யூத மதம்
யூத மதம்
யூத மதம், கிறித்தவ மதம், இஸ்லாம் மதம் ஆகிய மூன்று மதங்களும் செமிடிக் மதங்களாகும். நோவாவின் புதல்வர் ஷெம் என்பவரின் வழித்தோன்றியவர்கள் செமிடிக் மக்கள் ஆவார்கள். யூத மதத்தைக் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் தாய் என்று கூறலாம்.
ஞானியும் தீர்க்கதரிசியுமான மோசஸ் யூதர்களுக்கு 10 கட்டளைகளை ஜெஹோவா (யூதர்களின் கடவுள்)விடமிருந்து பெற்றுத் தந்தார். நாளடைவில் யூதர்கள் இறைவனுடைய கட்டளைகளின் சாரத்தை மறந்து சடங்குகளில் மட்டும் ஆர்வம் காட்டலாயினர். ஏசு கிறிஸ்து இந்த சமயத்தில் அவதரித்து மனத்தூய்மையே மதத்தின் முக்கிய நோக்கம் என்பதையும்,வாழ்க்கை தூய அன்பை அடிப்படையாகக் கொண்டதாக அமைய வேண்டும் என்றும் போதித்தார். அவர் மக்களுக்காக தன் உயிரையும் தியாகம் செய்தார்.
மோஸஸ் யூதமக்களுக்கு போதித்த நல்ல கருத்துக்களை நினைவூட்டி மீண்டும் யூத மதத்தை நன்கு நிலைநாட்டவே ஏசு முயற்சித்தார். ஆனால் நாளடைவில் அவரது போதனைகள் தனியொரு மதமாக உருவெடுத்தன. அந்த புதிய மதமே, கிறிஸ்தவ மதம். இது உலகத்திலுள்ள மிக முக்கியமான மதங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
இதைப்போலவே ஏழாம் நூற்றாண்டில் அரேபிய மக்களை திருத்தி அவர்களது இறைநம்பிக்கையை செம்மைப் படுத்தவே முகமது நபி தோன்றினார். அவர் இறைவனிடம் பூரண சரணாகதி செய்யவேண்டும் என்று போதித்தார். கிறிஸ்தவ மதத்தை நிறைவு செய்து பூரணமாக்கவே அவர் முயன்றார். ஆனால் அவரது போதனைகள் இஸ்லாம் என்ற தனி மதமாக உருவாகின. இந்த மூன்று மதங்களுமே, எல்லாரும் இறைவனின் குழந்தைகள் என்பதையும், உலகமக்கள் யாவரும் சகோதரர்கள் என்பதையுமே வ-யுறுத்தின.
புனித நூல்
யூதர்களின் வேதநூல் பைபிள் – பழைய ஏற்பாடு (ஞப்க் பங்ள்ற்ஹம்ங்ய்ற்) ஆகும். இது ஆதிமனிதனையும், அவனுடைய வழித் தோன்றல்களையும் பற்றிய கதையுடன் ஆரம்பிக்கிறது. யூதர்களின் வேதநூல் மனிதர்களிடையேயான சமத்துவத்தையே மிக முக்கியமாக போதிக்கிறது. யூதர்கள் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கவிதிகள் தொகுக்கப்பட்டு டோரா (பர்ழ்ஹட்) என்ற வேதநூல் உருவாக்கப்பட்டது.
பத்து கட்டளைகள்
கடவுள் ஒருவரே. அவரே இவ்வுலகத்தைப் படைத்தார். தர்மத்திற்கு அவரே தோற்றுவாய். பத்து கட்டளைகளைக் கடவுள் மோசஸýக்கு வெளிப்படுத்தினார். அவை பின்வருமாறு :
- நானே இறைவன். உங்களை அடிமை கொண்ட எகிப்திய நாட்டி-ருந்து விடுவித்தவன்.
- வேறு எந்தக் கடவுளை வணங்குவதும் உருவ வழிபாடும் தவறானதாகும்.
- இறைவனின்மேல் அன்பு கொண்டவர்களிடம் கருணை காட்ட வேண்டும்.
- ஆண்டவனது கட்டளைகளுக்குக் கீழ்படிய வேண்டும்.
- வாரத்தின் முதல் ஆறு நாட்கள் நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். ஏழாம் நாள் இறைவனுக்குரிய புனித நாளாகும். அன்று ஓய்வு நாளாகும்.
- உங்களது தாய் தந்தையரைப் போற்றுங்கள். இந்த கட்டளைக்குக் கீழ்படிவதால் நீங்கள் நீண்ட ஆயுளைப் பெறுவீர்கள்.
- உயிர்களைக் கொல்வது கூடாது
- எவரையும் ஏமாற்றக் கூடாது
- திருடக் கூடாது
- பொய்சாட்சி சொல்லக்கூடாது. பிறர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது.
மோசஸ் யூதர்களுக்கு இந்தக் கட்டளைகளைப் போதித்து ஆன்மீக மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். யூதர்களை ஒற்றுமைப்படுத்தினார். மோசஸின் தலைமையில் யூதர்கள் செங்கடலைக் (தங்க் நங்ஹ) கடந்து இஸ்ரேலை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது மோசஸ் காலமானார். அவரது சீடர் ஜோஷுவா அவர்களை தாய்நாடான இஸ்ரேலுக்கு அழைத்துச் சென்றார்.
யூதர்களின் நம்பிக்கைகள்
- தங்களை பாவங்களி-ருந்து காத்து இறைவழி நடத்திச் செல்ல மெசையா (ஙங்ள்ள்ண்ஹட்) என்கிற தெய்வீக வழிகாட்டி வருவார் என்ற நம்பிக்கை.
- யூதர்கள் இறைவனுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்ட, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் (ஸ்ரீட்ர்ள்ங்ய் ல்ங்ர்ல்ப்ங்) என்கிற நம்பிக்கை.
- டோராவின் விதிகள் – கடவுள் மிக கண்டிப்பான நீதிமான் என்றும் அவரது விதிகளை மீறுபவர்கள் தண்டனை பெறுவார்கள் என்றும் நம்பிக்கை.
யூதர்கள் உருவ வழிபாடு செய்வதில்லை. எல்லாவற்றுக்கும் மேம்பட்டவர் கடவுள் என்பதால் அழியக் கூடிய பொருள்களால் அவருக்கு உருவம் செய்து வழிபடக் கூடாது என்பது அவர்கள் கருத்து. யூதர்களுக்கு இடப்பட்டுள்ள மிக முக்கிய கட்டளைகள் :
- உன்னை அடுத்து வாழ்பவனை நேசி
- உன்னுடைய சகோதரர்களிடம் சிறிதும் வெறுப்பு உன் மனதில் தோன்றாமல் இருக்கட்டும்.