தெய்வீக வாழ்க்கை நிகழ்வுகள்

Print Friendly, PDF & Email
பகவான் ஸ்ரீ சத்ய ஸாயி அஷ்டோத்திர ஸதநாமாவளி
பிரிவு -1- நாமாவளிகள் -28-54
28. ஓம் ஸ்ரீ ஸாயி ரத்னாகர வம்ஸோத்பவாய நம:

இரத்னாகர வம்சத்தில் பிறந்தவருக்கு (அவதரித்தவருக்கு ) வணக்கம்.

ரத்னாகர+வம்ச+உத்பவாய ஸ்ரீ ரத்னாகர வம்ஸோத்பவாய

இரத்னாகர வம்ஸம் (வம்ஸத்தின் நாமம் குறிப்பது), உத்பவாய- பிறந்தவருக்கு, அவதாித்தவருக்கு.

ஸ்ரீ சத்ய பாபா இரத்னாகர ராஜு குடும்பத்தில் பிறந்தார். பாபா சொல்கிறார், ‘கடவுள் ஒவ்வொரு முறை அவதரிக்கும்போது அதற்கான தகுந்த இடத்தையும் குடும்பத்தையும் அவரே தேர்ந்தெடுக்கிறார். பாபா அவர்கள் ரத்னாகர வம்சத்தை இந்த அவதாரத்துக்காக தேர்ந்தெடுத்தார். வெங்காவதூதர் என்ற மகான் பாபாவின் தாத்தா கொண்டம ராஜுவிடம், ‘கடவுள் உங்கள் குடும்பத்தில் அவதரிக்கப்போகிறார், அவரை தரிசிக்கும் நல்ல பேற்றை நீ பெறுவாய்’ என்று தீர்க்கமாக அருளினார்.

29. ஓம் ஸ்ரீ ஸாயி ஷீரடி ஸாயி அபேத ஸக்த்யாவதாராய நம:

ஷீரடி ஸாயி (யாக வந்த ) வேறுபாடற்ற ஸக்தியின் அவதாரத்திற்கு வணக்கம்.

ஒரு முறை கேரளாவின் சுற்றுப் பயணத்தின்போது ஸ்வாமி, டாக்டர் பகவந்தம் அவர்களிடம் பெருந்திரலில் ஓரத்தில் நிற்கும் ஒரு மூதாட்டியை காட்டி, நான் அவளை அவளுடைய சிறு வயதிலிருந்தே அறிவேன் என்று கூறினார்.

டாக்டர் பகவந்தம் வியந்தார், பாபா மிகவும் இளையவர் அவளோ ஒரு மூதாட்டி வயதில் மிகவும் பெரியவள். பிறகு எவ்வாறு ஸ்வாமி சிறுமியாயிருக்கும்போதே அறிவேன் .”

சிறிது நேரம் கழித்து டாக்டர் அம்மூதாட்டியை அணுகி அவரிடம் விசாரித்தார், நீங்கள் எப்போதாவது ஷீரடி சென்றிருக்கிறீர்களா? அதற்க்கு அவர் நான் சிறு குழந்தையாக இருந்த போது என்னுடைய மாமா என்னை ஷீரடி அழைத்துச் சென்றார் பாபாவை தரிசித்தபோது. பாபா எனக்கு ஒரு பதக்கத்தை அளித்தார். அதை நான் இப்பொழுதும் என் கழுத்தில் அணிந்திருக்கிறேன் என்று காட்டினார், டாக்டர் பகவந்தத்தின் சந்தேகம் தீர்ந்தது.

30. ஓம் ஸ்ரீ ஸாயி ஸங்கராய நம:

ஸங்கரருக்கு வணக்கம்.

சங்கரர் என்பது பகவான் சிவனின் மற்றறொரு பெயர். சிவா என்றால் மங்களகரம் என்று பொருள். பாபா அவருடைய பக்தர்களின் வாழ்க்கையில் மங்களத்தை அளிக்கிறார். மகிழ்ச்சியையும் வளமையையும் வழங்குகிறார். அவர் ஞானத்தின் ஒளி விளக்கை ஏற்றி அறியமையின் இருளை அகற்றுகிறார். பாபா ஹம்பியில் இருக்கும் விருபாக்ஷர் கோவில் மற்றும் கொத்தன்கட்டா சிவன் கோவிலில் தாமே சிவனாக தரிசனம் அளித்தார்.

31. ஓம் ஸ்ரீ ஸாயி ஷீரடி ஸாயி மூர்த்தயே நம:

ஷீரடி ஸாயியின் உருவமுடையவருக்கு வணக்கம். மூர்த்தம் – புலன்களால் அறியக்கூடிய, அசையக்கூடிய உருவம், மூர்த்தி – உருவமுடையவர், மூர்த்தியே– உருவமுடையவருக்கு, மூர்த்தயே என்னும் சொல் மூர்த்தி என்னும் சொல்லிருந்து ஏற்பட்டது.

சாராத தேவி அந்திரப்பிரதேசத்தில் வசிப்பவர். ஷீரடி சாய் பாபாவின் தீவிர பக்தை. பாபா இறக்கும் தருவாயில் அவளிடம் கூறினார், நான் ஆந்திராவில் முறுபடியும் ‘சாய்பாபா’ என்ற பெயரில் வந்து பிறப்பேன். அப்போது நீ என்னிடம் வந்து என்னுடைய நெருங்கிய தொடர்பில் இருப்பாய்.

பல வருடங்கள் கழித்து அவள் 16 வயது இளம் சத்யாவை கண்டாள். அப்பொழுது அவர், சாரதாதேவி தனக்கு ரூ 16 தர கடன்பட்டிருப்பதாக கூறினார். அவள் வியப்புற்றாள். ஏனெனில் இதுவே அவள் அவரை முதலில் சந்திப்பது. அவள் பல வருடங்களுக்கு முன் ஷீரடி அனுப்புவதற்காக ரூ 40/- சேமித்ததையும் அனால் ரூ 24/- மட்டுமே அனுப்பியதையும் ஞாபகப்படுத்தினார். ‘நான் இதை உனக்கு கூறுவதற்கு காரணம் நானே ஷீரடி சாய்பாபா என்று உனக்கு உணர்த்தவே’ என்றும் கூறினார்.

அவள் பிரசாந்தி நிலையத்தில் பல வருடங்கள் தங்கி சேவை செய்து வந்தாள் அவள் நெற்றியில் பெரிய போட்டு வைப்பதினால் எல்லோரும் அவளை அன்போடு பெத்த பொட்டு என்று அழைத்தார்கள்.

32. ஓம் ஸ்ரீ ஸாயி த்வாரகாமாயி வாஸினே நம:

த்வாரகாமாயியில் வசிப்பவருக்கு வணக்கம். ஸ்ரீ சத்ய சாய் தன்னுடைய முன் அவதாரத்தில் ஒரு இடிந்து போன மசூதியில் த்வாரகா மாயி என்று அழைக்கப்பட்ட இடத்தில் தாங்கினார். த்வாரகா என்றால் அந்த இடத்தின் கதவுகள் எப்பொழுதும் அனைவருக்கும் திறந்திருக்கும் என்று அர்த்தம். மாயி என்றால் அம்மா. ஸ்வாமியின் பிரசாந்தி நிலையம் கூட ஜாதி மத பேதமின்றி எல்லா நாட்டு மக்களையும் வரவேற்கிறது. பாபா தவறாமல் தன்னுடைய கை அசைவினால் விபூதி (அ) புனித சாம்பலை உருவாக்கி அதை தனது ஆசிர்வாததின் அடையாளமாக பக்தர்களுக்கு அளிக்கிறார். அதை ஜாக்கிரதையாக பாதுகாத்து வந்தால், அதுவே ஆபத்துக்கள், பிணிகள், தீய சக்திகள் இவற்றிலிருந்து காக்கும் கவசமாகும்.

இந்த அவதாரத்தின் விபூதி முந்தைய அவதாரமான ஷீரடி சாய்பாபா தன்னிடம் வந்தவர்களுக்கு ஆசிர்வாதமாக அளித்த ‘உதி’ அல்லது சம்பலுக்கு சமமான தொடர்ச்சியே.

சிவராத்திரி தினத்தன்று பிரசாந்தி நிலையத்தில் உள்ள பூர்ணச்சந்திரா அரங்கில் ஸ்ரீ கஸ்துரி அவர்கள், ஒரு குடத்தை தலை கீழாக ஷீரடி சாயி பாபாவின் விக்ரகத்திற்கு மேல் நேராக பிடித்துக் கொள்வார் ஸ்வாமி தன்னுடைய அங்கியின் கைகளை மடித்து விட்டுக் கொண்டு வெறுங்கைகளை குடத்தில் விட்டு ஷீரடி பாபாவின் விக்ரகத்திற்கு விபூதி அபிஷேகம் நடத்துவார். அந்த குடத்திலிருந்து விபூதி இடைவிடாது அருவி போல விழித்து கொண்டே இருக்கும்.

33. ஓம் ஸ்ரீ ஸாயி சித்ராவதீ தட புட்டபர்த்தி விஹாாினே நம:

சித்ராவதி நதியின் கரையில் (உள்ள) புட்டபர்த்தியில் விளையாடுபவருக்கு வணக்கம்.

தட-கரை, கரையில் விஹாரின் – விளையாடுபவர், விஹாரினே – விளையாடுபவருக்கு. பாபா பக்தர்களுடன் நிறைய நேரம் சித்ராவதி நதிக் கரையில் செலவிடுவார். அளவில்லா ஆனந்தமும் ஆச்சரியமும் நிறைந்த தருணங்கள் அவை. அவர் சில சமயங்களில் தத்துவங்களும், மதக் கொள்கைகள் சார்ந்த கதைகளையும் கூறுவார். சில சமயங்களில் தத்துவங்களும், மதக் கொள்கைகள் சார்ந்த கதைகளையும் கூறுவார். சில நேரங்களில் பஜனைகள் பாடுவார்கள். பெரும்பாலும் மண்ணுக்குள் கையை விட்டு விக்ரகங்கள், சூடான தின்பண்டங்கள் மற்றும் இனிப்புகளை எடுத்து தருவார். அவற்றில் ஒரு துளி மண் கூட ஒட்டியிருக்காது. ஒரு முறை அவர் இந்திய அரசின் முன்னாள் விஞ்ஞான ஆலோசகரான டாக்டர் பகவந்தனுடன் பகவத் கீதையை பற்றி உரையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது சித்ராவதி நதிக் கரையின் துளி மண் எடுத்தார். அம்மண் பகவத் கீதையின் நூலாக மாறியது.

டாக்டர் பகவந்தம் பின்னர் அது எங்கு அச்சிடப்பட்டுள்ளது என்று ஆராயும்போது அதில் எந்த பதிப்பகத்தின் பெயருமே இல்லை ஏனெனில் அது கடவுளின் தெய்வீக அச்சகத்தில் இருந்து வந்தது அல்லவோ !

34. ஓம் ஸ்ரீ ஸாயி ஸக்தி ப்ரதாய நம:

ஆற்றலை அருள்பவருக்கு வணக்கம். ஸக்தி-ஆற்றல், தா-கொடுத்தல், தாய-கொடுப்பவருக்கு, ப்ர-சிறப்பைக் குறிக்கிறது.

ஒரு மாணவனுக்கு மூட்டுப் பகுதியில் அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. இரண்டு வாரங்கள் கழித்து ஸ்வாமி அவன் ஊன்றுகோல் உதவியுடன் நொண்டிக் கொண்டு நடப்பதைக் கண்டார். ஸ்வாமி அவனை அழைத்து அவன் நலம் விசாரித்தார். அந்த மாணவன் தனக்கு எவ்வித உதவியும் இல்லாமல் காலைத் தரையில் வைக்க மிகவும் பயமாக உள்ளதாக அவரிடம் பகிர்ந்தான். ஸ்வாமி அந்த பையனை எழுந்திருக்கவும் காலைத் தரையில் மிக மெதுவாக வைக்கவும் சொன்னார். ஸ்வாமி அவன் கையைப் பிடித்துக் கொண்டு அவனை ஓரிரு அடிகள் நடக்க வைத்தார். பின்னர் அவனை எவ்விதவியும் இல்லாமல் முன்னே நடக்க வைத்துப், ‘பார்த்தாயா உன்னால் முடியும் பங்காரு’ என்று மிருதுவாக கூறினார்.

அவனுக்கு ஒரு மோதிரத்தை வரவழைத்து ‘இனி நீ சரியாக நடப்பாய்’ என்றும் கூறினார். பின்னர் அந்த வருடம் அந்த பையன் 1500 மீ ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்றான். அப்போது அவன் முகம் பிரகாசிக்க கூறினான், இந்த வெற்றியை நான் என் அன்பிற்குரிய சமாதாவிற்கு அர்ப்பணிக்கிறேன்.

35. ஓம் ஸ்ரீ ஸாயி ஸரணாகத த்ராணாய நம:

(தன்னைச்) சரணடைந்தவர்களை காப்பவருக்கு வணக்கம்.

ஸரணம் + ஆகத ஸ்ரீ ஸரணாகத, ஆகத-வந்த, ஸரணா கத- சரணமடைய வந்த, சரணடைந்தவர்கள், த்ராணம் -காப்பாற்றுதல், த்ராண-காப்பவன், த்ராண-காப்பவருக்கு.

கடவுள் தன்னை களங்கமற்ற ஹ்ருதயத்துடன் சரணடைந்தவர்களை எப்போதும் காக்கிறார். அமெரிக்க நாட்டு தனவான் திரு. ஜான் சின்க்ளைர் தன்னுடைய சொந்த ஹெலிகாப்டரில் வணிக சம்பந்தமான சந்திப்பிற்காக ஒரு இடத்திற்கு தானே ஒட்டிச் சென்று கொண்டிருந்தார். அவர் ஏ கிளாஸ் விமான ஓட்டுனரின் உரிமம் பெற்று இருந்தார். வழியில் ஹெலிகாப்டரின் என்ஜின் பழுதடைந்தது. அவர் கூறியதாவது, ‘விமானத்தின் இயக்கம் நின்று விட்டதால் எனது மரணம் நிச்சயம்’ என அறிந்திருந்தேன். என்னுடைய பாக்கெட்டில் இருந்து ஸ்வாமியின் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தேன். மறு வினாடி ஸ்வாமியை அங்கு ஹெலிகாப்டரில் நான் கண்டேன். அவர் அதை மிகவும் துல்லியமாக இயக்கி ஒரு மலைப்பகுதியில் ஓரத்தில் பத்திரமாக தளம் இறக்கினார். பக்கவாட்டில் இருக்கும் கதவை திறந்து என்னை மிகவும் ஜாகிரதையாக வெளியில் இழுத்து ஹெலிகாப்டரை தள்ளிவிட்டு மறைந்து விட்டார். பாபா கூறியிருக்கிறார், ‘நான் உன்னுடைய எல்லா பாரங்களையும் சுமக்கிறேன், ரயிலில் ஏறிய பின் பெட்டியை எதற்கு தலையில் துக்கிக் கொண்டு இருக்கிறாய், அனைத்தையும் என்னிடம் விட்டுவிடு’.

36. ஓம் ஸ்ரீ ஸாயி ஆனந்தாய நம:

ஆனந்தத்தின் உறைவிடமாய் இருப்பவருக்கு வணக்கம். பாபா எப்பொழுதும் அமைதியுடனும் சாந்தமாகவும் இருக்கிறார். அவரை எவ்வித கவலையோ துயரமோ பாதிப்பதில்லை ஏனெனில் அவர் அனைத்தும் அறிவார், அணைத்து வல்லமையும் உடையவர். அவர் கூறுகிறார், ‘சாய் எப்பொழுதும் ஆனந்தம் நிறைந்தவர். கவலை துயரம் மற்றும் சஞ்சலம் சளியை நெருங்குவதில்லை’. நான் ஆனந்த ஸ்வரூபன், என்னுடைய சுபாவம் ஆனந்தம், ஆனந்தமே என்னுடைய அடையாளம் மற்றும் கையெழுத்தும் ஆகும்.

குழந்தை பருவத்தில் கூட சின்ன சத்யா எப்பொழுதும் அமைதியாக இருந்தார். அவருடைய பெற்றோர் விதவிதமான ஆடைகளை எல்லா குழந்தைகளுக்கும் வாங்கி வரும்போதும் கூட, எல்லோரையும் அவரவர் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்க சொல்லும்போது கூட, எல்லோரையும் அவரவர் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்க சொல்லும்போது கூட சத்யா எதுவுமே கேட்கமாட்டார். மற்ற அனைவரும் தங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொண்ட பின் எது இருந்ததோ அதை வைத்து திருப்தி அடைந்தார்.

37. ஓம் ஸ்ரீ ஸாயி ஆனந்த தாய நம:

ஆனந்தத்தை அருள்பவருக்கு வணக்கம். ஆனந்த – ஆனந்தத்தை. தா – கொடுத்தல் தாய – கொடுப்பவருக்கு

அவரை பார்க்கும்போது அவர் அருளுரையை கேட்கும்போதும் மற்றும் அவருடைய லீலைகளை வியத்தகு அற்புதங்களை கண்டு கழிக்கும்போது நமக்கு மகத்தான சந்தோஷம் கிடைக்கிறது. அவைகளை பற்றி கேட்பதோ அல்லது படிப்பதோ கூட நமக்கு கலப்படமற்ற தூய ஆனந்தத்தை அளிக்கிறது.

பாபாவினுடைய ஒரு பார்வை போதும் நம்முடைய ஹ்ருதயங்களை ஆனந்தத்தில் மிதக்க செய்ய. பிரசாந்தி நிலையத்தில் ஸ்வாமியின் வருகைக்காக காத்திருக்கையில் அனைவரின் முகங்களையும் பார்க்கலாம். சிலர் கவலையுடனும் சிலர் சோகமாகவும் சிலர் பக்தி பரவசத்திலும் இருப்பதை காணலாம். ஆனால் பாபா பிரசன்னமான மறுகணம் அங்கு ஒரு அற்புதம் நிகழ்கிறது. அவரின் அமைதியான ஆராதனையில் ஈடுபடும்போது அணைத்து கவலை மற்றும் சோகத்தின் சுவடு மறைந்து, வெறும் தூய அன்பும் ஆனந்தமும் அனைவரின் முகத்திலும் காணப்படுகிறது. அவர் அனைவரையும் தங்களின் துயரம் வருத்தும் சோகம் மற்றும் வலிகளையும் அவருடைய பாதங்களில் சேர்க்கவும் அவரிடமிருந்து அவர் மிக மகிழ்ச்சியுடன் வழங்கும் ஆனந்தத்தை பெற்றுக் கொள்ளவும் அழைக்கிறார்.

38. ஓம் ஸ்ரீ ஸாயி ஆர்த்த த்ராண பராயணாய நம:

துன்பமுற்றோரைக் காப்பாற்றுவதிலேயே ஈடுபட்டிருப்பவருக்கு வணக்கம். ஆர்த்த – துன்பமுற்றோர், த்ராண – காப்பாற்றுவதில், பராயண – ஏதேனும் ஒன்றிலேயே ஈடுபட்டிருப்பவர், பராயணாய – ஏதேனும் ஒன்றிலேயே ஈடுபட்டிருப்பவருக்கு.

ஆழ் துயரத்தில் இருக்கும் ஒருவன் அழைக்கையில் ஸ்ரீ சத்ய சாய் பாபா உடனடியாக அவருக்கு பதிலைக்கிறார்.

அல் டிரக்கர் அமெரிக்க நாட்டின் பாதுக்காப்பு இலாகாவின் ஏவுகணை மையத்தின் ஒரு விண்வெளி பொறியாளார். சில வருடங்களுக்கு முன் அல் டிரக்கர் மற்றும் அவர் நண்பர் ஒரு சிறிய விமானத்தில் பயணிக்க சென்றனர். திடீரென அவர்கள் ஒரு கடும் புயலில் சிக்கிக் கொண்டனர். கட்டுமீறிய புயலுக்கு எதிராக விமானத்தை சீராக இயக்க அல் டிரக்கர் போராடிக் கொண்டிருக்கையில் அவருடைய நண்பர் மயக்கமுற்றார். நம்பிக்கை இழந்த நிலையில் அவர் தன்னுடைய ரேடியோ ஒலி பரப்புக் கருவி மூலம் உதவிக்கு கூச்சலிட ஆரம்பித்தார். ஒரு பதிலும் இல்லை . அந்த சிறிய விமானத்தில் எரிபொருள் தீரும் நிலைக்கு வந்து விட்டது.

மிக மோசமான நிலையில் இருப்பதை உணர்ந்து அவர் கடவுளை அணுகி கதறினார். கடவுளே என்னைக் காப்பாற்று, என் உயிர் உன் கையில், நீ எப்படி விரும்புகிறாயோ அப்படியே செய். அந்த நெருக்கடியான தருணத்தில் ஒலி பரப்புக் கருவி திடீர் இயக்கம் பெற்றது. ஒரு அமைதியான குரல் கூறியது, ‘பயப்படாதே நான் உன்னை பாதுகாப்பாக கீழே இறங்குவேன். நான் கொடுக்கும் ஆணைகளை பின்பற்று. அல் டிரக்கர் அந்த முன்பின் தெரியாத நபரின் கட்டளைகளை பின்பற்றினார். கடைசியாக அந்த குரல் கூறியது, ‘நீ இதே திசையில் நேராக சென்றால் ரேனோ விமானநிலையம் காணலாம். அங்கு விமானத்தை கீழே இறக்கு நான் இப்போது உன்னிடமிருந்து விடைபெறுகிறேன். நற்பேறு பெறுவாயாக.’

சரியாக பினிரெண்டு நிமிடங்களுக்குப் பின் அவர் மேகங்களை கடந்து அந்த விமனநிலையத்தை கண்டார். பின்னர் பாதுகாப்பாக தரையில் இறங்கினார். அவருடைய நண்பரும் நினைவு திரும்பினார். அவர்களை பார்த்த ரேனோ விமான போக்குவரத்து பணியாளர் வியப்படைந்தார். “இந்த நேரத்தில் தாங்கள் எப்படி இங்கு வந்தீர்கள்? சில நிமிடங்களுக்கு முன் வரை விமான நிலையம் மிக மோசமான குழப்ப நிலையில் இருந்தது. நீங்கள் எப்படி இங்கு உயிருடன் வந்திர்கள் நம்புவதற்கு அரியது” என்றார்.

மேலும் அங்கு கடும்புயல் தாக்கம் இருப்பதால் அவர்களை விமானத்தில் செல்ல தேவையான எரிபொருள் ஏற்றிக்கொண்டு மெக்ஸிகோ எல்லைக்குச் செல்ல அறிவுறுத்தினார். அவர்கள் இந்த கட்டளைகளை பின்பற்றி, மெக்ஸிகோவில் தரை இறங்கிய பின் தங்குவதற்கு இடம் தேடி, அவர்கள் இந்திராதேவியின் ஆசிரமத்தில் தங்கினார். அங்கு சிலர் பாபாவிற்கு ஆரத்தி செலுத்திக் கொண்டிருந்தனர். அல் டிக்கர்க்கு அவரை பாதுகாப்பாக வழி நடத்திய குரலுக்கும், அந்த படத்தில் இருந்த பாபாவிற்கும் ஏதோ தொடர்பு இருப்பதை, உள்ளுணர்வு மூலமாக உணர்ந்தார்.

வெகு விரைவில் அவர் பிரசாந்தி நிலையம் சென்று பாபாவை தரிசனம் கண்டபோது ஸ்ரீ சத்ய சாய் பாபாதான் தன்னை அந்த கடும்புயலிலிருந்து காப்பாற்றியவர் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார்.

39. ஓம் ஸ்ரீ ஸாயி அநாத நாதாய நம:

திக்கற்றோரைக் காப்பவருக்கு வணக்கம்.

சாய் பாபா திக்கற்றவர்களுக்கு பாதுகாவலன்.

நாத – தலைவன், அநாத, தலைவனற்றவன் (இங்குத் திக்கற்றவரைக் குறிக்கிறது) நாதாய – தலைவனுக்கு (இங்கு காப்பவனுக்கு எனப் பொருள்படும்). மிகவும் நோயுற்ற ஒரு பெண்மணி தன் ‘இரு மகன்களுடன் ஸ்வாமியிடம் வந்து ‘சாய் மாதா, நான் என் இரு மகன்களையும் உன்னிடம் ஒப்படைக்கிறேன்’ என்று கூறிவிட்டு தன் இறுதி மூச்சை விட்டாள். பின்னர் இரு பிள்ளைகளையும் ஸ்வாமி வளர்த்தார். அதில் ஒரு பையன் பொது அரங்கில் பேசும்போது ஸ்வாமியை ‘என் அன்னை சாய்’ என்று அழைத்தான். பின்னர் அவன் கூறினான், ‘நான் ஒரு அன்னையை இழந்தேன், ஆனால் ஆயிரம் அன்னைகளின் அன்பைப் பெற்றேன்.’

பாபா கடுந்துன்பத்தில் இருப்பவர்களின் காவலன். அவர் கூறுகிறார், ‘யாரையும் அனாதை என்று அழைக்கக்கூடாது ஏனெனில் அணைத்து உயிர்களும் அவருடைய குழந்தைகள் மற்றும் அவரே அனைவரது பாதுகாவலன்’.

40. ஓம் ஸ்ரீ ஸாயி அஸஹாய ஸஹாயாய நம:

உதவியற்றோருக்கு உதவி செய்பவருக்கு வணக்கம். ஸஹாய – உதவி, உதவி செய்பவர், அஸஹாய – உதவியற்றோர், ஸஹாயாய-உதவி செய்பவருக்கு.

யார் ஒருவரும் எப்போதும் தனியாக இல்லை. பாபா அனைவர் உள்ளும் எப்போதும் இருக்கிறார். அவர் சொல்கிறார், ‘அவர் நமக்கு மேலே இருக்கிறார், முன்னே இருக்கிறார் மற்றும் பின்னே இருக்கிறார்’.

யுத்தத்தினால் சிதையுண்ட போஸ்னியாவில் ஒரு சாய் பக்தை போர் அகதிகளுக்கு ரொட்டியும் பிஸ்கட் பாக்கெட்டும் விநியோகிக்க சென்றாள். அவள் அவர்களுக்கு கூடவே ஒரு ஸ்வாமியின் படம் மற்றும் விபூதி பொட்டலம் ஒவ்வொருவருக்கும் கொடுத்தாள். சாப்பிடும்போது அந்த அகதிகள் ஸ்வாமியின் படத்தை பார்த்து விட்டு இவ்வாறு பேசி கொண்டனர், ‘இந்த படத்தில் இருக்கும் மனிதர் நமக்கு தினமும் ரொட்டி மற்றும் பிஸ்கட் கொடுப்பார். ஆனால் இன்று அவற்றை இப்பெண்ணிடம் கொடுத்து விநியோகிக்க சொல்லிருக்கிறார் போலும்?’

சர்வ வியாபியான ஸ்வாமி இந்த அகதிகளை ஏற்கனவே காத்து வந்திருக்கிறார். அவர் எப்போதும் தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறார் அவர்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும்.

41. ஓம் ஸ்ரீ ஸாயி லோக பாந்தவாய நம:

உலகத்தின் உறவினனுக்கு வணக்கம்.

லோக – உலகம், உலகத்தின், பந்து – உறவினன், பாந்தவ – உறவினன், பாந்தவாய-உறவிைனுக்கு

ஒரு முறை ஸ்வாமியுடன் நேர்காணலுக்கு அழிக்கப்பட்ட ஒரு பக்தன் ஸ்வாமியிடம் கூறினார், ‘ஸ்வாமி நான் உங்களுக்காக கடந்த மூன்று வாரங்களாக காத்துக்கொண்டிருக்கிறேன். ஸ்வாமி பாசமாக பதிலளித்தார், ‘என் ப்பிரியமானவனே! உனக்குத் தெரியுமா, நான் உனக்காக எத்தனை வருடங்களாக காதுக்கொண்டிருக்கிறேன்? அந்த மனிதன் அதிர்ச்சியடைந்தான். ஸ்வாமி தனக்காக காத்துக் கொண்டிருந்தார் என்பதைக் கேட்டவுடன் அவர் மகிழ்ச்சியில் அழ ஆரம்பித்தார்.

ஸ்வாமி சொல்கிறார், என் அன்புக் குழந்தைகளே! நீங்கள் என்னை தேடி வரும்போதெல்லாம் நான் உங்களின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருப்பாதை நீங்கள் காணலாம் நீங்கள் எப்போது வருகிறீர்கள் என்பது பொருட்டல்ல. தேவையான நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். நான் எப்பொழுதும் உங்களுக்கக காத்துக்கொண்டிருக்கிறேன். அன்பு அன்னை சாய் எப்பொழுதும் எல்லோரையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள்.

42. ஓம் ஸ்ரீ ஸாயி லோக ரக்ஷா பராயணாய நம:

உலகத்தின் பாதுகாப்பிலே ஈடுபட்டிருப்பவருக்கு வணக்கம். லோக – உலகம், உலகத்தின். ரக்ஷ – பாதுகாப்பு, பராயண – ஏதேனும் ஒன்றிலேயே ஈடுபட்டிருப்பவர், பராயணாய – ஏதேனும் ஒன்றிலேயே ஈடுபட்டிருப்பவருக்கு டாக்டர் ஆர்ட் ஓங் ஜூம்சாய் ஒரு பாங்காக் வாசி. அவருடைய தொழிற்சாலையில் ஒரு நாள் இரவு திருடர்கள் புகுந்தபோது, எவ்வாறு ஸ்வாமி காவலாளியின் அறைக்குள் புகுந்து அவனை எழுப்பி தாய்லாந்து மொழியில் அவனிடம் அவன் பணியை சரி வரச் செய்ய செய்தார் என்பதை விவரிக்கிறார். அந்த காவலாளிக்கு ஸ்வாமி எவ்வாறு உள்ளிருந்து பூட்டிய தனது அறைக்குள் நுழைந்தார் என்று புரியவே இல்லை. மறுநாளும் இதே மாதிரியாக நடந்தது. மூன்றாவது நாள் டாக்டர் ஆர்ட் ஓங் ஜூம்சாயிடம் என்ன நடந்தது என்று காவலாளி கூறிக் கொண்டிருக்கையில் அவரிடம் இருக்கும் ஸ்வாமி படத்தைக் கவனித்து அதைக் காட்டி இவர்தான் தன்னை எழுப்பி எச்சரித்தார் என்றும் கூறினான். இவ்வாறாக ஸ்வாமி தன்னுடைய பக்தனுடைய தொழிற்சாலையை காப்பாற்றினார். ஸ்வாமி தன்னை ஆத்மர்த்தமாக அழைப்பவர்களையும் அவர்களது உடைமைகளையும் காப்பாற்றி இருக்கிறார் என்பதற்கு இதே மாதிரி கணக்கில்லா உதாரணங்கள் உண்டு.

கூர்க் என்ற ஊரில், குமார் என்ற சாய் பக்தன், ஒரு பாழடைந்த கட்டிடத்தில் வசித்து வந்தான். ஒரு நாள் இரவில் கடும் புயல் மற்றும் கன மழை ஊரை தாக்கியது. குமார் ஒரு அகர்பத்தியை ஏற்றி ஸ்வாமி படத்திற்கு நேர் வைத்து சில பஜனைகளை பாடிய பின் உறங்கினான். திடீரென ஒரு குரல் அவனை எழுப்பி, குமார் ஓடு! என்று கூறியது. அவன் உடனே கதவை திறந்து இருட்டில் ஓடினான். அவன் சாலையை நெருங்குகையில் ஒரு பலத்த சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான். அவன் இருந்த கட்டடம் இடிந்து விழுந்தது. அடுத்த நாள் காலை அந்த சேதத்திடையே பாபாவின் படம் மட்டும் கண்ணாடி உடையாமல் பத்திரமாக அவனுக்கு கிடைத்தது.

43. ஓம் ஸ்ரீ ஸாயி லோக நாதாய நம:

உலகத்தின் தலைவருக்கு வணக்கம். நாத -தலைவன், லோக – உலகம், உலகத்தின் நாதாய தலைவருக்கு.

ஒரு முறை ஸ்வாமி சில பக்தர்களிடம் தன் கரத்தைக் காட்டி அதில் என்ன இருக்கிறது என்று கேட்டார். சிலர் அதில் ஒன்றும் இல்லை என்று பதிலளித்தனர். அப்பொழுது ஸ்வாமி அமைதியாக கூறினார், ‘இந்த வெறும் கைதான் அனைத்தையும் தாங்குகிறது.’

அவர் தன் கையை மூடி ஒரு கணம் பின் திறந்தார். அதில் ஒரு வெட்டுக்கிளி இலையை உண்டு கொண்டிருந்தது. அவர் மறுபடியும் கையை மூடித் திறந்தார் அப்பொழுது ஒன்றுமில்லை.

இந்த நிகழ்வின் மூலம், ‘படைத்தல் காத்தல் மற்றும் அழித்தல்’ அனைத்தும் ஸ்வாமியின் ஆதிக்கத்தில் உள்ளது என்பதை நமக்கு புலப்படுத்துகிறது.

44. ஓம் ஸ்ரீ ஸாயி தீன ஜன போஷணாய நம:

உதவியற்ற ஜனங்களை காப்பவருக்கு வணக்கம். தீன ஜன – உதவியற்ற ஜனங்கள், உதவியற்ற ஜனங்களை, போஷணம் – காப்பாற்றுதல், போஷண – காப்பவர், போஷணாய – காப்பவருக்கு

சிறுவயதிலேயே சத்யாவின் ஹ்ருதயம் மனிதத் துன்பத்தைக்கண்டு உருகும் வாசலில் பிச்சைக் கேட்டு யாரேனும் வந்தால் சத்யா விளையாட்டை நிறுத்தி விட்டு உள்ளே விரைந்து சென்று அன்னை மற்றும் சகோதரிகளிடம் அவருக்கு ஏதேனும் அளிக்கும்படி அன்புடன் கூறுவார். அவர் தன்னுடைய பங்கு சாப்பாட்டை அளித்துவிட்டு தான் சாப்பிடாமல் இருந்து விடுவார். அவர் கூறுவார், நான் என்னுடைய பங்கையே அவனுக்கு அளித்தேன். அவன் பசி தீர்ந்ததால் என் வயிறு நிறைந்தது போல. அவர் குடும்பம் ரொம்ப செழிப்பான நிலைமையில் இல்லாவிட்டாலும் அவர் தன்னுடைய துணிமணிகளைவறியவர் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு கொடுத்துவிடுவார்.

இன்று அவருடைய வழிகாட்டுதலில் ஸ்ரீ சத்ய சாயி நிறுவனம், ஏழைகள் மற்றும் வறியவர்களை நாடி சேவை செய்ய செல்கிறது. ‘நாராயண சேவா’ புட்டபர்த்தி மற்றும் உலகின் பல்வேறு இடங்களிலும் தவறாமல் நடக்கிறது. இலவச மருத்துவ உதவி மற்றும் கல்வி வழங்கப்படுகிறது.

45. ஓம் ஸ்ரீ ஸாயி மூர்த்தி த்ரயஸ்வரூபாய நம:

முமூர்த்தி வடிவினனுக்கு வணக்கம் . மூர்த்தி-மூர்த்தி, த்ரய-மூன்று, மூர்த்தித்ரய-மும்மூர்த்தி (பிரமன், விஷ்ணு, சிவன்) ஸ்வரூபி-வடிவினன், ஸ்வரூபாய-வடிவினனுக்கு.

பாபாவின் உண்மை தன்மையை உணர்த்தும் மூன்று ரூபங்கள்தான் ப்ரம்ஹன் (படைப்பவர்), விஷ்ணு (காப்பவர்) மற்றும் சிவன் (அழிப்பவர்).

ஒருமுறை ஒரு மாணவன் தன்னுடைய புகைப்பட கருவி மூலம் ஸ்வாமியை புகைப்படம் எடுத்தான். அந்த புகைப்பட சுருளை கழுவியபோது அப்படத்தில் சுவாமிக்குப் பதிலாக பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவருடைய தலைகளைக்கொண்ட கடவுள் தத்தாத்ரேயாின் உருவம் பதிந்திருந்தது கண்டு வியப்புற்றான். இதன்முலமாக இந்த பிரபஞ்சத்தின் படைப்பவர், காப்பவர், மற்றும் அழிப்பவர் ‘சுவாமி தான்’ என்பதனை உணர்த்தினார். சுவாமி ஆன்மீக அன்பர்களின் குற்றம்குறைகளை களங்கமற நீக்குகிறரர்.

46. ஓம் ஸ்ரீ ஸாயி முக்தி ப்ரதாய நம:

மோக்ஷத்தை நல்குபவருக்கு வணக்கம்.

முக்தி – மோக்ஷம், தர – கொடுத்தல், தாய – கொடுப்பவருக்கு, ப்ர என்பது சிறப்பைக் குறிக்கிறது.

சுவாமி கூறுகிறார், “மிகச் சிறிய, அற்பமானவைகளையும், உடல் உபாதைக்கான நிவாரணங்களையும் என்னிடம் கேட்கிறீர்கள். நான் என்ன நோக்கத்திற்காக வந்துள்ளேன் (முக்தியை அளிக்க – பிறப்பு , இறப்பு சூழல்களில் இருந்து விடுதலை) என்பதை அறிந்த ஒரு சிலரே என்னிடம் முக்தி வேண்டி பிரார்த்தனை செய்கின்றனர். பகவானால் ஆசிர்வதிக்கப்பட்ட கர்ணம் சுப்பம்மா, இதற்க்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும் . சுவாமியின் வளர்ப்புத் தாயக கருதப்படும் சுப்பம்மா சுவாமியைக் காண வரும் பக்தர்களுக்கு தேவையான உணவை வழங்கும் பணியில் ஈடுபட்டார். வயது மூப்படைந்த போது, சுவாமியிடம் தனது ஒரே ஓரு ஆசையை நிறைவேற்றிட வேண்டினாள்” தான் இறக்கும்தறுவாயில், தனக்குக் கட்சி அளித்து, புனித கங்கை நீரை தன் வாயில் விட வேண்டும் ” என்பதே அந்த ஒரே ஒரு பிரார்த்தனை. சுவாமியும் அவ்வாறே செய்வதாக வாக்களித்தார். சிறிது நாட்கள் கழித்து, அவள் நோய்வாய்ப்பட்டு இறந்தாள். அப்போது சுவாமி திருப்பதியில் இருந்தார். சுவாமி அவர்களுக்கு அளித்த வாக்குறுதியை மறந்து விட்டார் என்றே அனைவரும் நினைத்தனர்.

அவள் இறந்து பல மணி நேரம் கழித்து, பார்தி திரும்பிய சுவாமி அவளை நோக்கி, “சுப்பம்மா, சுப்பம்மா” என்று அழைத்தார். அங்கு கூடியிருந்த அனைவரும் ஆச்சரியப்படும் வகையில், சுப்பம்மா தனது கண்களைத் திறந்தாள். சுவாமி தனது விரல்களை அவளது உதட்டருகில் மெதுவாக வைத்த போது, புனித கங்கை நீர் சுவாமியின் விரல்கள் வழியே, சுப்பம்மாவின் வாயிற்குச் சென்றது. அவளும் நீரைப்பருகினாள். மகிழ்ச்சிப் புன்னகை முகத்தில் பரவ தனது கண்களை இறுதியாக மூடி இறைவனடி சேர்ந்தாள்.

47. ஓம் ஸ்ரீ ஸாயி கலுஷ விதூராய நம:

குறையொன்றுமில்லாதவருக்கு வணக்கம். குற்றங்களிலிருந்து மிகத் தூரத்திலிருப்பவருக்கு வணக்கம்.

ஸ்வாமி ஆன்மீக அபேக்ஷர்களின் குற்றம் குறைகளை களங்கமற நீக்கி விடுகிறார். பகவானின் தெய்வீக மற்றும் அன்பான சுழலில் அடைக்கலம் புகுந்த பக்தர்களின் வாழ்க்கை முறையில் நிறைந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவர்கள் பாபாவின் அறிவுரைகளைக் கடைபிடிக்க முயற்சி செய்து அமைதியாகவும், கருணையுடனும் பரிவுடனும் நடக்கிறார்கள். இந்த மனமாற்றமே பகவான் நிமிடத்துக்குநிமிடம் நடத்துகிற தொடர் அற்புதம் ஆகும்.

48. ஓம் ஸ்ரீ ஸாயி கருணாகராய நம:

கருணையின் இருப்பிடமானவருக்கு வணக்கம்.

கருணா + ஆகரம் ஸ்ரீ கருணாகரன், ஆகரம் – இருப்பிடம், ஆகாராய – இருப்பிடமாக இருப்பவருக்கு.

பகவான் ஸ்ரீ சத்யசாய்பாபா ஒருமுறை பெங்களூரிலிருந்து புட்டபூர்த்திக்கு காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அவருடைய ஒரு மாணவன் கரை ஒட்டிக்கொண்டிருந்தான். பாதை மிகவும் கரடுமுரடாகவும் மலைப் பகுதியாகவும் இருந்தது வண்டியை ஒட்டிக்கொண்டிருந்த மாணவன் ஒரு நாகப்பாம்பு குறுக்கே செல்வத்தைக்கண்டான். ஆனால் உறங்கிக்கொண்டிருந்த பாபாவின் தூக்கத்தை கலைத்து விடுமோ என நினைத்து நிறுத்தாமல் சென்றுவிட்டான். அதனால் அவன் அந்த நாகப்பாம்பின் மீது வண்டியை ஒட்டிசென்றான் பிரசாந்தி நிலையத்தை வந்தடைந்ததும் மாணவன் இறங்கி வேகமாக தன் இல்லத்தின் வராண்டாவிற்கு விரைந்தார் அந்த மாணவன் சுவாமியின் அங்கியில் பின்புறம் ஒரு அகலமான மண்பூச்சு பட்டையாக இருப்பதைக்கண்டு குழப்பமடைந்தான் அவன் சுவாமியிடம் “சுவாமி உங்கள் ஆடையின் பின்பக்கம் கரை பட்டுருக்கிறது” என்றான் அதற்கு சுவாமி சிறிது நேரமுன் நான் ஒரு நாகபாம்பை காப்பாற்றவேண்டி கார் டயரின் அடியில் செல்ல நேரிட்டது என்றார். சுவாமியின் அன்பு மற்றும் கருணை மனிதர்களை மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களையும் சூழ்ந்து இருக்கிறது.

49. ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வாதாராய நம:

அனைத்திற்கும் அடிப்படையை இருப்பவருக்கு வணக்கம்.

ஸர்வ + ஆதாராய ஸ்ரீ ஸர்வாதாராய; ஸர்வ – எல்லாவற்றிற்கும், ஆதார-அடிப்படை, மூலம், ஆதாரம், ஆதாராய- அடிப்படையாயிருப்பவருக்கு.

அவரே அனைவருக்கும் வழங்குபவராகவும் காப்பாளராகவும் இருக்கிறார். ஒருநாள் கோடையில் மாணவர்கள் சிற்றுண்டி உண்ண ஹாலில் சுவாமியின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தனர் சுவாமி திடீரென சமையல் அறையிலிருந்து வந்தார். அவர் ஒரு கிளாஸ் மற்றும் ஸ்பூனை வைத்துக் கொண்டிருந்தார். அவர் “ஒருபையன் உடல் நலமில்லாமல் இருக்கிறான், நான் அவனுக்காக இந்த கஞ்சியை தயாரித்திருக்கிறேன், அவனுக்கு சென்று கொடுத்துவிட்டு வருகிறேன், பின்பு உங்களை சந்திக்கிறேன்” என்று கூறினார். அவர் நம்முடைய அணைத்துத் தேவைகளையும் – சிறியதோ பெரியதோ கவனித்துக்கொள்கிறார்.

50. ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வ ஹ்ருத்வாஸினே நம:

எல்லா இதயங்களில் வாசிப்பவருக்கு வணக்கம்.

ஸர்வ – எல்லா, ஹ்ருத் – இருதயங்களில், வாஸின் – வசிப்பவர், வஸினே – வாசிப்பவருக்கு. பாபா கூறுகிறார், “நானே அனைவருள்ளும் உறையும் மெய்ம்மை. ஆதலால் நீ ஒருவரிடம் அன்பு செலுத்தும்போது என்னை நேசிக்கிறாய். ஒருவரை காயப்படுத்தும்போது என்னை நோகடிக்கிறாய்.” குண்டூர் மாவட்டத்தில் உள்ள ரேபள்ளி கிராமத்தில் ஒரு கோவிலில் பாபா ஷீரடி பாபாவின் விக்ரஹத்தினை பிரதிஷ்டை செய்தார். அப்போது அங்கிருந்த மக்களிடம் கூறினார் “உங்கள் கிராமத்தில் ஷீரடி சாய் ஸ்தாபனம் செய்ததாலே நீங்கள் அனைவரும் அவரை உங்கள் ஹிருதயத்தில் ப்ரேமையின் பீடத்தில் அமர்த்திக்கொள்ளுங்கள். ஏனெனில் சாய் பிரேம சொருபம். சாய் கோவில்களில் உறைபவர் அல்ல. அவர் ஹிருதயத்தில் வசிப்பவர்” சுவாமி சொல்கிறார் பேரரசு முழுவதும் ஒவ்வொரு சதுர அங்குலமும் அதை ஆளுகின்ற ஏகாதிபதிக்கே சொந்தம். ஆனாலும் அவர் சற்று ஓய்வு கொள்ள சாய்வதற்கு அவர் பார்த்த முதல் இடத்திலேயே உட்காருவதில்லை, இல்லையா? அவர் சுத்தமான சமமான முட்களில்லாத மிருதுவான ஒரு இடத்தையே தேர்ந்து எடுக்கிறார். அங்ஙனமே அணைத்து உள்ளங்களும் அவருடையதாயினும் தூய ஹிருதயத்தில் மட்டுமே அவர் தன்னை வெளிப்படுத்துகிறார்.

51. ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வ புண்ய பலப்ரதாய நம:

எல்லாப் புண்ணியங்களின் பலனையும் நல்குபவருக்கு வணக்கம். ஸர்வ் – எல்லா, புண்ய – புண்ணியங்களின், பல – பலனை, தா – கொடுத்தால், தாய – கொடுப்பவருக்கு, ‘ப்ர” என்பது சிறப்பைக் குறிக்கிறது.

ஒவ்வொரு செயலுக்கும் அதன் விளைவுகள் உண்டு. நம்முடைய கெட்ட செயல்களின் விளைவுகள் வேதனை தரக்கூடியதாகும். ஆனால் நம்முடைய நல்ல செயல்கள் கடவுளால் வெகுமானம் செய்ய்யப்படுகின்றன. புகழ்பெற்ற ஸ்ரீ ரமண மகரிஷியின் சீடரான சுவாமி அமிர்தானந்தா அருணாச்சலத்திலிருந்து புட்டப்பர்த்திக்கு பகவானின் தரிசனத்திற்காக பயணித்தார். சுவாமி அவருக்கு நேர்முகப்பட்டி அளித்தார். 85 வயதுநிறைந்த அவரிடம் உரையாற்றிக் கொண்டிருக்கையில் சுவாமி அவரிடம், உன்னுடைய ஏழாம் வயதில் நீ தொடர்ச்சியாக நாற்பத்தைந்து நாட்கள், ஒரு நாளைக்கு ஆயிரம் தடவை கணபதி நாமத்தை உச்சரித்துக்கொண்டே கணபதி ஹோமம் நடத்தினாய். புனித நுல்களின்படி இந்த சாதனையின் பலன் கடவுள் மஹாகணபதியின் தரிசனமாகும். இந்த புனிதமான பலனை அனுபவிக்கவே நீ இங்கு என்னிடம் வந்திருக்கிறாய். இப்பொழுது உனக்கு அந்த ஹோமத்தின் பலன் கிட்டும் என்று கூறி சுவாமி அமிர்தானந்தாவை தன்னை நோக்கிப் பார்க்கச்சொன்னார். சுவாமி அமிர்தானந்த, அவ்வாறே சுவாமியை நோக்கிக்கொண்டிருக்கையில் பகவானுக்குப் பதிலாக ஒளிபொருந்திய கடவுளான மஹாகணபதியின் தங்கநிற ரூபத்தினைக் கண்டார்.

52. ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வபாப க்ஷயகராய நம:

எல்லா பாவங்களின் அழிவைச் செய்பவருக்கு வணக்கம். ஸர்வ – எல்லா, பாப – பாவங்களை, பாவங்களின், ‘யம் – அழிவு, க்ரு – செய்தல், கர – செய்பவர், கராய – செய்பவருக்கு.

கடவுளின் கருணை நம்முடைய கர்மாவின் வினைப்பயன்களை தணிந்துவிடும் என்று சுவாமி அருளியிருக்கிறார் அவர் மேலும் கூறுகையில், செய்த தவறுக்கு வருந்தாலும் மறுபடியும் செய்யாமல் இருப்பதில் உறுதியாய் இருந்தலும் இறைவனிடத்தில் அதற்கு தக்க மன உறுதியை அளிக்கவும் வேண்டுதலும் தூய்மை அடையும் பணியில் உதவுகிறது. ஆரம்ப நாட்களில் புட்டபர்த்தியில் ஒரு பெண்மணி பாபாவுக்கு தீங்கு செய்ய எண்ணி விஷம் கலந்த வடைகளை அளித்தால். பாபா விஷம் கலந்த வடைகள் என்று அறிந்திருந்தலும் அதனை மிகவும் விரும்பி அனுபவித்து உண்டார். பின்னர் அந்தப்பெண்மணி பாபாவிற்கு என்ன ஆகிறது என்ற ஆவலுடன் பாபாவினை பின்தொடர்ந்து சென்றாள். பாபா தான் உண்ட விஷம் கலந்த வடைகளை முழுது முழுதாக வாந்தி எடுப்பது கண்டு அந்த பெண்மணிக்கு பாபவின் தெய்வீகத்தன்மை புரிந்தது. பாபாவின் காலில் விழுந்து மன்னிக்குமாறு வேண்டினாள். கருணை உருவான சுவாமி அவளை மன்னித்தார்.

53. ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வரோக நிவாாினே நம:

எல்லா வியாதிகளையும் போக்குபவருக்கு வணக்கம். ஸர்வ-எல்லா, ரோக -வியாதிகள், நிவாரணம் -போகுதல், நிவாரினே – போக்குபவருக்கு, நிஸ்ஸோஷணவாரணம் நிவாரணம் – மிச்சமில்லாதபடி போக்குதல் அல்லது அழித்தல் நிவாரணமெனப்படுகிறது. தொண்டையில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட வக்கீல் ஒருவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து பின்னர் கதிர்வீச்சு மற்றும் கீமோ தெரபி சிகிச்சையும் பரிந்துரைத்தனர். அவர் வந்தவுடன் பகவான் அவரை நேர்முகப் பேட்டிக்கு அழைத்தார். பேட்டி முடிந்த உடன், பாபா அவருக்கு அதிகமான அளவில் விபூதி வரவழைத்து அவரிடம் கொடுத்து விபூதியை உடனே சாப்பிடச் சொன்னார். நேர்முகப் பேட்டிக்குப்பின் அவர் கேண்டீனுக்கு காப்பி அருந்த சென்றார். அங்கு பகோடா தின்பண்டம் இருப்பது கண்டு ஒருதட்டு பகோடா வாங்கினார் அவர் அதனை எந்த வித கஷ்டமில்லாமல் உண்ண முடிந்தது கண்டு ஆச்சரியமுற்றார். அவருக்கு தொண்டையில் புற்றுநோய் தாக்கிய இடத்தில் எந்த வலியையும் உணரவில்லை. சுவாமி தன் அருளால் அவரை குணப்படுத்தியிருக்கிறார் என்பதை உணர்ந்தார். பின்னர் அவர் சனாதன சாரதி மாத இதழின் சிந்தி மொழிபெயர்ப்பாளரானார். சுவாமியால் குணப்படுத்த முடியாத னாய் என்று எதுவும் கிடையாது.

54. ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வ பாத ஹராய நம:

எல்லா தொந்தரவுகளையும் அழிப்பவருக்கு வணக்கம். சர்வ – எல்லா : பாத – துன்பம்: ஹராய – அழிப்பவருக்கு. ‘ருத்’ என்ற பெண்மணிக்கு ஆரோக்கியம் சரியில்லாததால் அவருக்கு பல நேரங்களில் கடுமையான வலி தாக்குதல் வரும் அவள் அமெரிக்காவில் சாய் பஜனைகளில் கலந்து கொள்வாள். ஒருநாள் மாலை அவள் கொடூரமான வலியின் தாக்குதலால் துன்புற்றாள். அவள் வேதனையில் கத்தினாள் “எனக்கு உதவி செய்ய யாரேனும் இருக்கிறீர்களா? நான் இங்ஙனம் ஏன் துன்பப்படுகிறேன்? நான் என்ன செய்வேன்? தயவு செய்து உதவி செய்யுங்கள்” அப்போது திடீரென அவருடைய கரத்தில் ஒரு மென்மையான ஸ்பரிசத்தை உணர்ந்தாள். திரும்பி பார்த்தபோது அவள் படுக்கையருகே பாபா இருப்பதை பார்த்தாள். அவள் அவளிடம், “இங்ஙனம் கத்தாதே. நான் எப்பொழுதும் இங்கிருக்கிறேன்” என்று கூறி மறைந்தார். அவர் தோன்றியவண்ணமே திடீரென மறைந்தார். கூடவே வலியும் மறைந்தது. சுவாமி கூறுகிறார். ஒரே கடவுள் தான் இருக்கிறார், அவர் எங்கும் நிறைந்து இருக்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: