கோவிந்த கிருஷ்ண – செயற்பாடு - Sri Sathya Sai Balvikas

கோவிந்த கிருஷ்ண – செயற்பாடு

Print Friendly, PDF & Email
கைவினைச் செயல்: பழைய செய்தித்தாளைக்கொண்டு கிருஷ்ணனின் புல்லாங்குழல் செய்தல்

தேவையான பொருட்கள்
  • பத்து பழையசெய்தித்தாள்கள்.
  • லைனிங் துணி/பேப்பர்.
  • தங்க நிற நூல்.
  • ஊசி, நூல் மணிகள்.
  • தெர்மோகோல் அல்லது காகித மணிகள்.
  • ரூலர், பென்சில், ஒட்டும் பசை.
செய்முறை:
  1. 5 செய்தித்தாள்களை எடுத்து ஒன்றன்மேல் ஒன்றாக வைக்கவும்.
  2. நடுவில் மடித்து வெளிப்புறத்திலிருந்து உட்புறமாக சுருட்டவும்.
  3. பசை தடவி ஒட்டவும்.
  4. புல்லாங்குழல் 36 செண்டிமீட்டர் நீளமுள்ளது. இதில் 8 செ.மீ, 11 செ.மீ, 14 செ.மீ, 18 செ.மீ தூரத்தில், ரூலரைக்கொண்டு பென்சிலால் வட்டம் வரைந்துக் கொள்ளவும்.
  5. ஒரு கத்தியை எடுத்து (பெரியவர்களின் மேற்பார்வையில்) வட்டங்களை மெதுவாக வெட்டவும். முழுதாக வெட்ட வேண்டாம். பின் பக்கம் வெட்ட வேண்டாம்.
  6. ஒரு பென்சிலைகொண்டு, துளைகளை பெரிதாக்கவும்.
  7. ஒர் மெல்லிய துணியை எடுத்துக்கொள்ளவும்.

புல்லாங்குழலைப் போலவே அளந்து வட்டங்கள் கத்தரித்து புல்லாங்குழல் மேல் ஒட்டவும்.

  • குஞ்சங்கள் தயாரிக்க, சிறிய தெர்மோகோல் பந்துகளை ஊசியில் கோர்த்து, பின்னர் மெல்லிய துணியை ஒட்டவும். பின்னர், மணிகளை கோர்க்கவும்.
  • லைனிங் துணி அல்லது லேஸ் எடுத்து, புல்லாங்குழலின் ஓரத்திலும் மத்தியிலும் ஒட்டவும்.
  • குஞ்சத்தின் நூலை லேஸ் மீது ஒட்டி அதனை புல்லாங்குழலின் மறு முனையில் ஒட்டவும்.
  • இப்போது தங்க நிற நூலை எடுத்து வட்டங்களை சுற்றி ஒட்டவும்.
  • புல்லாங்குழல் தயார்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: