மங்களம் குருதேவாய

Print Friendly, PDF & Email
மங்களம் குருதேவாய
கேட்பொலி
வரிகள்
  • மங்களம் குருதேவாய மங்களம் ஞானதாயினே
  • மங்களம் பர்த்திவாஸாய மங்களம் ஸத்யஸாயினே
விளக்கவுரை

அஞ்ஞானத்தை போக்கும் குருதேவருக்கு மங்களமுண்டாகட்டும். புட்டபர்த்தியில் வசிப்பவருக்கு மங்களம் உண்டாகட்டும். ஞானத்தை நல்குபவருக்கு மங்களமுண்டாகட்டும். ஸத்ய ஸாயிநாதனுக்கு மங்களமுண்டாகட்டும்.

பதவுரை
குரு அஞ்ஞானத்தைப் போக்குபவர், அறியாமையைப் போக்குபவர், குரு-குணங்களைக் கடந்து ரூபமற்ற நிலையில் இருப்பவர். கு-குணாதீதன், ரு-ரூபவர்ஜிதன்
திவ் ஒளிர்தல்
தேவ ஒளியுடையவன்
குருதேவாய குருதேவருக்கு
தா கொடுத்தல்
தாயினே கொடுப்பவருக்கு
பர்த்திவாஸாய புட்டபர்த்தியில் வசிப்பவருக்கு
வாஸி வசிப்பவருக்கு
ஸத்ய ஸாயினே ஸத்யஸாயிக்கு
மங்களம் மங்களம் உண்டாகட்டும்
மங்களம் குருதேவாய
விழிப்புரை :

அஞ்ஞானத்தைப் போக்கும் குருதேவருக்கு மங்களம் உண்டாகட்டும். புட்டபர்த்தியில் வசிப்பவருக்கு மங்களம் உண்டாகட்டும். ஞானத்தை நல்குபவருக்கு மங்களம் உண்டாகட்டும். ஸத்ய ஸாயி நாதனுக்கு மங்களம் உண்டாகட்டும். பாபா, குருவாய் இருந்து மேலான அறிவையும், புத்தி கூர்மையும் தந்து நமக்கு ஸத் சித் ஆனந்தமாக இருக்கிறார். இந்தக் கடைசி வரியை அழகும் நல்லோசையும் பெற்ற ஒரு மந்திரமாக எடுத்துக் கொள்ளலாம். ஜோதி ரூபமாக இருப்பவர்க்குக் கோடி வந்தனங்கள்.

கதை :

பாபாவிற்கு ஒன்பது வயது. அந்தச் சிறிய கிராமத்தில் (புட்டபர்த்தி) சிலர் ஹிட்லர் மீசையோடும் மேற்கத்திய உடையோடும் சுற்றித் திரிந்தனர். மங்களமில்லாத காரியங்களையும் செய்தனர். இந்தச் சிறு வயதிலயே பாபா அவர்களைக் கண்டித்தும் கிண்டல் செய்தும் பாடல்களும் கவிதைகளும் எழுதினார். சோம்பேறிச் செல்வந்தர்கள் நடத்திய ஆடம்பரவாழ்க்கையைக் கண்டித்தும் பாட்டு எழுதினார். அவர்களுடைய வேலைக்காரர்களோ, கொளுத்தும் வெயிலில் கடுமையாக உழைத்தார்கள். உண்மையான, ஆனால் குறும்பாக எழுதப்பட்ட அந்தக் கவிதையின் ஆசிரியர் யார்? என்று தேடினார்கள். மேலும் ஜாதிக் கொடுமையைக் கண்டித்தும் சத்யா பாட்டு எழுதினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன