கோல்ட்ஸ்மித்தின் பொன்னான இதயம்

Print Friendly, PDF & Email
கோல்ட்ஸ்மித்தின் பொன்னான இதயம்

ஆலிவர் கோல்ட்ஸ்மித் என்பவர், கட்டுரைகள். முழு நீளக் கதைகள் நாடகங்கள் இவற்றை எழுதும் ஒரு ஆங்கிலேயராவார். அவர் ஒரு இளகிய அன்பின் இதயத்தைப் பெற்றவர். குழந்தைகள் என்றால் அவருக்கு மிக்க விருப்பம். அத்துடன் ஏழை எளிய வர்களுக்குத் தம்மாலான உதவி புரிய அவர் தயங்குவதேயில்லை.

Goldsmith visting the poor patient

ஆலிவர் கோல்ட்ஸ்மித் ஒரு மருந்தராக விருப்பம் கொண்டவராய் மருத்துவத் துறை படிப்பு படித்தார். ஆனால் அவர் அந்த துறையில் தொழில் புரியவில்லை. எழுத்துப்பணியையே அவர் மிக்க விரும்பி ஏற்றார்.

ஏழை பெண்மணி ஒருத்தி அந்த கவிஞரைப் பற்றி அவர் ஓர் அன்புகனிந்த இதயத் தினர் என்று கேள்விப்பட்டு அவரிடம் சென்றாள். அவளுடைய கணவன் நோய் வாய்ப்பட்டிருந்தான். எனவே,” ஐயா என் கணவன் மிகவும் நலம் தாழ்ந்து இருக்கிறார். என்னிடம் போதுமான பணம் இல்லாமையால் ஒரு மருந்தரிடம் சென்று காட்டி மருந்து வாங்கி தர இயலாதவளாக இருக்கிறேன். நெகிழ்ந்த நெஞ்சம் பெற்றுள்ள தாங்கள் ஒரு முறை வந்து அவரை கவனிக்கிறீர்களா?’ என்று வேண்டினாள்

சற்றுகூட தயங்காது கோல்ட்ஸ்மித் அவளது வீட்டிற்குச் சென்றார். நோயாளி மிக்க பலவீனமாக இருப்பதைக் கண்டார். சுற்றும் முற்றும் பார்த்தார். அடுப்பு எரிந்த சுவடே தெரியவில்லை. நாட்கணக்கில் உணவு உட்கொண்ட அடையாளமும் தெரியவில்லை. வயோதிக நோயாளியைச் சரிவர மூடும்படியான துணியும் அவர்களிடம் இல்லை.

Goldsmith sending ten guineas to the patient

கொஞ்ச நேரம் விசாரித்துவிட்டு புறப்படும் முன்பு அவர், “அம்மா! நான் நோயாளிக்குத்தருவதற்காக சில மாத்திரைகளை அனுப்புகிறேன்”. என்று கூறிவிட்டுச் சென்றார்.

வீட்டிற்குச் சென்றவுடன் பத்து கினி காசுகளை(ஆங்கிலேயரது தங்க நாணயங்கள்)ஒரு சிறு பெட்டியில் போட்டு அதன்மேல் “ உண்பதற்கு ரொட்டியும்,பாலும் குளிர்காய நிலக் கரியும் வாங்க பயன்படுத்தவும். பொறுமையாகவும் நம்பிக்கையுடனும் இருக்கவும்” என்று ஒரு தாளில் எழுதி ஒட்டினார்.

ஒரு பணியாள் அந்த பெட்டியை நோயாளியிடம் கொண்டு தந்தான். ஒரு மருந்தருடைய மருந்துகளை விட மேலானதாக அப்பெட்டியில் இருந்தனவற்றைக் கண்ட அந்த நோயாளி அகம் நெகிழ்ந்து போனான்.

சில நாட்களில் நோயாளி ஓரளவு நலமுற்று காலத்தில் செய்த உதவிக்காக மருந்தருக்கு நன்றி செலுத்த தானே அவர்து வீடடிற்குச்சென்றான்.

கேள்விகள்:
  1. கோல்ட்ஸ்மித் என்பவர் யார்?
  2. அந்த நோயாளி எதனால் துன்புற்று வந்தான்?
  3. அவனுக்கு தந்த மருந்து என்ன?
  4. இக்கதையின் நீதி என்ன?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன