ஈஶ்வராம்பா ஸுத ஸ்ரீமன்

Print Friendly, PDF & Email
ஈஶ்வராம்பா ஸுத ஸ்ரீமன்
கேட்பொலி
வரிகள்
  • ஈஶ்வராம்பா ஸுத ஸ்ரீமன் பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
  • உத்திஷ்ட ஸத்ய ஸாயீஶ கர்த்தவ்யம் தைவம் ஆஹ்னிகம்
விளக்கவுரை

ஈஸ்வராம்பாவின் திருப்புதல்வரே! ஸ்ரீமானே! ஸத்ய ஸாயிநாதனே! கிழக்குத் திசையில் வைகறைப் பொழுது ஆரம்பமாகிறது. ஸகல ஐஸ்வர்யங்களுக்கும் தலைவனே! பகற்பொழுதில் செய்யவேண்டிய தெய்வீகமான நித்ய கடமைகளை ஆற்றுவதற்குப் பள்ளி எழுந்தருளாய்!

பதவுரை
ஈஶ்வராம்பா பகவான் ஸ்ரீ ஸத்ய ஸாயியின் திருமேனியின் தாயாருடைய திருநாமம்
ஸுத புதல்வன்
ஸ்ரீமன் ஸ்ரீமானே (விளி)
பூர்வா கிழக்குத் திசையில்
ஸந்த்யா வைகறை வெளிச்சம்
ப்ரவர்த்ததே ஆரம்பிக்கிறது
உத் மேல்
திஷ்ட நில்
உத்திஷ்ட எழுந்திரு (பள்ளி எழுந்தருள்வாய்)
ஸத்யஸாயி பகவான் திருநாமம்
ஈ ஶ சகல ஐஸ்வர்யங்களுக்கும் தலைவன் (இங்கு விளியாய் நின்றது),
கர்த்தவ்யம் செய்யப்பட வேண்டும்
தைவம் தெய்வீகமான
அஹ: பகல்
அஹ்னி பகலில்
ஆஹ்னிகம் பகலில் செய்யப்படும் கடமைகள்
விளக்கம்

உட்பொருள்: ஈஸ்வராம்பாசுத: நம் ஆத்மா தான் குழந்தை. அது இறைவனது குழந்தை.

ஸ்ரீமான்: செல்வத்துள் எல்லாம் செல்வம். இறைவனுடைய சாம்ராஜ்யம். அதுவே அறிவு, அன்பு, இனிமை, அழகு, ஒளி, சக்தி இவையெல்லாம்உடையது.

பூர்வாஸந்தியா: அறியாமை இருள் நீக்கி, மங்களம் என்ற காலைப்பொழுது விடுகின்றது.

ஸத்ய: உயிர்களின் உண்மை.

ஸா+ ஈ + ஸ: சிவமாகவும் சக்தியாகவும் இருப்பவர்.

உத்திஷ்ட: என் ஆத்மாவில் இருக்கிற இருள்நீக்கி, என்னுள் ஒளியைப் பரப்பு.

கர்த்தவ்யம் தைவமாஹ்னிகம்: என்னுடைய நாட் கடமைகள் தெய்வீகமாக ஆகவேண்டும்.

நாம் சுப்ரபாதம் பாடும்போது, நம்முள் இறைவன் இருக்கிறார் என்று கருத வேண்டும். இறைவன் தான் அருளையும் ஆனந்தத்தையும் தருகிற சக்தியின் பிறப்பிடம் (POWER HOUSE). ஆகவே இறைவனை நாம் எழுப்ப வேண்டும். அதாவது நம்மிடம் மறைந்து கிடக்கிற தெய்வீகத்தை உணர்ந்து சாதனையால் அதை எழுப்ப வேண்டும். நாம் செய்வதெல்லாம் இறை காரியமாக உணர வேண்டும். நாம் உண்பது, உறங்குவது, அனுபவிப்பது எல்லாம் இறை காரியம் தான், மற்றும் நம்மை நாம் இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும். நாம் இதை இப்படிச்செய்தால், சொன்னால், நினைத்தால் ஸாயி அதை விரும்புவாரா? ஸாயி எனது உடம்பை இப்படிஇயக்குவாரா? இப்படித்தான் அவர் எண்ணுவாரா? அல்லது செய்வாரா? என்றெல்லாம் நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். நாம் இப்படி செய்தால் குழந்தைக்கு வழிகாட்டி நல்ல நடத்தைக்கு கொண்டு வர இயலும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன