக்கு கொடுத்தார். இதைப் பார்த்து அக்கம் பக்கம் இருப்பவர்களும் வந்துவிட, அனைவருக்கும் கற்கண்டு, மலர்களை வரவழைத்துக் கொடுத்தார். இதைக் கண்ட சிலர் ஸத்யாவின் தந்தை வெங்கமா ராஜூவுக்கு அனுப்பினார்கள். செய்தி கேட்ட வெங்கமா ராஜூ வேகமாக அங்கு வந்தார். “பொருள்களை எங்கோ ஒளித்து வைத்துக் கொண்டு சாமர்த்தியமாக அதை எடுக்கிறாய்” என்று கூறி மிக கோபம் கொண்டார் வெங்கமா ராஜூ! இதற்க்கு இன்றோடு ஒரு முற்று புள்ளி வைத்துவிட வேண்டும் என்று தீர்மானித்து கையில் பெரிய தடியை எடுத்துக் கொண்டார். “நீ யார்? பைத்தியமா? பிசாசா? கடவுளா? சொல். இன்றோடு இதை எல்லாம் நீ நீறுத்த வேண்டும். இல்லாவிட்டால் உன்னை நான் அடித்து விடுவேன்” என்று கூறினார். உடனே ஸத்யா தன நிஜ ரூபத்தை வெளிப்படுத்தினர்! எப்படி?!” நான் ஸாயி பாபா! நான் ஆபஸ்தம்ப ஸூத்திரத்தைச் சேர்ந்தவன் என்று கூறினார்! வெங்கமா ராஜூ பேச்சிழந்து போனார்! கையிலிருந்த தடி தானே நழுவிக் கிழே விழுந்தது.

ஓ ஸாயி! ஆபஸ்தம்ப ஸூத்திரத்தை அனுஷ்டிக்கும் வம்சத்தில் தோறியவரே! உமக்கு எனது வணக்கம்.

27. ஓம் ஸ்ரீ ஸாயி அபயப்ரதாய நம:

அபய – அஞ்சாமை, ப்ரதாய – கொடுப்பவருக்கு

“நான் எங்கு இருந்தாலும் எதில் ஈடுபட்டிருந்தாலும், பக்தர்கள் அபயக்குரல் எழுப்பும் போது அவர்களுக்கு உதவி அளிக்க போயே ஆக வேண்டும்”, என்று பாபா கூறி இருக்கிறார். 1958-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ம் தேதி பகவானின் பிறந்த நாளை ஒட்டி, புட்டபர்த்தியில் ஊஞ்சல் உத்சவம் நடந்து கொண்டிருந்தது. பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பகவான் ஊஞ்சலில் வந்து அமர்ந்தார். ப்ரார்த்தனைப் பாடல்கள் பாடப்பட்டன. திடீரென பாபா, அபயக் குரல் ஒன்றைக் கேட்டார் போலும்! அப்படியே திண்டின் மேல் சாய்ந்து உணர்வற்றவர் ஆனார். சில நொடிகளில் திரும்பவும் தன் உணர்வு தெளிந்து எழுந்து அமர்ந்து பாடல்களை ரசித்தார்! பின்னால் அந்நிகழ்ச்சியைப் பற்றி ஸ்வாமி கூறினார். “ஹைதராபாத் நகரில் ஒரு பக்தர், அவருக்கு மகோதரம்.

ஓ ஸாயி! ஆபஸ்தம்ப ஸூத்திரத்தை அனுஷ்டிக்கும் வம்சத்தில் தோறியவரே! உமக்கு எனது வணக்கம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன